தற்கொலைக்கு முயன்றவரை காத்தருளிய சாய்பாபா!!

கோபால் நாராயன் அம்பேத்கர், சாய்பாபாவின் பக்தர். புனேயைச் சேர்ந்த இவர் நல்ல வசதியானவர். ஆனால் , திடீரென்று ஏழ்மை அவரை சிக்கென்று பிடித்து அரவணைத்துக் கொண்டது. ஏழு வருட காலம் ஆயிற்று அதிலிருந்து அவரால் மீளவே முடியவில்லை. எத்தனையோ கஷ்டம்!

தற்கொலைக்கு முயன்றவரை காத்தருளிய சாய்பாபா!!
X

கோபால் நாராயன் அம்பேத்கர், சாய்பாபாவின் பக்தர். புனேயைச் சேர்ந்த இவர் நல்ல வசதியானவர். ஆனால் , திடீரென்று ஏழ்மை அவரை சிக்கென்று பிடித்து அரவணைத்துக் கொண்டது. ஏழு வருட காலம் ஆயிற்று அதிலிருந்து அவரால் மீளவே முடியவில்லை. எத்தனையோ கஷ்டம்!

ஒரு கட்டத்தில் இதற்கு மேலும் துன்பத்தை அனுபவிக்கவே முடியாது என்ற சூழல் உருவாகிவிட்டது. இதற்கு என்னதான் வழி? யோசித்தார். தற்கொலை செய்து உயிரை மாய்த்துக் கொள்வதைத் தவிர வேறு எதுவும் அவருக்குத் தோன்றவில்லை. ஷீரடிக்குச் சென்று சாய்பாபாவைத் தரிசனம் செய்து விட்டு, தனது குடும்பத்துடன் அங்கேயே தற்கொலை செய்து கொள்வது என்று தீர்மானித்தார். அப்படியே அங்கும் சென்றார். சாய்பாபாவைத் தரிசனம் செய்தார். தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. அப்படியே இரண்டு மாத காலமும் ஓடிப்போயிற்று.

ஒரு நாள் இரவு. தீட்சித் வீட்டின் கிணற்றில் விழுந்து உயிரை மாய்த்துக் கொள்வது என்ற உறுதி பிறந்தது. அங்கே சென்றார். அப்போது, அந்த வீட்டின் அருகாமையில் இருந்த சிறிய ஹோட்டல் ஒன்றின் சொந்தக்காரனான சாகுன் என்பவன் அம்பேத்கரிடம் வந்தான். அவன் கையில் ஒரு புத்தகம்.

சம்பந்தமே இல்லாமல் அவரிடம், "இந்தப் புத்தகத்தை வாசித்திருக்கிறீர்களா?" என்று கேட்டான். "இல்லை"என்றார். அம்பேத்கர். " படித்துப் பாருங்கள் " என்று சொல்லி, அந்தப் புத்தகத்தை அவரிடமே கொடுத்துவிட்டு அகன்றான். அவருக்கு ஒன்றும் புரியவில்லை. திடீரென்று சாகுன் அவரிடம் வந்து இந்தப் புத்தகத்தை ஏன் தரவேண்டும்?

குழப்பமாக இருந்தது. இருப்பினும் அதனை வாசித்துப் பார்ப்பது நல்லது என்று தோன்றியது. உயிரை விடுவதற்கு முன்பு படிக்க எண்ணி, அதன் பக்கங்களைப் புரட்டினார்.

அது ஒருவனின் கதை. அவன் மனப்பாரத்துடன் தற்கொலை செய்ய நினைக்கிறான். ஒரு பாழும் கிணற்றைத் தேர்ந்தெடுத்து, அதனுள் விழுந்துவிட்டான். அப்போது அங்கே அந்த நாட்டின் மகாராஜா வருகிறார். அவனை மீட்டு அறிவுரை வழங்குகிறார். "எல்லாவற்றிற்கும் காரணம் உன் பூர்வ ஜென்ம பலனே ஆகும். உனக்கென்று விதிக்கப்பட்டதை, அது நல்லதோ , கெட்டதோ, நீ அடைந்தே ஆக வேண்டும். அதிலிருந்து தப்பிப்பதாக எண்ணி, பாதியிலேயே உனது உயிரை மாய்த்துக் கொண்டாலும், அது உன்னை விடாது. அடுத்த ஜென்மத்தை உனக்குக் கொடுக்கும். அதிலும் துரத்தித் தாக்கும். ஆக,தற்கொலை செய்வதற்குப் பதிலாக, கஷ்டங்களைத் தாங்கிக் கொள்ளப் பழகுவதே நல்லது. அப்போது தான் உனது பூர்வ ஜென்ம பலன்கள் இந்தப் பிறவிலேயே உன்னை விட்டு நீங்கும். அப்போது தான் மறுபிறப்பு என்ற இம்சையில் இருந்து நீ முழுமையாக விலக முடியும்".

இந்த அறிவுரை அந்தக் கதையில் வந்தவனுக்கு அல்ல,தனக்கே என்பதைப் புரிந்து கொண்ட அம்பேத்கர், அப்படியே அரண்டு போனார். தற்கொலை செய்யப் போகும் தருணத்தில் இதனை வாசிக்கச் செய்தது தான் போற்றி வணங்கும் சாய்பாபா தான் என்பதை உணர்ந்தார். பூரித்துப் போனார்.

Newstm.in

newstm.in

Tags:
Next Story
Share it