உயிர்த்தெழுந்த சாய்பாபா.. பரவசத்தில் பக்தர்கள்!  

சாய்பாபா ஒரு நாள் தமது சீடர் மகல்சபதியுடன் பேசிக் கொண்டு இருந்தார். திடீரென்று, அப்போது மகல்சபதியிடம் நான் கடவுளைப் பார்த்து விட்டு வர வேண்டும் என்றார். நான் வரும் வரையில் எனது உடலை பத்திரமாக பாதுகாத்து வைத்திருங்கள் என்று கூறினார் சாய்பாபா

 உயிர்த்தெழுந்த சாய்பாபா.. பரவசத்தில் பக்தர்கள்!  
X

சாய்பாபா ஒரு நாள் தமது சீடர் மகல்சபதியுடன் பேசிக் கொண்டு இருந்தார். திடீரென்று, அப்போது மகல்சபதியிடம் நான் கடவுளைப் பார்த்து விட்டு வர வேண்டும் என்றார். நான் வரும் வரையில் எனது உடலை பத்திரமாக பாதுகாத்து வைத்திருங்கள் என்று கூறினார் சாய்பாபா. நான் போய்வர மூன்று நாட்களாகும். மூன்று நாட்களில் திரும்பி வந்து நான் எனது உடலில் நுழைத்து உயிர் பெறுவேன் என்றும் சாய்பாபா கூறினார். மகல்சபதியும் அப்படியே ஆகட்டும் என்றார்.

சாய்பாபா சொன்னபடி அவரது உயிர் உடலைவிட்டுப் பிரிந்து சென்றது. உயிரில்லாத உடலை மகல்சபதி பாதுகாத்து வந்தார். இந்த விஷயம் எப்படியோ வெளியில் தெரிந்து மக்கள் அங்கே திரளாக கூடி விட்டனர். இது தொடர்பாக விசாரிக்க உயர் அதிகாரிகளும் வந்து விட்டனர். அதிகாரிகள் சாய்பாபாவின் உயிரற்ற உடலைப் பார்த்துவிட்டு, அவர் இறந்து விட்டார் என்று கூறினார். எனவே அவரது உடலை அடக்கம் செய்து விடலாம் என்றனர். ஆனால், சாய்பாபாவின் சீடர் மகல்சபதி அதற்கு சம்மதிக்கவில்லை.

 உயிர்த்தெழுந்த சாய்பாபா.. பரவசத்தில் பக்தர்கள்!

சாய்பாபாவின் அருள் வாக்கு இதுவரையிலும் பொய்யானதே இல்லை. அதனால் யாரும் அவரது உடலைத் தொட நான் அனுமதிக்க மாட்டேன் என்று சொல்லி விட்டார். மகல்சபதி. உயர் அதிகாரிகள் கோபம் கொண்டு , நீங்கள் சொன்னது போல் மூன்று நாள் கழித்து நான்காவது நாள் சாய்பாபா உயிர் பெறாவிட்டால் நாங்களே சாய்பாபாவின் உடலை அடக்கம் செய்து விடுவோம் என்று மகல்சபதியை எச்சரித்து விட்டுச் சென்றனர்.

மகல்சபதி சொன்ன படி மூன்று நாட்கள் கழிந்தன. நான்காவது நாள் காலையில் எல்லோரும் சாய்பாபாவின் உடல் அருகே கூடி விட்டனர். அப்போது சாய்பாபா சொன்னபடியே அவரது உயிரற்ற உடல் உயிர் பெற்று எழுவதைக் கண்டனர். சாய்பாபா உயிரோடு வந்ததைக் கண்ட பக்தர்களும் மக்களும் மகிழ்ச்சி கொண்டனர். சாய்பாபாவின் இந்தச் செயலால் சாய்பாபாவின் மகிமை நாடு முழுவதும் பரவியது.

ஓம் ஸ்ரீ சாய்ராம்

டாக்டர். வி. ராமசுந்தரம்
ஆன்மீக எழுத்தாளர்

newstm.in

Tags:
Next Story
Share it