Logo

கிருஷ்ணன் கொடுத்த செல்வம் குசேலனுக்கு கொடுத்தது வருத்தமே...

கண்ட குறும்புக்கார கண்ணன் அதை அப்படியே வாங்கி பிரித்து ஒரு பிடி அவலை அள்ளி வாயில் போட்டார். சுதாமா வீடும் அவரது ஊரிலிருக்கும் அனைத்து வீடுகளும் மாளிகைகளாக மாறின.
 | 

கிருஷ்ணன் கொடுத்த செல்வம் குசேலனுக்கு கொடுத்தது வருத்தமே...

கிருஷ்ணர் சாந்தீபனி முனிவரிடம் கல்வி பயிலும் போது அவருக்கு சுதாமாவிடம் பழக்கம் உண்டானது. இவரை குசேலன் என்றும் அழைப்பார் கள். இருவரும் இணைந்தே இருக்குமளவு நெருக்கமானவர்கள். பிராமண குலத்தைச் சேர்ந்த குசேலன் வேதங்களைக் கற்றுக்கொண்டு அதன் மூலம் குடும்பத்தை நடத்திவந்தார்.வேதங்கள் படித்த பிராமணர்கள் பிறவேலைகளைச் செய்ய மாட்டார்கள்.

குசேலனின் மனைவி சுசீலை. அவருக்கு குழந்தை செல்வமும் அதிகம் என்பதால்  வருமானம் போதுமானதாக இருக்கவில்லை. ஆனாலும் அதைப் பற்றி கவலைப்படாமல் தன்னுடைய வாழ்வு முழுமையையும் கிருஷ்ணரிடம் ஒப்படைத்துவிட்டார். கிருஷ்ணர் நினைப்பது நடக்கட்டும் என்ற எண்ணத்தோடு வாழ்க்கையை நடத்தினார். ஆனால் இவர் மனதில் திடம் இருந்தாலும் குழந்தைகள் பசியால் வருந்தினார்கள். தொடர்ந்து வறுமை பீடிக்கவே சுசீலை பயந்தாள். அவளுக்கும் பணத்தின் மீது அக்கறை இல்லை. ஆனால் வறுமை பீடித்து கணவனையும் குழந்தைகளை யும் இழக்க அவள் விரும்பவில்லை.

கிருஷ்ணரைப் பார்த்து பண உதவி கேளுங்கள் என்று வற்புறுத்தி குசேலனை அனுப்பி வைத்தாள். பக்கத்து வீட்டுக்கு ஓடி சென்று அவலை ஒரு பிடி வாங்கி வந்து கிழிந்த துணியில் கட்டி கிருஷ்ணரைப் பார்க்கும் போது கொடுங்கள் என்று கொடுத்தாள். குசேலர் கிருஷ்ணனின் அரண்ம னையை அடைந்தார். குசேலருடன் அவரது ஊரைச் சேர்ந்த பிராமணர்கள் சிலரும் சென்றிருந்தார்கள்.

அரண்மனை வாயிலில் பல அரசர்கள் காத்துக்கிடந்தார்கள். ஆனால் பிராமணர்கள் வந்தால் அவர்களைக் காக்க வைக்காமல் உள்ளே அனுப்பும்படி கிருஷ்ணர் உத்தரவிட்டிருந்தார்.கிருஷ்ணர் ருக்மணி மடியில் தலைவைத்து, திருவடியை சத்யபாமா மடியின் மீது வைத்து படுத்திருந்தார். அரண் மனைக் காவலன் ஒருவன் வந்து கிருஷ்ணரிடம் பால்ய நண்பன் சுதாமா வந்திருக்கிறார் என்றதும் துள்ளியெழுந்த கிருஷ்ணர் குசேலனை வர வேற்க வாசல் வரை சென்றார்.

எப்படி இருக்கிறாய் சுதாமா? உன்னைப் பார்த்து எவ்வளவு நாட்கள் ஆகிவிட்டது. உன்னை காண என்ன தவம் செய்தேன் என்று உருகியபடி சுதாமை அணைத்தார்.அவரது அணைப்பிலேயே குசேலனின் வறுமை அழிந்து போனது. ஏனெனில் கிருஷ்ணரின் மார்பில் மகாலட்சுமி அல்லவா உறைந்திருக்கிறாள்.

சுதாமாவுடன் வந்தவர்களுக்கு விருந்துகள் பரிமாறப்பட்டன. சுதாமா, பிராமணர் என்பதால் அவருக்கு கிருஷ்ணர் பாதபூஜை செய்தார். எவ்வளவு தூரத்திலிருந்து வந்திருக்கிறாய் சுதாமா என்று அவர் கால்களைப் பிடித்துவிட்டார். பழைய குறும்புகளைப் பற்றி பேசி மகிழ்ந்தார்.அப்புறம் சுதாமா என் மன்னிக்கு என் மீது பாசம் அதிகமாயிற்றே எனக்கு என்ன கொடுத்திருக்கிறார் என்றார்.

கிருஷ்ணன் கொடுத்த செல்வம் குசேலனுக்கு கொடுத்தது வருத்தமே...

சுதாமா ஏற்கனவே அரண்மனை செல்வத்தைப் பார்த்து மிரண்டிருந்தார் அதனால் கையில் இருந்த கிழிந்த அங்கவஸ்திரத்தை மறைத்தார். அதைக்  கண்ட குறும்புக்கார கண்ணன் அதை அப்படியே வாங்கி  பிரித்து ஒரு பிடி அவலை அள்ளி வாயில் போட்டார். சுதாமா வீடும் அவரது ஊரிலிருக்கும் அனைத்து வீடுகளும் மாளிகைகளாக மாறின. செல்வத்தில் திளைத்த மக்கள் திகைத்தனர்.

ஆனால் இது எதையும் அறியாத சுதாமா கிருஷ்ணர் அவல் சாப்பிட்டதைக் கண்டு ஆனந்தத்தில் திளைத்தார். மீண்டும் ஒரு பிடி அவலை எடுத்து கிருஷ்ணர் வாயில் போட போது ருக்மிணி தடுத்துவிட்டாள். இறைபக்தியில் மூழ்கிய ஒருவன் அளவுக்கதிகமான செல்வத்தைக் கண்டால் பக் தியை மறந்து உலக இன்பங்களில் மூழ்கிவிடுவான் என்று நினைத்தாள்.

அவளது பார்வையில் புரிந்து கொண்ட கிருஷ்ணன் சுதாமாவிடம் அவல் வஸ்திரத்தை வாங்கியபடி அவருக்கு விடை கொடுத்தான். ஆனால் சுதாமா கிருஷ்ணனிடம் எதுவும் கேட்கவில்லை. கிருஷ்ணர் கொடுத்த செல்வத்தால் மனம் மகிழாத சுதாமா என்னும் குசேலன் மிகுந்த வருத்தத் துக்கு உள்ளானான். ஏன் என்பதை அடுத்த கட்டுரையில் பார்ப்போம். 

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP