Logo

உதியின் சக்தியும் செயல் திறமையும்
 

 | 

ஓரு முறை சாய்பாபாவின் பக்தரான பாலாஜி என்பவரின் திவசம். அவரின் குடும்பத்தார், விருதினர்  அனைவருக்கும் விருந்திற்காக அழைக்கப்பட்டு, அவர்களுக்கு உணவு சமைக்கப்பட்டது. ஆனால், சாப்பாட்டு நேரத்தில் அழைக்கப்பட்டதைப் போல்  மூன்று மடங்குப் பேர் வந்துவிட்டர். பாலாஜியின் மனைவி திகைத்துப் போய்விட்டாள். குழுமியிருந்த மக்களுக்கு உணவு பற்றாது என்றும், அது பற்றாது போகுமானால் குடும்பத்தின் கௌரவம் பாதிக்கப்படும் என்றும் அவள் நினைத்தால். அவளது மாமியார் '"பயப்படாதே, அது நம்முடைய உணவல்ல சாய்பாபாவினுடையது.  ஒவ்வொரு பாத்திரத்திலும் கொஞ்சம் உதியைப்போட்டு ஒரு துணியைப்போட்டு மூடி அதை  திறக்காமலே அவர்களுக்குப் பல பரிமாறு!  

சாய்பாபா நம்மை அவமானத்திலிருந்து காப்பார்" என்று கூறித்தேற்றினாள். அவள் கூறியபடியே செய்தாள். தங்களது வியப்புக்கும், மகிழ்வுக்கும் ஏற்ப , பரிமாறப்பட்ட உணவு எல்லோருக்கும் போதுமானதான இருந்த்தோடு மட்டுமன்றி ஏராளமாக மீதமும் இருந்ததைக் கண்டார்கள். "ஒருவன் எவ்வளவு அதிகம் மனமார்ந்த அக்கறையுடன் உணர்கிறானோ அவ்வளவு அதிகமாக அவன் செயலுருவாக்கி காண்கிறான்" என்னும் மொழி இவ் விஷயத்தில் நிரூபணமாக்கப்பட்டது.

டாக்டர்.வி.ராமசுந்தரம்
ஆன்மீக எழுத்தாளர்

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP