Logo

தெரியாமல் செய்த பாவத்திற்கு விமோசனம் !! இதை மட்டும் செய்யுங்க..

 | 

வியாழக்கிழமையில் கோவிலுக்கு சென்று , தட்சிணாமூர்த்தியை வணங்குவது நல்ல பலனைத் தரும். இது நாம் எல்லோரும் அறிந்த ஒன்று தான். ஆனால் இந்த வியாழக்கிழமை தினத்தில் நீங்கள் உங்களுடைய குருவாக , யாரை நினைத்து வழிபட்டு வருகிறீர்களோ ,

அவர்களின் திரு உருவ படத்திற்கு முன்பாக , இந்த முறையில் வழிபடுவதன் மூலம் , இப்படி மன்னிப்பு கேட்டுக் கொள்வதன் மூலம் , நீங்கள் அறிந்தோ , அறியாமலோ செய்த பாவங்களுக்கு கூட மன்னிப்பு கிடைக்கும் என்று சாஸ்தரங்கள் சொல்லப்படுகிறது.

உங்களுடைய குரு என்று நீங்கள் யாரை நினைக்கிறார்களோ , கட்டாயம் அவரது திருவுருவப் படம் உங்கள் வீட்டில் இருக்கும். அந்தப் படம் உங்கள் பாக்கெட்டில் வைத்துக் கொள்ளும் அளவிற்கு சிறியதாக இருந்தால் கூட போதும். எடுத்துக்காட்டாக சில பேர், சில சித்தர்களை தங்களது குருவாக நினைத்து ,

அந்த சித்தரின் திருவுருவப்படத்தை வைத்து வீட்டில் பூஜை செய்து வருவார்கள். சில பேர் ராகவேந்திரா, சாய்பாபா, சுவாமி விவேகானந்தர் இப்படிப்பட்ட மகான்களை தங்களுடைய குருவாக நினைத்து வழிபடுவார்கள்.

உங்களது குரு யாராக இருந்தாலும் பரவாயில்லை. குருவின் திரு உருவப் படத்தை பார்த்தவாறு , 2 மண் அகல்களில், நெய் தீபங்கள் ஏற்றி வைக்க வேண்டும். அதன் பின்பு உங்களது குருவிற்கு மனதார நன்றியை தெரிவிக்க வேண்டும்.

ஆனால், இந்த வழிபாட்டின் போது உங்களது மனது எக்காரணத்தைக் கொண்டும் அலைபாய கூடாது. மனதை ஒரு நிலைப்படுத்தி குருவை வணங்கும் போது நீங்கள் வைக்கும் வேண்டுதலானது கட்டாயம் உங்களது குருவின் ஆன்மாவின் செவிகளில் விழும் என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டு தீபங்கள் ஏற்றி வைத்த பின்பு, உங்கள் மனதார ‘ஓம் குருவே சரணம்’ என்ற மந்திரத்தை 5 முறை உச்சரிக்க வேண்டும். அதன் பின்பு நீங்கள் செய்த பாவத்திற்கான மன்னிப்பைக் கேட்டுக் கொள்ள வேண்டும்.

என்னுடைய வாழ்க்கையில் , நான் கடந்து செல்லும் பாதையில், அறிந்தோ அறியாமலோ, மற்ற உயிர்களுக்கு நான் செய்த பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட வேண்டும் என்றவாறு சொல்லி மன்னிப்பு கேட்கலாம்.

அடுத்தபடியாக உங்களது வாழ்க்கையில் முன்னேற்றத்திற்காக தேவைப்படக்கூடிய வேண்டுதலை வைக்க வேண்டும். இப்படி தொடர்ந்து 11 வாரம் வியாழக்கிழமை உங்களது குருவை வழிபட்டால் நல்ல பலன் உண்டு.

Newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP