புகழ்ச்சோழ நாயனார்

உள்ளம் பதைத்தது. கண்களில் நீர் நிறைந்தது. பெரும் பிழை செய்துவிட்டோமே என்று அஞ்சி னார். அடியார்களுக்கு தீங்கிழைக்க செய்யும்படி ஆனதே என்று அழுது அரற்றியவர் அமைச்ச ரிடம் என் ஆட்சியில் சைவ நெறிக்கு பாதுகாப் பில்லாமல்

புகழ்ச்சோழ நாயனார்
X

சோழ நாட்டில் உறையூரில் புகழ்ச்சோழ நாயனாரென்பவர் ஒருவர் இருந்தார். அறநெறி தவறாமல் அரசாண்டு வந்தார். வீரத்திலும், பிறருக்கு ஈவ திலும் சிறந்தவராக புகழ்பெற்ற புகழ்சோழ நாயனார் எம்பெருமானிடத்தும் பக்தியும் அன்பும் பூண்டு தொழுது வந்தார்.

சிவனடியார்களை வணங்கி அவர்களுக்குசிவத்தொண்டு புரிந்தால் சிவனுக்கே செய்த பெரும்தொண்டு என்பதை உணர்ந்தவர். சிவனடியார்களி டம் அன்பும் பக்தியும் கொண்டிருந்ததோடு சிவாலயங்களுக்கு திருப்பணிகள் செய்வதையும் வழக்கமாக்கியிருந்தார். இவருடைய ஆட்சியில் நான்குபுறமும் சைவம் தழைத்தது. புகழ்ச்சோழர் அரசர் மற்ற அரசர்கள் கப்பம் கட்டுவதற்கு வசதியாக தம்முடைய தலைநகரை மலைநாட்டு பக்கமுள்ள கருவூருக்கு மாற்றி கொண்டார்.

அங்கு பசுபதீஸ்வரரை இடையறாது வணங்கிவந்தார் புகழ் சோழர். தம் மீது புகழ் சோழன் கொண்ட பக்தியை உலகறியச்செய்ய வேண்டும் என் னும் திருவுளம் கொண்டார். கப்பம் கட்டும் அரசர்கள் குதிரைகள், யானைகள், பொற்குவியல்கள், விலை மதிக்கத்தக்க கற்கள் போன்றவற்றைச் செலுத்தி வந்தார்கள். ஒருமுறை அதிகன் என்னும் அரசன் மட்டும் மன்னர்க்கு கப்பம் கட்டாமல் இருந்தான். செய்தி புகழ்ச்சோழன் காதுக்கு சென் றது.

கப்பம் கட்டாமல் இருக்கும் அதிகனை வென்று வர அமைச்சர்களிடம் ஆணையிட்டார் புகழ்ச்சோழர் நாயனார். மன்னனின் கட்டளைக்கிணங்க அமைச்சர்கள் படைகள் சூழ சென்று அதிகனை வென்று அங்கிருந்த பொருள் செல்வங்கள், படைகள் கொண்டு வந்ததோடு போரில் மாண்ட யானை, குதிரை, பெண்கள் தலைகள், வீரர்கள் தலைகளையும் எடுத்து வந்தனர். தமது படையின் வீரம் கண்டு மகிழ்ந்திருந்த மன்னன் கண்ணில் ஒரு தலையில் மட்டும் சடைமுடி இருப்பதைப் பார்த்தார்.

அதைக் கண்டதும் புகழ்ச்சோழ நாயனார் உள்ளம் பதைத்தது. கண்களில் நீர் நிறைந்தது. பெரும் பிழை செய்துவிட்டோமே என்று அஞ்சினார். அடி யார்களுக்கு தீங்கிழைக்க செய்யும்படி ஆனதே என்று அழுது அரற்றியவர் அமைச்சரிடம் என் ஆட்சியில் சைவ நெறிக்கு பாதுகாப்பில்லாமல் போய்விட்டதே. திருமுடியில் சடைமுடி ஏந்திய அடியாரை நானே கொன்றுவிட காரணமாகிவிட்டேனே. எம்பெருமானுக்கு எத்தகைய துன்பத் தைக் கொடுத்துவிட்டேன்.

சைவ நெறியை காப்பாற்ற வேண்டிய நான் அரசனல்லவே. கொடுங்கோலனாக அல்லவா இருந்துவிட்டேன். இனி மக்களைக் காப்பாற்ற எனக்கு எவ்வித தகுதி யுமில்லை என்று கூறியவர் தன்னுடைய புதல்வனை அரசுக்கட்டிலில் உட்காரவைத்தார். பிறகு திருசடை கொண்ட தலையை ஓர் பொற்தட்டில் வைத்து ஐந்தெழுத்து மந்திரத்தை மனதில் தியானித்தவாறே நெருப்புக்குண்டலத்தை வலம்வந்தார் மன்னர். பிறகு பொற்றாமரைக் குளத்தில் இறங்குவது போல் நெருப்புக்குண்டலத்தில் இறங்கினார்.

சுற்றியிருந்தவர்கள் மன்னனின் பக்தியைக் கண்டு உருகினார்கள். மன்னர் மன்னராக மட்டுமல்ல மகானாக வாழ்ந்திருக்கிறார் என்றார்கள்.புகழ்ச் சோழர் நாயனாரை எம்பெருமான் தம் திருவடி நிழலில் அணைத்துக்கொண்டார்.

இவருக்கான குருபூஜை ஆடிமாதம் கார்த்திகை நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.

nestm.in

newstm.in

Next Story
Share it