Logo

  சாய்பாபாற்கு பிடித்த ரஹ்தா  

ஷீரடி அருகே உள்ள கிராமங்களுக்கு அடிக்கடி சாய்பாபா சென்று பார்வையிடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். அப்படித்தான் “ரஹ்தா” என்றொரு கிராமத்திற்கும் செல்வார்.
 | 

  சாய்பாபாற்கு பிடித்த ரஹ்தா  

ஷீரடி  அருகே உள்ள கிராமங்களுக்கு அடிக்கடி சாய்பாபா சென்று பார்வையிடுவதை வழக்கமாக கொண்டிருந்தார்.  அப்படித்தான்  “ரஹ்தா” என்றொரு கிராமத்திற்கும் செல்வார்.   அங்கு “குசால்சந்த் “ என்பவரோடு அடிக்கடி சம்பாஷனைகள் நடத்துவது வழக்கம். அப்படி அவரோடு பேசிவிட்டு வருவது சாய்பாபாவிற்கு பெரும் ஆனந்தத்தை அளித்தது.    இந்நிலையில் சாய்பாபாவால் சில தினங்களாக  ரஹ்தா செல்ல முடியாமல் போயிற்று.    

ஆனால் குசால்சந்தோடு அளவளாவும் ஆசை அதிகரித்துக் கொண்டே இருந்தது.    எனவே, தனது நெருங்கிய பக்தரான காகா சாகேப்பை அழைத்து, "ரஹ்தாவுக்குப்  போய் குசால்சந்தை “ஷீரடிக்கு “வருமாறு அழைத்து வா. அவரைப் பார்த்துப் பேச வேண்டும் போலிருக்கிறது " என்று கூறினார் சாய்பாபா.    காகா சாகேப்புக்கு சந்தேகம்தான் குசால்சந்த மிகவும் பெரிய மனிதர் .  தான் போய் அழைத்தாலெல்லாம் அவர் வருவாரா என்ன? தயக்கம் தான் .  ஆனாலும், சாய்பாபாவின் உத்தரவு அதனை செயல்படுத்தியே ஆக வேண்டும். ஆகவே , ரஹ்தாவிற்குப்  புறப்பட்டுச் சென்றார் காகா சாகேப்.

ரஹ்தாவை அவர் அடைந்தபோது் , எதிரே , தான் யாரைப் போய்ப் பார்க்கச் சென்று கொண்டிருந்தாரோ , அந்த குசால்சந்தின் மகன் வருவதைப் பார்த்தார். உடனே தனது  வண்டியை நிறுத்தி , அவனது அப்பாவைப் பார்ப்பதற்காகவே தான் வந்து கொண்டிருப்பதைத் தெரிவித்தார் .  பின்னர்,   குசால்சந்தின் மகனையும் தனது வண்டியில் ஏற்றிக் கொண்டு ரஹ்தாவிற்குச் சென்று குசால்சந்தைப் பார்த்தார் .  இவரைப் பார்த்த குசால்சந்த் ," என்ன சேதி ? திடீரென்று என்னை க் காண அவசரமாக வந்திருக்கிறீர்கள் என்று கேட்டார்.

அவரை ஷீரடிக்கு அழைத்துவருமாறு சாய்பாபா இட்ட கட்டளையைப் பற்றி விவரமாகக் கூறினார் காகாசாகேப் .

திடுக்கிட்டுப்போனார் குசால்சந்த். "என்ன சொல்கிறீர்கள் நீங்கள்?  இன்று மதியம் சாப்பிட்டுவிட்டு சற்று இளைப்பாறிய க் கொண்டிருந்தேன்.     அப்போது ஒரு அற்புதமான கனவு .  அதில் சாய்பாபாவின் தரிசனம்.  'உடனே  உன்னைப் பார்க்க வேண்டும்.  எனவே ,ஷீரடிக்குப் புறப்பட்டு வா'  என்று கட்டளையிட்டுவிட்டு மறைந்து விட்டார்  சாய்பாபா.    தற்போது கைவசம் வண்டி இல்லாததால்,  அங்கு இயலவில்லை என்பதைச் சொல்வதற்காகத்தான் என் மகனை ஷீரடிக்கு அனுப்பி வைத்தேன்"  என்றார் குசால்சந்த்.   குசால்சந்தை அழைத்து வருமாறு காகா சாகேப்பைப் பணித்த சாய்பாபா, அவர் தயங்குவதை உற்றுக் கவனித்திருக்கிறார் . ஆகவேதான், காகாசாகேப்  ரஹ்தா செல்வதற்கு முன்பே , குசால்சந்தின் கனவில்  தோன்றி ஷீரடி வருமாறு கூறி இருக்கிறார்.    என்ன ஒரு அபார சக்தியும், அறிவும் படைத்தவர் சாய்பாபா!            

  ஓம்ஸ்ரீசாய்ராம்!!!!

 

  சாய்பாபாற்கு பிடித்த ரஹ்தா  

டாக்டர். வி. ராமசுந்தரம்

ஆன்மீக எழுத்தாளர்

EMAIL: venkatraman.ramasundaram@gmail.com

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP