மல்யுத்தத்தில் ஈடுபாடு கொண்ட சாய்பாபா: பாகம் 4

சாய்பாபாவிற்கு மல்யுத்தத்தில் ஈடுபாடு அதிகம். மல்யுத்த வீரன் போன்ற தோற்றம் தனக்கு வேண்டும் என்ற விருப்பம் அவருக்கு உண்டு. தலைமுடியை நீளமாக வளர்த்துக் கொள்வார். அதனை ஒழுங்குபடுத்துவதும் கிடையாது. உடைகள் கூட மல்யுத்தம் செய்யும் வீரனைப் போலவே அணிந்துகொள்வார்.

மல்யுத்தத்தில் ஈடுபாடு கொண்ட சாய்பாபா: பாகம் 4
X

சாய்பாபாவிற்கு மல்யுத்தத்தில் ஈடுபாடு அதிகம். மல்யுத்த வீரன் போன்ற தோற்றம் தனக்கு வேண்டும் என்ற விருப்பம் அவருக்கு உண்டு. தலைமுடியை நீளமாக வளர்த்துக் கொள்வார். அதனை ஒழுங்குபடுத்துவதும் கிடையாது. உடைகள் கூட மல்யுத்தம் செய்யும் வீரனைப் போலவே அணிந்துகொள்வார். இது போன்ற தருணத்தில், மொகித்தின் தாம்போலி என்றொரு மல்யுத்த வீரனை அவர் சந்திக்க நேர்ந்தது. அவரது மல்யுத்த ஆவலும் அதிகரித்தது. அந்த வீரனிடம் மல்யுத்தத்தைப் பற்றி விரிவாகப் பேசினார்.

மல்யுத்தத்தில் தான் மிகப்பெரும் திறமை படைத்தவன் என்று அந்த வீரனிடம் உற்சாகமாகப் பேசினார். அவனோடு மல்யுத்தம் செய்யவும் விரும்பினார். காரணம், அதில் கண்டிப்பாகத் தான் வெற்றி அடைய முடியும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை அவருக்கு இருந்தது. அந்த வீரனும் ஆரம்பத்தில் இந்த விபரித விளையாட்டு தேவையில்லை என்பது போலவே ஒதுங்கினான்.
ஆனாலும் சாய்பாபாவின் வற்புறுத்தல் அதிகமாகவே, மல்யுத்தம் செய்வதற்கு அவனும் இணங்கினான். ஆயிற்று. இருவரும் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் முகமாக கொடூரமாக மோதிக் கொண்டனர்.

ஆனாலும் சாய்பாபாவால் அந்த மல்யுத்த வீரனை வெற்றிகொள்ள முடியவில்லை. எப்படியும் வெற்றி நிச்சயம் என்ற உறுதியுடன் தான் இந்த மல்யுத்தத்தில் அவர் ஈடுபட்டார். அதன்காரணமாக, இந்தத் தோல்வியைப் பாபாவால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. விளையாட்டில் தோல்வி என்பது சகஜம்தான் என்றபோதிலும், இளவயதிற்கே உரிய வேகம் அவரிடமும் இருந்தது. இனிமேல் மல்யுத்தத்தை நினைத்துக் கூட பார்க்கப் போவதில்லை என்று சபதம் மேற்கொண்டார். தன் உடை மற்றும் வாழ்க்கை முறையையே அந்த வினாடி முதல் மாற்றிக் கொள்வது என்றும் முடிவெடுத்தார்.

மல்யுத்த வீரனைப் போன்ற தனது உடைகளைக் களைந்தெறிந்தார். நீண்ட கம்பளி உடைக்கு மாறினார். இடுப்புப் பட்டை ஒன்றைக்
கட்டிக்கொண்டார். தலையில் துண்டுத் துணியைக் கட்டினார். அழுக்கு மற்றும் கந்தலாக உள்ள துணிகளை விரும்பி அணியத் தொடங்கினார். ஏழைகளின் நிரந்தர நண்பனாகவே அதுமுதல் சாய்பாபா மாறிவிட்டார் என்றால் அது மிகையே அல்ல.

மல்யுத்தத்தில் ஈடுபாடு கொண்ட சாய்பாபா: பாகம் 4
வி. ராமசுந்தரம்
ஆன்மீக எழுத்தாளர்
EMAIL: venkatraman.ramasundaram@gmail.com

newstm.in

Next Story
Share it