மனித பிறப்புக்கு சாய்பாபா கொடுத்த விளக்கம்!!

ஒரு நாள் தனது லெண்டி தோட்டத்தில் சாய்பாபா நின்று கொண்டிருந்தார். ஒருவன் கடுங்கோபத்தில் இன்னொருவனை திட்டிக் கொண்டிருந்தான். அப்போது சாய்பாபா அங்கே நிற்பதை கூட அறியாமல், அவன் வாயிலிருந்து தவறான வார்த்தைகள் தங்குதடையின்றி வெளியே விழுந்துக் கொண்டிருந்தன.

மனித பிறப்புக்கு  சாய்பாபா கொடுத்த விளக்கம்!!
X

ஒரு நாள் தனது லெண்டி தோட்டத்தில் சாய்பாபா நின்று கொண்டிருந்தார். ஒருவன் கடுங்கோபத்தில் இன்னொருவனை திட்டிக் கொண்டிருந்தான். அப்போது சாய்பாபா அங்கே நிற்பதை கூட அறியாமல், அவன் வாயிலிருந்து தவறான வார்த்தைகள் தங்குதடையின்றி வெளியே விழுந்துக் கொண்டிருந்தன. இதனை பார்த்த சாய்பாபா அவனை அழைத்தார்.

அங்கு மனித கழிவை சுவைத்துத் தின்று கொண்டிருந்த பன்றி ஒன்றினை அவனிடம் காண்பித்தார். "அது என்ன செய்கிறது என்று பார்த்தாயா? என்று கேட்டார் சாய்பாபா. " மனித மலத்தைத் தின்கிறது" என்றான் அவன்.
"நம்முடைய மலம் நமக்கு அருவருப்பைத் தருகிறது. ஆனால் பன்றிக்கு அது சுவையாக இருக்கிறது என்றார் சாய்பாபா.

மனித பிறப்புக்கு  சாய்பாபா கொடுத்த விளக்கம்!!

பார்த்தாயா இதில் உள்ள வேற்றுமையை. ஆனால், இதனைப் புரிந்து கொள்ளாமல் மற்றொருவனைக் கண்டபடி திட்டுகிறாய் என்றார். ஒரு மனிதன், தனது சகோதரனை, தன் உறவினரை, தன் சிநேகிதனை சினம் கொண்டு பகை கொள்கிறான். ஒருவன் எவ்வளவோ நற்பயன்கள் செய்த காரணத்தால் தான், அவன் மனிதப் பிறவியை அடைகிறான். அப்படிப்பட்டவன், ஷீரடிக்கு வந்தும் திருந்தாமல் இருந்தால் எப்படி?” என்று கேட்டார். அவன் வெட்கித் தலைகுனிந்தான்.

- டாக்டர். வி. ராமசுந்தரம்
ஆன்மிக எழுத்தாளர்

newstm.in

Tags:
Next Story
Share it