விஷத்தை நீக்கிய சாய்பாபா

உண்மையான பக்தி கொண்டு வணங்கும் யாவருக்கும், ஊதுவத்தின் சாம்பல் கூட சாய்பாபாவின் வரபிரசாதமாகும்.

          விஷத்தை நீக்கிய சாய்பாபா
X

ஒசாகா என்ற ஒரு சிறிய கிராமத்தை சேர்ந்தவர் சுதார் என்பவர் சாய்பாபாவின் மீது சிகரத்தை மீறிய அளவுக்கு பற்றும் , பாசமும் கொண்டவர். தனது எந்தவொரு சிக்கலையும் , கவலையையும் சாய்பாபா ஒருவரால் தான் நீக்க முடியும் என்ற திடமான நம்பிக்கை கொண்டவர்.

ஒரு நாள் மாலையில் அவரது வீட்டு திண்ணையில் மனைவியிடம் அமர்ந்து பேசி கொண்டு இருந்தார் . அப்பொழுது, சிறிய பாம்பு ஒன்று கடித்து விட்டது. அவரது மனைவி வலியால் துடித்து கொண்டு இருந்தார் .

பதறிப்பேரனரர் சுதார்.

பாம்பு கடியைப் போக்குவதற்கு சாய்பாபாவால் மட்டுமே முடியும். ஷீரடிக்குச் சாய்பாபாவை தரிசிக்க கிளம்பினார் சுதார். திடீரென்று ஒரு யோசனை வந்தது சுதாருக்கு. சாய்பாபா வழங்கும் “உதியை” தடவினால் போதும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. விஷம் நொடிப் பொழுதில் கடித்த இடம் தெரியாமல் போய்விடும். விட்டிற்குள் பூஜை அறைக்குள் தான் எப்போதும் அந்த விபூதியை அவர் வைத்திருப்பது வழக்கம். எனவே அதனை எடுப்பதற்காக அங்கே சென்றார். வைத்த இடத்தில் பிரசாதத்தைக் காணவில்லை. அறை முழுவதும் தேடினார்.

எங்கே போயிற்று? சாய்பாபா ஏன் இந்த இக்கட்டான நிலைமையில் தன்னை சோதனை செய்கிறார்.

அப்போது 'படக்' கென்று அவருக்கு ஒரு யோசனை தோன்றியது. நேராக சாய்பாபா படத்திற்கு முன் சென்று அவரை மனமு௫க வேண்டினார். அவா் படத்திற்கு முன்பாக “ஊதுவத்தி “ஒன்றைக் ஏற்றி வைத்தார். அதன் சாம்பலை எடுத்தார். இதுவும் சாய்பாபாவின் உதி தானே என்று தோன்றியது அவ௫க்கு. நேராக மனைவியிடம் வந்து பாம்பு கடித்த இடத்தில் அதனைத் தடவினார்.

என்ன ஒ௫ அற்புதம்!

அடுத்த நொடிப்பொழுதே மனைவியின் வலி சுத்தமாக மறைந்து போனது. பாம்பு கடித்த விஷம் போன இடம் தெரியவில்லை.

உண்மையான பக்தி கொண்டு வணங்கும் யாவருக்கும், ஊதுவத்தின் சாம்பல் கூட சாய்பாபாவின் வரபிரசாதமாகும்.

ஓம் ஸ்ரீசாய்ராம்!!!!!

          விஷத்தை நீக்கிய சாய்பாபா

டாக்டர். வி. ராமசுந்தரம்

ஆன்மீக எழுத்தாளர்

EMAIL: venkatraman.ramasundaram@gmail.com

newstm.in

Tags:
Next Story
Share it