ஆறுமுகம் எதை குறிக்கிறது?

பார்வதி தேவி, குழந்தைகளை அழைத்து அணைக்க ஆறு குழந்தைகள், ஆறுமுகம், பன்னிருகை, இருகால், ஓருடலாகக் கந்தனாக (ஸ்கந்தன் = ஒன்று சேர்ந்தவன்) மாறினான்.

ஆறுமுகம் எதை குறிக்கிறது?
X

பார்வதி தேவி, குழந்தைகளை அழைத்து அணைக்க ஆறு குழந்தைகள், ஆறுமுகம், பன்னிருகை, இருகால், ஓருடலாகக் கந்தனாக (ஸ்கந்தன் = ஒன்று சேர்ந்தவன்) மாறினான். கந்தன் உதித்ததினம் வைகாசி மாத – விசாக பௌர்ணமி. அதனால் அவன் பெயர் விசாகன். சிவஜோதியின் மறு உருவம். வேதசொரூபன் அதனால் சுப்ரமண்யன், என்றும் இளையவன் அதனால் குமாரன், மிக அழகானவன்; ஆகவே முருகன்
மு – முகுந்தன் என்கிற விஷ்ணு
ரு – ருத்ரன் என்கிற சிவன்
க – கமலத்தில் உதித்த பிரம்மன்.
ஆக, முருகன் மும்மூர்த்திகள் செய்யும் படைத்தல், காத்தல், அழித்தல் என்ற மூன்று தொழில்களையும் செய்து, மக்களுக்கு அருளும் கருணை வடிவமானவன்.

உலகைப் பிரகாசிக்கச் செய்ய ஒரு முகம், பக்தர்களுக்கு அருள ஒரு முகம்,வேள்விகளைக் காக்க ஒரு முகம்,
உபதேசம் புரிய ஒரு முகம், தீயோரை அழிக்க ஒரு முகம், பிரபஞ்ச நன்மைக்காக வள்ளியுடன் குலவ ஒரு முகம்.
சரவணபவ என்ற மந்திரத்தில், ச என்பது, லட்சுமி கடாட்சத்தையும், ர என்பது சரஸ்வதி கடாட்சத்தையும்,
வ என்பது, மோட்சத்தையும்,ண – எதிரிகளை வெல்வதையும், ப என்பது நோயற்ற வாழ்வையும் குறிக்கிறது.
அத்துடன், அறுபடை வீடுகளும், ஆறுபடை வீடுகளும் ஆறு குண்டலினிகளாக விளங்குகின்றன.
திருப்பரங்குன்றம், மூலாதாரமமாகவும், திருச்செந்தூர், ஸ்வாதிஷ்டானமாகவும், பழனி, மணிபூரகமமாகவும், சுவாமிமலை, அனாஹதாகவும், திருத்தணிகை, விசுத்தியாகவும், பழமுதிர்சோலை, ஆக்ஞையாகவும் விளங்குகிறது

ஆறுமுகனான திருமுருகனை, ஸ்கந்தஷஷ்டியில் துதித்து வழிபட்டு குஹானந்த அனுபூதி வாரிதியில் மூழ்குவோம்.
ஆறுமுகமும், 12 கரங்களும் கொண்ட முருகனின் திருக்கோலத்தை, சஷ்டி விழாவின் போது மட்டுமே திருச்செந்தூரில் முழுதாகத் தரிசிக்கலாம். மற்ற நாட்களில் அங்கவஸ்திரத்தால் மூடிவிடுவார்கள். வியாசர் எழுதிய 18 புராணங் களில் ஸ்காந்தம் என்னும் கந்தபுராணமே மிகப் பெரியது. ஒரு லட்சம் சுலோகங்கள் கொண்டது. மற்ற எல்லா புராணங்களும் சேர்ந்தே மூன்று லட்சம் சுலோகங்கள்தான்.

newstm.in

newstm.in

Tags:
Next Story
Share it