Logo

துளசியின், ஆன்மிக மகிமையும், மூலிகை மகத்துவமும்!

வாழ்க்கையின் இறுதியில் துளசி கலந்த ஜலத்தைச் சாப்பிட்டால், வாழ்நாளில் செய்த அனைத்து பாபங்களும் விலகிவிடும். தினசரி மதியம் சாப்பிட்டவுடன் ஒரே ஒரு துளசி இலையை வாயில் போட்டுக் கொண்டால் - சாப்பிட்ட உணவில் இருந்த அசுத்தம் நீங்கி சுத்தத் தன்மை ஏற்படும், நன்கு ஜீரணமாகும்.
 | 

துளசியின், ஆன்மிக மகிமையும், மூலிகை மகத்துவமும்!

நமது இந்திய கலாசாரத்துக்குப் பெருமையே, அனைத்து பொருட்களிலுமே பகவான் ஊடுருவி அமர்ந்துள்ளான் என்னும் தத்துவம்தான். ஆகவேதான், தெய்வங்களை மட்டுமில்லாமல் செடிகள், கொடிகள், மரங்கள், இலைகள் என அனைத்தையும்-அனைத்தாலும்- பூஜை செய்கிறோம். 

பசுவின் உடல் நிறையப் பால் இருந்தாலும் அதன் மடிமூலமே அதனைப் பெற முடிகிறது. அதுபோன்றே அனைத்து பொருட்களிலும் கடவுள் இருப்பினும், அவரது அருளை ஒரு சில பொருட்களின் மூலமே பெறமுடியும். 

மற்ற செடிகளை விட, துளசிக்கு அப்படியென்ன சிறப்பு?
மகாவிஷ்ணுவின் அம்சம் நிறைந்துள்ள துளசிச் செடி, விஷ்ணுவின் மனைவி. இவளுக்கு, பிருந்தா என மற்றொரு பெயரும் உண்டு. பிருந்தா, கண்ணனுக்கு மிகவும் பிடித்தமானவள். பிருந்தையாகிய துளசிதேவி, மகாவிஷ்ணுவை மணந்து கொண்ட நாள் ஐப்பசி மாத சுக்லபட்ச துவாதசி திதி. 

ஆகவேதான், அன்றைய தினத்துக்கு ‘ப்ருந்தாவன த்வாதசீ’ என்று பெயர். எந்த ஒரு பொருளைத் தானம் செய்யும் போதும், அந்தப் பொருளுடன் துளசியையும் சேர்த்து தானம் செய்வதால், கொடுக்கும் பொருளின் அளவும் மதிப்பும் கூடுகிறது என்கிறது சாஸ்திரம். 

தெய்வங்களுக்கு நிவேதனம் செய்யும் அன்னம் போன்ற உணவுப்பொருளில் துளசி இதழைப் போட்டால், அது அசுத்தத்தை நீக்கி சுத்தமாக்கும். துளசிக்கு நிர்மால்ய தோஷம் கிடையாது என்பதால், மற்ற இலைகளைப் போலல்லாமல் பறித்ததிலிருந்து மூன்று நாட்கள் வரை வைத்திருந்து துளசியால் விஷ்ணுவை அர்ச்சனை செய்யலாம். துளசியை வளர்த்து பூஜை செய்யும் வீட்டில் - துர்மரணங்கள் நிகழாது, விஷ ஜந்துக்கள் அண்டாது. 

வாழ்க்கையின் இறுதியில் துளசி கலந்த ஜலத்தைச் சாப்பிட்டால், வாழ்நாளில் செய்த அனைத்து பாபங்களும் விலகிவிடும். தினசரி மதியம் சாப்பிட்டவுடன் ஒரே ஒரு துளசி இலையை வாயில் போட்டுக் கொண்டால் - சாப்பிட்ட உணவில் இருந்த அசுத்தம் நீங்கி சுத்தத் தன்மை ஏற்படும், நன்கு ஜீரணமாகும். 


கிருஷ்ணர் நிகழ்த்திய திருவிளையாடல்!
துளசிக்கு நிகரான பொருள் வேறில்லை. கிருஷ்ண பகவான் தனது பிரியைகளான சத்தியபாமா, ருக்மணி ஆகிய இருவர் மீதும் சமமாக அன்பு வைத்திருந்தார். ருக்மிணி தேவி கிருஷ்ணர் மீது அளவில்லாத அன்பும், ஆழமான பக்தியும் கொண்டிருந்தாள். சுத்ய பாமாவோ, கண்ணனை தனக்கே உரிமையாக்கிக் கொள்ள நினைத்தாள். இதற்காக கண்ணனை, துலாபார தட்டின் ஒருபுறமும், மற்றொரு தட்டில் பொன், மாணிக்கம், நவரத்னங்கள் என தனது செல்வம் முழுவதையும் வைத்தாள். ஆனால், தராசு சமமாகவில்லை. 

அப்போது அங்கு வந்த ருக்மிணி, கண்ணனுக்குப் பிடித்த துளசி இலை ஒன்றை தராசுத் தட்டில் வைத்த போது, தராசு சமமாகியது என்று படித்திருப்போம். அதுமுதல் துளசியின் மகிமை உலகுக்கு வெளிப்பட்டது. 
துளசியைப் பற்றி சில முக்கிய தகவல்கள்... பூஜை செய்யும் துளசிச் செடியிலிருந்து துளசியைப் பறிக்கக் கூடாது. மற்ற துளசிச் செடியிலிருந்து துளசியைப் பறிக்கும் போதும் இறைவனை வணங்கி கிருஷ்ணா கிருஷ்ணா என சொல்லித்தான் துளசியைப் பறிக்க வேண்டும்.

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP