பக்தர் துயரைத் தம் துயராக மாற்றிய சாய்பாபா !!

பக்தர் துயரைத் தம் துயராக மாற்றிய சாய்பாபா !!

பக்தர் துயரைத் தம் துயராக மாற்றிய சாய்பாபா !!
X

மோரேஷ்வர் விஸ்வநாத் பிரதான் என்பவர் மும்பையில் புகழ்பெற்ற வழக்கறிஞர், சாயி பக்தர். அவருக்கு ஒரு மகன், பாபு என்று பெயர். சாய்பாபாக்குப் பிரியமானவன். அவன் இறந்து போனான். பிரதானும் அவர் மனைவியும் ஷீரடீ வந்து வந்து, சாய்பாபாவின் காலடியில் விழுந்து கதறினர். "அவள்தான் பாபுவின் அம்மா, என்று கூறியபடி, சாய்பாபா அவர்களை ஆசீர்வாத்தார்.
மும்பை திரும்பிச் சென்றபின், பிரதானின் மனைவி கருவுற்றார். பிரசவ காலம். பிரதானின் மனைவி வலியால் துடித்தாள். "ஐயோ" என்று அலறாமல் "சாய்பாபா" என்று அலறினாள்.

இங்கே ஷீர்டியில் சாயிபாபா, தம் வயிற்றைப் பற்றிக் கொண்டார். பிரதானின் மனைவிக்குப் பிரசவ நேரம் என்றும் அதனால், தமக்கு வலி ஏற்பட்டிருப்பதாகும் கூறினார்.

பிரதானின் மனைவிக்கு இரட்டைக் குழந்தைகள் பிறக்கும் என்றும், அதில் ஒரு குழந்தை இறந்து, மற்றொன்று நலமுடன் இருக்கும் என்றும் கூறினார். சாய்பாபா தன் வயிற்றில் வலியை உணர்ந்த நேரம், பிரதானின் மனைவிக்கு வலி குறைந்தது. பிரசவத்தில் ஏற்பட்டிருந்த சிக்கல் விலகி, இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. சாய்பாபா சொன்னபடியே ஒன்று இறந்தது. மற்றொன்று பிழைத்தது. ஒரு குழந்தை இறந்துவிட்ட துயரம் பிரதான் தம்பதியைத் தாக்கினாலும் சாய்பாபா அவர்களுக்கு மீண்டும் பாபுவை அளித்து விட்டார் என்று குழந்தையுடன் ஷீர்டி வந்தனர். சாய்பாபாவைத் தரிசித்தனர்.

இரண்டு மாதமே ஆன அந்தக் குழந்தையை மடியில் வைத்துக் கொண்ட சாய்பாபா, "கண்ணா.... நீ இங்கேயே வந்து விடுகிறாயா?" என்று கேட்டார்.
அப்போது ஓர் அற்புதம் நிகழ்ந்தது. பிறந்து இரண்டே மிதமான அந்தக் குழந்தை வாய் திறந்து, மிகத் தெளிவாக 'ஆம்' என்று பதில் கூறியது! குழந்தையின் பெற்றோர் திகைத்தனர்.

பிறந்த குழந்தையையும் பேச வைத்த ஷீரடி சாய்பாபாவின் மகத்துவத்தை என்ன வென்று சொல்வது!.

"நான் உங்களுடனேயே இருக்கிறேன். உங்கள் இதயமே என் இருப்பிடம்."
-ஷீரடி சாய்பாபா

ஆன்மீக எழுத்தாளர்
Dr.V.ராமசுந்தரம்.

Next Story
Share it