நோயிலிருந்து விடுதலை..

பாபா சாகேப் புட்டி என்பவர் , சாய்பாபாவின் மற்றொரு தீவிர பக்தர். இவர் தினமும் மசூதிக்குச் சென்று சாய்பாபாவைத் தரிசனம் செய்தவதைத் தனது கடமையாகவே கொண்டிருந்தவர் . சாய்பாபாவையே கடவுளாக ஏற்றுக்கொண்டவர். ஒரு நாள் திடீரென்று புட்டிக்கு , கடுமையான வயிற்றுப்போக்கு ஏற்பட்டது.

நோயிலிருந்து விடுதலை..
X

பாபா சாகேப் புட்டி என்பவர் , சாய்பாபாவின் மற்றொரு தீவிர பக்தர். இவர் தினமும் மசூதிக்குச் சென்று சாய்பாபாவைத் தரிசனம் செய்தவதைத் தனது கடமையாகவே கொண்டிருந்தவர் . சாய்பாபாவையே கடவுளாக ஏற்றுக்கொண்டவர். ஒரு நாள் திடீரென்று புட்டிக்கு , கடுமையான வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. தனது வீட்டிலிருந்த மாத்திரை , மருந்துகளை உட்கொண்டு பார்த்தார். அது சட்டை செய்யவே இல்லை. வயிற்றுப்போக்கு மிகுதியாக இருந்த காரணத்தால் அவர் உடல் மெலிந்து , தளர்ந்து போக ஆரம்பத்தது. சில தினங்களில் அவரால் நடமாடக்கூட முடியாமல் போயிற்று. இதனால் அவரால் துவாரகா மயியிக்குச் சென்று சாய்பாபாவைத் தரிசிப்பதும் முடியாது போயிற்று.

இந்த விஷயம் சாய்பாபாவின் ஞான அறிவுக்கு எட்டியது. தனது உதவியாளர்களை அழைத்து புட்டியை மசூதிக்கு அழைத்து வருமாறு பணித்தார். அவர்களும் அப்படியே புட்டியை அங்கு அழைத்து வந்தனர். தன் முன்னே அமரும்படிச் சொன்னார் சாய்பாபா. புட்டியை நோக்கித் தன் கைவிரல்களை நீட்டிய சாய்பாபா " போதும், இனிமேல் நீ வெளியேறுவதை நான் அனுமதிக்க மாட்டேன்" என்று கடும் கோபத்துடன் கூறினார். இது அங்கிருந்தவர்களை அதிரச் செய்தது. புட்டியும் கூடக் குழப்பத்துடன் சாய்பாபாவைப் பார்த்தார். ஆனால், இப்படி சாய்பாபாகூறிய பின்னர், அவரது வயிற்றுப் போக்கு முழுவதுமாக நின்று போயிருந்தது. தளர்ச்சியும் மாறி இருந்தது. அப்போது தான் அவர்களுக்குத் தெரிந்தது சாய்பாபா, வெளியேற ககூடாது என்று சொன்னது வயிற்றுப் போக்கை. சாய்பாபாவின் கருணையே கருணை.

ஓம் ஸ்ரீ சாய்ராம்.

நோயிலிருந்து விடுதலை..

டாக்டர். வி. ராமசுந்தரம்
ஆன்மீக எழுத்தாளர்
EMAIL: venkatraman.ramasundaram@gmail.com

newstm.in

Next Story
Share it