Logo

பூசலார் நாயனார்

செல்வமும், பொருளும் இல்லாமல் இத்த கைய திருக்காரியத்தை எங்கனம் செய்ய இயலும் என்று மனம் வருந்தினார். செய் வதறியாது கலங்கி நின் றார். புறத்தே கட்ட இயலாத கோயிலை அகத்தில் கட்ட எண்ணி மகிந்தார். இதற்கு என்ன செல் வம் தேவைப்படும்...
 | 

பூசலார் நாயனார்

திருநின்றவூர் என்னும் திருத்தலத்தில் வேதியர் மரபில் தோன்றியவர் பூசலார் நாயனார். உள்ளமும் உடலும் சிவபெருமா னுக்கே என்று சிவன் பால் கவனம் செலுத்தி சிந்தை முழுவதும் அவனை மனதில் இருத்தி வாழ்ந்துவந்த பூசலாருக்கு எம் பெருமானுக்கு ஆலயம் எழுப்ப வேண்டும் என்னும் ஆசை இருந்தது.

ஆலயம் அமைப்பதென்பது என்ன அவ்வளவு சாதாரணமான விஷயமா என்ன? செல்வமும், பொருளும் இல்லாமல் இத்த கைய திருக்காரியத்தை எங்கனம் செய்ய இயலும் என்று மனம் வருந்தினார்.செய்வதறியாது கலங்கி நின்றார். புறத்தே கட்ட இயலாத கோயிலை அகத்தில் கட்ட எண்ணி மகிந்தார். இதற்கு என்ன செல்வம் தேவைப்படும் என்று நினைத்தவர் கட்டடம் கட்ட தேவையான பொருள்களை மனதுக்குள் குறித்துகொண்டார். யாரும் இடர் தர இயலாத இடத்துக்கு சென்று அமர்ந்தார்.

ஆகம, வேத சாஸ்திரங்களை முறைப்படி கற்றறிந்த பூசலார் ஆகம முறைப்படி மனதுக்குள் கோயிலை வடிவமைத்தார்.  கோயிலில் இருக்கக்கூடிய கருவறை,அலங்காரமண்டபம், பிரகாரம், திருமதில், திருக்குளம், கோபுரம் என அனைத்தையும் ஒன்றுவிடாமல் மனக்கண்ணில் உருவாக்கி அழகிய கோயிலை வடிவமைத்தார். மனக்கோயில் கட்டுவது ஒன்றும் எளி தாக இருக்கவில்லை.புறக்கோயில் கட்டுவதற்கேற்ப காலஅளவே பூசலாருக்கும் பிடித்தது.

அச்சமயம் காஞ்சியைத் தலைநகராக கொண்டு ஆண்டு வந்த பல்லவ தேசத்து மன்னன் காஞ்சியில் எம்பெருமானுக்கு திருத்தலம் அமைத்து அவை முடிவுறும் தருவாயில் கும்பாபிஷேகத்துக்கு நாள் குறித்தான். விழாவுக்கான ஏற்பாடுகள் சிறப்பாக நடைபெற்றுக்கொண்டிருந்தது. மறுநாள் கும்பாபிஷேகத் தொடக்கம் என்னும் நிலையில் முன்னிரவில் மன்னனின் கனவில் எழுந்தருளினார் எம்பெருமான்.

அன்பனே திருநின்றவூரில் எனது பக்தன் அவனது உள்ளக்கோயிலில் கட்டியுள்ள தலத்துக்கு நாளை கும்பாபிஷேகம் என்ப தால் நீ கும்பாபிஷேகத்தை வேறு நாளைக்குமாற்று என்றார். பல்லவ மன்னன் வியந்து எழுந்தான். திருநின்றவூரில் இறை வன் எழுந்தருள இருக்கும் திருத்தலத்தைக் காண ஆவல் கொண்டான். அமைச்சர் பரிவாரங்களுடன் திருநின்றவூர் சென்று திருத்தலத்தைத் தேடினான். பூசலார் அமைத்துள்ள கோயில் விவரங்களை அம்மக்களிடம் கேட்டான். ஆனால் யாருக்கும் தெரியவில்லை. எனவே அந்த ஊர் அந்தணர்களை அழைத்து பூசலார் பற்றி கேட்டு அவரது இருப்பிடத்தை அறிந்தான்.

பூசலாரை நாடி அவரைக் கண்டதும் அவர் கால் பணிந்து அடியாரே காஞ்சியில் யாம் கட்டிய திருத்தலத்துக்கு நாளை குட முழுக்கு வைத்திருந்தேன்.ஆனால் எம்பெருமான் என்கனவில் வந்து நாளை உமது திருத்தலத்துக்கு தாங்கள் குடமுழுக்கு செய்வதால் என்னை வேறு நாள் மாற்ற சொல்லிவிட்டார். எம்பெருமானின் குடமுழுக்கை காண ஆவலோடு வந்திருக்கி றேன். திருத்தலத்தைக் காணலாமா என்று கேட்டான்.

அடியார் பெரும் மகிழ்ச்சி கொண்டு அடியேனின் கோயிலுக்கு எம்பெருமான் வர சம்மதம் தெரிவித்தாரா? இவ்வூரில் எம் பெருமானுக்கு திருத்தலம் அமைக்க விரும்பினேன். ஆனால் செல்வம் இல்லா நிலையில் பொருள் ஈட்ட வழியில்லாமல் புறத்தே கட்ட இயலாத கோவிலுக்கு அகத்தேவேனும் கட்ட வேண்டும் என்று விரும்பி மனதுக்குள்ளேயே ஆகம விதிப்படி திருத்தலம் அமைத்தேன்.இன்றுதான் அவரை பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகம் செய்ய எண்ணினேன். என்னே எம்பெரு மானின் அன்பு என்று பக்தியில் உருகினார்.

பொன்னும் பொருளும் கொட்டி கட்டிய திருத்தலமாக இருந்தாலும் தூய்மையான அன்பால் உள்ளத்தில் எழுப்பிய கோவி லுக்கு இணையில்லை என்பதை உணர்ந்த அரசன் பூசலாரின் திருவடிகளை வணங்கி திரும்பினான். பூசலாரும் அன்றைய தினம் ஆகம விதிமுறைப்படி ஈசனை பிரதிஷ்டை செய்து நாள் தோறும் ஆகம் நெறி தவறாமல் உள்ளத்தில் திருத்தலத் தில் இருக்கும் எம்பெருமானுக்கு பூஜைகள் செய்து வழிபட்டு வந்தார். இறுதியில் எம்பெருமானின் திருவடியை அடைந் தார். 

சிவாலயங்களில் ஐப்பசி மாதம் அனுஷம் நட்சத்திரத்தில் குரு பூஜை கொண்டாடப்படுகிறது.

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP