ஆன்மீக கதை – இறைவன் நம் அருகிலேயே இருந்தாலும்.....

ராமன் குடிலில் இல்லாத போது,சீதையைக் கடத்தி வந்த ராவணனுக்கு, அவனது தம்பி விபீஷணன்,அவன் செய்தது தவறு என்று புத்திமதி சொன்னான். பிறன் மனைவியை, அவனுக்குத் தெரியாமல், தூக்கி வந்தது தவறு என்று எவ்வளவோ எடுத்துக் கூறியும் ராவணன் ஒப்புக்கொள்ளவில்லை. தம்பியை தூக்கி எறிந்து பேசினான்.
 | 

ஆன்மீக கதை – இறைவன் நம் அருகிலேயே இருந்தாலும்.....

ராமன் குடிலில் இல்லாத போது,சீதையைக் கடத்தி வந்த ராவணனுக்கு, அவனது தம்பி விபீஷணன்,அவன் செய்தது தவறு என்று புத்திமதி சொன்னான். பிறன் மனைவியை, அவனுக்குத் தெரியாமல், தூக்கி வந்தது தவறு என்று எவ்வளவோ எடுத்துக் கூறியும் ராவணன் ஒப்புக்கொள்ளவில்லை. தம்பியை தூக்கி எறிந்து பேசினான். இதனால் மனம் வருந்திய விபீஷணன் "அப்படியானால், நான் நியாயத்தின் பக்கமே நிற்பேன்' என சொல்லிவிட்டு, ஒரே ஒரு கதாயுதத்தை மட்டும் எடுத்துக்கொண்டு, ராமனைக் காண கிளம்பிவிட்டான். அவனிடம் அபிமானம் கொண்ட நான்கு ராட்சதர்களும் உடன் வந்தனர்.

 வருவதை தூரத்தில் இருந்தே கவனித்தான் வானர அரசன் சுக்ரீவன். அவன், இலங்கையிலுள்ள ராட்சஷர்களால் தங்களுக்கு துன்பம் நேருமென்ற அச்சத்தில் இருந்தான். எனவே ராமனிடம்,“பார்த்தாயா ராமா! நம்மை அழிக்க ராவணன் அவனது தம்பி விபீஷணனை ஏவியுள்ளான். அவன் நான்கு ராட்சதர்களையும் சேர்த்துக் கொண்டு வருகிறான். உடல் முழுக்க ஆயுதம் தரித்திருக்கிறான். அவன் நம்மைத் துன்பப்படுத்தவே வருகிறான்,'' என்றான்.

ராமன் அவனிடம்,“ஒரே ஒரு ஆயுதத்துடன் தானே அவன் வருகிறான். நீ இப்படி சொல்கிறாயே,”என்றான்.பிறகு தான் சுக்ரீவன் தனது அறியாமையை எண்ணி வெட்கினான். ஆம், பயத்தில் தான், ஒரு ஆயுதம் பல ஆயுதமாக சுக்ரீவனுக்கு கண்களுக்கு தெரிந்ததாம். ராமன் எத்தகைய பரம்பொருள்.அவர் அருகில் இருந்தும் கூட, பயத்தினால் தன் பலத்தை அவனால் உணர முடியவில்லை என்றால் பயம் எத்தகைய சத்ரு?. 

இறைவன் நம் அருகில் இருக்கும் போது,பூர்ண சரணாகதி ஒன்று தான் நம்மை காக்கும் வழி

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP