இருமதத்தினரும் இணைந்து கொண்டாடிய ராமநவமி-உருசு

சாய்பாபா எல்லா மதங்களின் அடிப்படைக் கொள்கைகளை ஏற்றுக் கொள்ளுதல், சகிப்புத்தன்மை, கடவுள் நம்பிக்கை முதலியவை பக்தர்களிடம் இருக்க வேண்டும் என்று சாய்பாபா விரும்பினார்.

இருமதத்தினரும் இணைந்து கொண்டாடிய ராமநவமி-உருசு
X

சாய்பாபா எல்லா மதங்களின் அடிப்படைக் கொள்கைகளை ஏற்றுக் கொள்ளுதல், சகிப்புத்தன்மை, கடவுள் நம்பிக்கை முதலியவை பக்தர்களிடம் இருக்க வேண்டும் என்று சாய்பாபா விரும்பினார். அவரவர்களுக்கு விருப்பமான கோயில்களுக்குச் செல்லுதல், தமது இஷ்டத் தெய்வங்கள் வணங்குதல் ஆகியவற்றை சாய்பாபா ஆதரித்தார்.

தெய்வங்களின் படங்களையும் சிவலிங்கங்களையும், பாதுகைகளையும் சாய்பாபா தாமே தம் பக்தர்களுக்குக் கொடுப்பது உண்டு. பக்தர்களின் கூட்டம் பெருகுவதற்கு இதுவும் ஒரு காரணமாயிற்று. சாய்பாபாவின் வாழ்நாள் இறுதி வரை அவர் இஸ்லாமியரா, இந்துவா என்று எவராலும் அறிய முடியவில்லை. அவருடைய உபதேசங்களில் இந்து, முஸ்லிம் ஒற்றுமை வேறுபாடின்றி இருந்தது .

அது மட்டுமல்லாமல் அவருடைய அன்பு என்ற அடிப்படைக் கொள்கையினால் மக்களை சாதி சமய வேறுபாடின்றி ஒருங்கிணைந்தார். படிப்படியாக ஒருங்கிணைந்த ஒரு சமுதாயத்தில் எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் படியான ஒரு வழிபாட்டு சடங்குகளில் இஸ்லாமியர் தலையிடாமல் இருந்தனர்.

அதைப்போலவே இஸ்லாமியர் வழிபாட்டு நேரத்தில் இந்துகள் தலையிடாமல் இருந்தனர். மத சகிப்புத்தன்மை சாய்பாபா வலியுறுத்தினார். கோபர்களில் இருந்த கோபால்ராவ்குண்டு என்பவர் சாய்பாபாவின் பரம பக்தர்களில் ஒருவர். அவருக்கு மூன்று மனைவியர் இருந்தும் பிள்ளைப்பேறு இல்லாமல் இருந்தது.

பின்னர், சாய்பாபாவின் ஆசியால் அவருக்கு ஒரு மகன் பிறந்தான். அதனால், அளவு கடந்த மகிழ்ச்சி அடைந்த அவர் சிறப்பாக ஏதேனும் செய்ய வேண்டும் என்று விரும்பினார். உருசு என்ற விழாவை சீரடியில் நடத்தலாம் என அவருக்குச் தோன்றியது. தம் விருப்பத்தைச் பக்தர்களிடம் கூற அவர்கள் அதை ஏற்றுக் கொண்டார்கள். அதற்கு சாய்பாபாவின் ஆசியும் அனுமதியும் கிடைத்தது. உருசு விழாவை ராம நவமி நாளன்று நடத்துவது என்று முடிவாயிற்று. இதனால் இஸ்லாமியர்களும். இந்துகளும் ஒன்று படவும் அவர்களுடைய விழாக்களும் ஒருங்கிணைந்து நடக்கவும் வாய்ப்பு ஏற்பட்டது.

மேளதாளத்துடன் நடந்த ஊர்வலத்தின் போது தட்டுகளில் சந்தனம் எடுத்துச் செல்லப்பட்டது. ஊர்வலம் சீரடி தெருக்களின் வழியே சென்று பின்னர் மசூதிக்குத் திரும்பும். ஒரே நாளில் இந்துக்கள் கொடிகளை ஏற்றிக் செல்ல இஸ்லாமியர்கள் சந்தனத்தை எடுத்துச் செல்ல இரு மதத்தினரும் எந்த மன வேற்றுமையுமின்றி மகிழ்ச்சியுடன் விழாவைக் கொண்டாடினர்.

டாக்டர். வி. ராமசுந்தரம்
ஆன்மீக எழுத்தாளர்


newstm.in

Next Story
Share it