சாய் பாபா திருவிளையாடல் !!

சாய் பாபா திருவிளையாடல் !!

சாய் பாபா திருவிளையாடல் !!
X

மும்பாயில் "காயஸ்தப் பிரபு" ஜாதியைச் சேர்ந்த  ஒரு பெண்மணி, பிரவசத்தின் போதெல்லாம் கடும் வேதனையடைந்தால். ஒவ்வொரு முறை தான் கர்ப்பமானதும் என்ன செய்வதென்று தெரியாமல் அவள் பீதியடைந்தாள். சாய்பாபா வின் ஒரு பக்தரான கல்யாணைச் சேர்ந்த ஸ்ரீ ராம மாருதி எனபார், சுகப்பிரசவத்துக்காக அவளை ஷீரடி அழைத்துச் செல்லும் படி அவளது கணவனுக்கு அறியுரைத்தார்.

மீண்டும் அவள் கருவுற்ற போது கணவனும் மனைவியும் ஷீரடிக்குச் சென்று அங்கு சில மாதங்கள் தங்கி சாய்பாபாவை வணங்கி அவர் தம் கூட்டுறவால், ஆய பலன்களையெல்லாம் அடைந்தனர் . சில நாட்களுக்குப்பின் பிரசவ நேரம் வந்தது. வழக்கம் போல் கருப்பையிலிருந்து வரும் வழியில் தடங்கல்  ஏற்பட்டது.  பிரசவ வேதனையை அவள் அனுபவித்தாள்.  என்ன செய்வதென்று அவளுக்கு தெரியவில்லை.

ஆனால், சாய்பாபாவை நோக்கி நிவாரணத்திற்குப் பிராத்தனை செய்தாள். இத்தருணத்தில் பக்கத்தில் குடிருந்த ஒரு பெண்மணி வந்து சேர்ந்தாள். சாய்பாபாவைத் தொழுது பிராத்தனை செய்தப்பின "உதி" க் கலவையை பருகுவதற்கு அவளிடம் கொடுத்தாள். ஐந்தே நிமிடங்களில் அப்பெண்  பாத்திரமாகவும் வலியேதுமின்றி, பிரசவித்தாள். பிறந்த குழந்தை அதன் தலைவிதிப் படி இறந்தே பிறந்தது. ஆனால், தாய் கவலையினுன்றும் வலியினின்றும் நீங்கியவளாய் பத்திரமான பிரசவத்துக்காக சாய்பாபாக்கு நன்றி செலுத்தி எப்போதும் அவர்பால் நன்றியுள்ளவராய் இருந்தாள்.

டாக்டர் வி. ராமசுந்தரம்  
ஆன்மீக எழுத்தாளர்.

Next Story
Share it