சாய் பாபா கதைகள் !!

சாய் பாபா கதைகள் !!

சாய் பாபா கதைகள் !!
X

பூனாவை சேர்ந்த புகழ்பெற்ற வர்க்காரி விஷ்ணுபுவா ஜோக் என்பவரின் மாமா ஸகாராம் ஹரி என்ற பாபுஸாஹேப் ஜோக்  ஆவார். அவர் P.W.டிபார்ட்மெண்டில் சூபர்வைசர் அரசாங்க  உத்தியோகத்திலிருந்து 1909இல் ஒய்வு பெற்றதும், தமது மனைவியுடன் அவர் ஷீரடிக்கு வந்து வசித்தார். அவருக்கு குழந்தைகள் இல்லை. கணவனும், மனைவியும் சாய்பாபா வை நேசித்தனர். சாய்பாபாவை வழிப்படுவதிலும், அவருக்கு சேவை செய்வதிலும், அவர்கள் தங்கள் முழு நேரத்தையும் செலவிட்டனர்.

மசூதியிலும், சாவடிலும், சாய்பாபாவின் மஹாசமாதி வரை ஜோக் ஆரத்தி எடுத்தார். ஸாடே வடிவில் ஞானச்வரியையும், ஏகநாத பாகவதத்தையும் மக்களுக்கும்ப் படித்து விவரிக்கும் வேலையும் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஜோக் பல ஆண்டுகள் சாய்பாபாவற்குணயச் சேவை செய்த பின்னர், அவர் சாய்பாபாவை, நோக்கி, "நான் இத்தனை காலம் தங்களுக்கு சேவை செய்தேன். எனது மனம் இன்னும் அமைதியும், சாந்தியும் அடையவில்லை. ஞானிகளுடன் எனக்கு உண்டான தொடர்பு எங்ஙனம் என்னை முன்னேற்றாமல் இருக்கிறது? எப்போதும் என்னை முன்னேற்றாமல் இருக்கிறது? எப்போது என்னைத் தாங்கள் ஆசீர்வதிப்பீர்கள்?." என்று கேட்டார்.

பக்தர் வேண்டுதலை செவிக்கொடுத்த சாய்பாபா, "உரிய காலத்தில் உனது தீவினைகள் (அவைகளின் விளைவும், பயனும்) அழிக்கப்பட்டுவிடும். உனது நன்மை, தீமையாவும் சாம்பலாக்கப்படும். எல்லாப் பற்றுகளையும் துறந்து. அடங்காச் சிற்றின்ப அவாவையும், சுவை உணர்வையும் ஜெயித்து எல்லா த் தடைகளையும் ஒழித்து விட்டு முழுமனதுடன் கடவுலுக்கே சேவை செய்து சந்நியாசம் அடைகின்றாயோ அன்றே நான் உன்னை புனிதமடைந்தவனாக நினைப்பேன்" என்றார். சில நாட்களுக்குப் பின் சாய்பாபாவின் மொழிகள் உண்மை ஆயின. அவரது மனைவி அவருக்கு முன்பாக இயற்கை எய்தினார். வேறு பற்றொன்றும் அவருக்கு இல்லை. அவர் சுதந்திரம் ஆனார். இறப்பதற்கு முன் சந்நியாசம் ஏற்றார். வாழ்க்கையின் லட்சியத்தை எய்தினார்.

டாக்டர் வி.ராம்சுந்தரம்
ஆன்மீக எழுத்தாளர்

Next Story
Share it