ராமனாக காட்சி அளித்த சாய்பாபா..! நெகிழ்ந்த பக்தர்கள்!!

மண்மாடு என்னும் ஊரில் கிறிஸ்துவர் ஒருவர் இருந்தார். அவரைக் காண நண்பர் ஒருவர் தென் ஆப்பிரிக்காவில் இருந்து வந்திருந்தார். அவன் தென் ஆப்பிரிக்காவில் புகழ்பெற்ற டாக்டராக இருந்தவர். அவரை அவருடைய நண்பர், சீரடியில் உள்ள மகான் சாய்பாபாவை தரிசித்து வரலாம் என்று உடன் அழைத்தார்.

ராமனாக காட்சி அளித்த சாய்பாபா..! நெகிழ்ந்த பக்தர்கள்!!
X

மண்மாடு என்னும் ஊரில் கிறிஸ்துவர் ஒருவர் இருந்தார். அவரைக் காண நண்பர் ஒருவர் தென் ஆப்பிரிக்காவில் இருந்து வந்திருந்தார். அவன் தென் ஆப்பிரிக்காவில் புகழ்பெற்ற டாக்டராக இருந்தவர். அவரை அவருடைய நண்பர், சீரடியில் உள்ள மகான் சாய்பாபாவை தரிசித்து வரலாம் என்று உடன் அழைத்தார்.

அந்த டாக்டர் தீவிரமான ராம பக்தர். ஆதலால், " நான் ராமனைத்தவிர எந்த தெய்வத்தையும் தரிசிப்பதில்லை. என்னால் சாய்பாபாவை தரிசிக்க வர இயலாது" என்று மறுத்தார். அந்த நண்பர் விடவில்லை. " எனக்காக தாங்கள் கட்டாயம் வர வேண்டும். என் காரிலேயே போகலாம். அங்கு உங்களுக்கு வர விருப்பமில்லை என்றால் காரிலேயே உட்கார்ந்திருங்கள். நான் மட்டும் மசூதியில் சென்று சாய்பாபாவை தரிசித்து விட்டு வந்துவிடுகிறேன். வழித்துணையாக மட்டும் என்னுடன் வந்தால் போதும்” என்றார். டாக்டரும் ஒப்புக்கொண்டு நண்பரின் காரிலேயே சீரடி வந்தார்.

சீரடி மசூதி வாயிலில் கார் வந்தவுடன் டாக்டரை காரில் உட்கார வைத்து விட்டு அந்த நண்பர் மட்டும் சாய்பாபாவை தரிசிக்க மசூதியினுள் சென்றார். கொஞ்சநேரம் சென்றதும் நண்பர் வருகிறாரா என அறிய, காரில் இருந்தபடியே மசூதியின் உள்ளே பார்த்த டாக்டருக்கு சாய்பாபா அங்கு இல்லாமல் அந்த இருக்கையில் ஸ்ரீராமன் காட்சி அளிப்பதை போல தெரிந்தது. சாய்பாபா உறையும் இடத்தில் ஸ்ரீராம்பிரான் எப்படி காட்சியளிக்க முடியும்? கண்களைக் கசக்கிக் கொண்டு மீண்டும் உற்று நோக்கினார் டாக்டர்.

இப்போது அதே ராமபிரான் தான் காட்சி அளித்தார். இக்காட்சியினைக் கண்ட டாக்டர், காரிலிருந்து இறங்கி நேராக ஓடிவந்து ராமபிரான் (சாய்பாபாவின்) காலடியில் விழுந்து வணங்கினார். அவருடைய நண்பருக்கு ஒன்றும் புரியவில்லை, டாக்டரை உற்று நோக்கினார். டாக்டரோ, " சாய்யே -ராமன், ராமனே-சாய்" என ஆனந்தக் கூத்தாடத் தொடங்கினர். மகானின் மாபெரும் சக்தியை என்னென்பது?

மேகாவுக்கு சிவனாக காட்சி அளித்த சாய்பாபா-ரேகேவுக்கு கிருஷ்ணனாக காட்சி அளித்த சாய்பாபா-ராமனைத் தவிர வேறு தெய்வத்தையே வணங்காத டாக்டருக்கு ஸ்ரீராமனாகக் காட்சி அளித்தார் என்றால் சாய்பாபாவின் பேரருளை அளவிட்டுக் கூறத்தான் முடியுமா?
ஓம் ஸ்ரீ சாய்ராம்

டாக்டர். வி. ராமசுந்தரம்
ஆன்மீக எழுத்தாளர்

newstm.in

Tags:
Next Story
Share it