Logo

சாய்பாபா அருள் கிடைக்க என்ன செய்ய வேண்டும் !!

 | 

சாய்பாபாவின் நாமத்தை மனதார வேண்டிக் கொண்டு , விரதத்தை எந்த ஒரு வியாழக்கிழமை ஆனாலும் அன்றில் இருந்தே ஆரம்பிக்கலாம். மாலை அல்லது காலையில் சாய்பாபாவின் போட்டோவிற்கு அல்லது விக்ரகத்திற்கு பூஜை செய்ய வேண்டும்.

விரதத்தின் போது செய்ய வேண்டிய வழிமுறைகள் ; இந்த விரதத்தை திரவ ஆகாரங்கள் உட்கொண்டு அதாவது பால் , டீ , காப்பி பழங்கள் , இனிப்புகள் போன்றவற்றை உட்கொண்டு செய்யலாம் அப்படி நாள் முழுவதும் செய்ய முடியாதவர்கள் ஏதாவது ஒரு வேளை மதியமோ அல்லது இரவு உணவு அருந்திக் கொள்ளலாம்.

நாள் முழுவதும் பட்டினியாக இருந்து மட்டும் இந்த விரதத்தை செய்யவே கூடாது. ஒரு தூய ஆசனத்தில் அல்லது பலகையில் மஞ்சள் நிறத் துணியை விரித்து சாய் பாபா படத்தை வைத்துதூய நீரால் துடைத்து சந்தனம் குங்குமம் வைத்து திலகம் இட வேண்டும்.

மஞ்சள் நிற மலர்கள் கிடைத்தால் அதை மாலையாக கோர்த்து சாய் பாபா படத்திற்கு அல்லது விக்ரகத்திற்கு அணிவித்து தீபம் ஊதுபத்தி ஏற்றி பிரசாதமான பழங்கள் இனிப்புகள் கற்கண்டு இதில் எதுவாயினும் சரி நெய்வேத்தியம் செய்து படைத்து சாய்பாபாவை வணங்க வேண்டும் முடிந்தால் சாயிபாபாவின் கோவிலுக்குச் செல்லலாம்.

வீட்டிலேயே சாயிபாபாவுக்கு 9 வாரங்கள் பூஜை செய்தபின் இவ்விரதம் நிறைவு பெறுகிறது. விரதத்தின் 9 வாரங்களில் பெண்களுக்கு மாத விலக்கு அல்லது மற்ற பிற காரணங்களாலே விரதம் செய்ய முடியவில்லை என்றால் அதில் எந்த தவறும் இல்லை விரதமிருந்தால் 9 வியாழக்கிழமைகள் நிறைவு செய்ய முடியும்.

9 வது வியாழக்கிழமை 5 ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும் நேராக உணவளிக்க முடியாதவர்கள் யார் மூலமாகவும் பணமாகவோ பொருளாகவோ கொடுத்து உதவி செய்வதை சாய்பாபா முழுமனதுடன் ஏற்றுக் கொள்வார். சாய் பாபாவின் மகிமை மற்றும் விரதத்தை தொடர்ந்து கடைபிடிப்பவர்களுக்கு எல்லா நலமும் வளமும் கிடைக்கும்.

Newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP