Logo

துளசியை சுற்றுவது ஏன்?

தாவர இனங்களில், துளசி மிகவும் மருத்துவ சக்தி வாய்ந்தது. பொதுவாக தாவரங்கள் காற்றில் உள்ள கார்பன்டை ஆக்சைடை எடுத்துக்கொண்டு ஆக்ஸிஜனை வெளியிடும். இதில் துளசிச் செடி மற்ற தாவரங்களை விட மிக அதிகமாக, ஆக்ஸிஜனை வெளியிடும் தன்மை கொண்டது. சுற்றுச்சூழலில் உள்ள காற்று மண்டலத்தையே, சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது.
 | 

துளசியை சுற்றுவது ஏன்?

துளசியை தெய்வமாக நம் முன்னோர் கருதி வழிபட்டுள்ளனர். துளசி செடியை சுற்றுவைதை பெரும் புண்ணியமாக கூறியுள்ளனர். இதற்கு பின்னணியில் அறிவியல் காரணம் உள்ளது தான் உண்மை. 

தாவர இனங்களில், துளசி மிகவும் மருத்துவ சக்தி வாய்ந்தது. பொதுவாக தாவரங்கள் காற்றில் உள்ள கார்பன்டை ஆக்சைடை எடுத்துக்கொண்டு ஆக்ஸிஜனை வெளியிடும். இதில் துளசிச் செடி மற்ற தாவரங்களை விட மிக அதிகமாக, ஆக்ஸிஜனை வெளியிடும் தன்மை கொண்டது. சுற்றுச்சூழலில் உள்ள காற்று மண்டலத்தையே, சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது.

ஹிந்துக்கள் அதிகாலையில் துளசி செடியை சுற்றி வந்து வழிபடும் முறையை வைத்துள்ளனர். அதிகாலை மூன்று மணி முதல், ஐந்து மணி வரை பிரம்ம முகூர்த்தம் என்று சொல்வார்கள். இந்த வேளையில் தான், இயற்கையின் அத்தனை அம்சங்களும் மிகவும் புதிதாகச் சுத்திகரிக்கப்பட்டதைப் போல் இருக்கும்.

இந்த அதிகாலை நேரத்தை தான் ஓசோன் அதிகமிருக்கும் நேரம் என அறிவியல் அறிஞர்கள் தெரிவிக்கின்றனர். இயற்கையாகவே, காற்றில் ஆக்ஸிஜன் அதிகமாக இருக்கும் நேரமான அதிகாலை வேளையில், துளசிச் செடியைச் சுற்றி வந்தால், பரிசுத்தமான ஆக்ஸிஜனை சுவாசிக்கலாம் என்பது இதன் சாராம்சம்.

பல மருத்துவ குணங்களை கொண்ட அற்புதச் செடியின் பயன்களை மக்கள் அனுபவிக்க வேண்டும் என்பதற்காகவே ஒரு வாழிபாட்டு சம்பிரதாயம்  நம் முன்னோர் உருவாக்கியுள்ளனர். 

newstm.in
 
newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP