Logo

உங்கள் நட்சத்திரத்தை சொல்லுங்கள் , குணத்தை நாங்கள் சொல்கிறோம். (1)

உங்கள் நட்சத்திரத்தை சொல்லுங்கள் , குணத்தை நாங்கள் சொல்கிறோம். (1)
 | 

உங்கள் நட்சத்திரத்தை சொல்லுங்கள் , குணத்தை நாங்கள் சொல்கிறோம். (1)

ஒவ்வொரு மனிதனுக்கும், அவர்கள் பிறக்கும் போதான நட்சத்திரமே ஜாதகத்தின்  அடிப்படையாகிறது. ஜோதிடர்களிடம் பொதுப்பலன்களை  கேட்கும் போதும் , நட்சத்திரத்தின் அடிப்படையில் பலன்கள்  சொல்லப்படுகிறது. மேலும் நாளிதழ்,வார,மாத இதழ்களிலும் நட்சத்திரம், ராசி பலன்களை படித்து தெரிந்து கொள்வதே வழக்கமாக உள்ளது. நம்முடைய ஜோதிட அறிவியல் ஓவ்வொருவருக்கும் அவரது நட்சத்திரத்தின் அடிப்படையில்  குணங்களை விவரிக்கின்றது.

இந்த கட்டுரையை படிக்கும் போதே உங்கள் நட்சத்திரத்திற்கான குணங்களை தேடுகிறீர்களா? வாங்க படிக்கலாம். கொஞ்சம் பெரிய கட்டுரை என்பதால் இரண்டு பாகங்கள்.

 

அஸ்வினி முதல் பூசம் வரை

 

அஸ்வினி :

அஸ்வினி நட்சத்திரக்காரர்கள் அடிப்படையில்  புத்திசாலிகள்.அதே நேரம் அதிக அளவில்  விவாதங்கள்  செய்பவர் ஆடம்பர பிரியர். செவ்வாயின் ஆதிக்கம் கொண்ட மேஷ ராசியில் பிறந்தவர்கள் இவர்கள் பிறருக்கு அறிவுரை சொல்வதில் அதிக ஆர்வம் கொண்டவர்கள்.  அன்பும் நல்ல பண்புகளும் ஒருசேர அமையப் பெற்ற அஸ்வினி நட்சத்திரக்காரர்கள் , யாருக்காகவும் கொள்கைகளை விட்டுக் கொடுக்கமாட்டார்கள்.

பரணி :

நன்றி மிகுந்த குணவான்கள் இந்த நட்சத்திரக்காரர்கள்.பரணியில் பிறந்தவர்கள் தரணி ஆள்வார்கள் என்பதற்கேற்ப பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தலைமை  பண்பு மிகுந்தவர்கள். நல்ல கல்வியறிவு பெற்ற தைரியசாலிகள். பெரும்பாலும் பொறியியல், சட்டம் சார்ந்த தொழில்களில் ஈடுபடுவார்கள்.

கார்த்திகை:

பக்தியும்  மென்மையான குணமுடையவர்கள் கார்த்திகை நட்சத்திரக்காரர்கள். தலைமைப் பண்பு மிக்க இவர்கள் மற்றவர்களிடம் மிகுந்த அன்பு செலுத்துபவர்கள். துன்பத்தில் இருப்பவர்களுக்கு வழிநடத்தி உதவி செய்யும் வல்லமை உடையவர்கள். பெரும்பாலும் அரசுப் பணிகள், இலக்கியம், சுரங்கம் தொடர்பான இடங்களில் இந்த நட்சத்திரக்காரர்கள் பணி புரிவார்கள்.

ரோகிணி:

கிருஷ்ண பகவானின் அவதார நட்சத்திரமான ரோகிணி நட்சத்திரக்காரர்கள் மற்றவர்களை எளிதில் கவர்ந்துவிடுவார்கள். வசீகரமான  இவர்கள் ஊர் உலகம் சுற்றுவதில் ஆர்வம் கொண்டவர்கள்.அறிவு, அந்தஸ்தை முக்கியமல்ல என்று அன்புக்கே அதிக முக்கியத்துவம் தரக்கூடியவர்கள்.

மிருகசீரிடம்:

துணிச்சல் மிகுந்த மிருகசீரிட நட்சத்திரக்காரர்கள் அடிப்படையில் தலைமை தாங்கும் பண்பு உடையவர்கள்.கொண்டவர்கள். அதே நேரம் எளிதில் நண்பர்களாலும் உறவினர்களாலும் ஏமாற்றத்துக்கு உள்ளாவார்கள் .இந்த நட்சத்திரக்காரர்களுக்கு நிதித்துறை, கணக்கு தணிக்கை, மின்சாரம், கம்ப்யூட்டர் சார்ந்த தொழில்கள் பொருத்தமாக இருக்கும்.

திருவாதிரை:

சிவபெருமானின் நட்சத்திரத்தை பெற்ற இவர்கள் அடிப்படையில் பல்துறை வித்தகர்களாக விளங்குவார்கள். எந்தப் பணியில் ஈடுபட்டாலும் அந்தப் பணியை திறம்பட முடிக்கும் மிகுந்த திறமைசாலிகள்.  எதிலும் ஆழ்ந்த அறிவும் திறமையும் பெற்றிருப்பார்கள். பொதுவாக கல்வி, எழுத்து, பத்திரிகை, விளம்பரத்துறை, மருத்துவம் ஆகிய துறைகளில் சிறப்பாக செயல்படுவார்கள்.

புனர்பூசம்:

வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகம்  கொண்ட இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ராமபிரானைப் போல் வாக்கு தவறாதவர்களாக இருப்பார்கள். தனக்கென்று தனித்துவமான சில பண்புகளையும் திறமைகளையும் கொண்டிருப்பார்கள். தர்மத்துக்குக் கட்டுப்பட்டு நடப்பார்கள். சூழ்நிலையை அனுசரித்துச் செல்பவர்கள். கல்வித் துறை,  சட்டம், தங்கம் மற்றும் வெள்ளி ஆகிய தொழில்கள் இவர்களுக்கு அமையக்கூடும்.

பூசம்:

பிறரை மதிப்பதிலும், பக்தியில் நாட்டம்  அதிகமும் உள்ள பூச நட்சத்திரக்காரர்கள்   தன்னுடைய லட்சியத்தை அடையும்வரை ஓயமாட்டார்கள். எதிலும் நேர்மையாக இருப்பதையே விரும்பும் இவர்கள் பிறருக்கு  அடிமையாக வாழ்வதை விரும்பாதவர்கள்.

பெட்ரோ கெமிக்கல், விவசாயம் சார்ந்த தொழில்கள் மற்றும் அரசியலில் சிறந்து விளங்குவார்கள்.

 

 

 

தொடரும் ...

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP