ஆன்மீக செய்தி - அழுகிய தேங்காய் அபசகுணமா?

கோயிலுக்குச் செல்லும்போது அர்ச்சனைக்குரிய பொருள்களில் தேங்காயும் தவறாமல் இருக்க வேண்டும். இந்தத் தேங்காய் உடைவதை வைத்துக் கூட சகுனங்கள் பார்த்தார்கள் நம் முன்னோர்கள்.
 | 

ஆன்மீக செய்தி - அழுகிய தேங்காய் அபசகுணமா?

வீட்டில் விசேஷம், சுப காரியங்கள், பூஜை என்று எந்த சுப நிகழ்ச்சியாக இருந்தாலும்,அதில் முக்கிய இடத்தைப் பிடிப்பது தேங்காய்தான். விசேஷமான பூஜைக்கு உரிய பொருள் தேங்காய் என்பது சம்பிரதாய சடங்கு. தேங்காயில் மூன்று கண்கள் தெரியும். முதல் கண் படைக்கும் கடவுளான பிரம்மனைக் குறிக்கும். இரண்டாவது கண் மஹாலஷ்மியைக் குறிக்கும். மூன்றாவது கண் சிவபெருமானைக் குறிக்கும். தேங்காயை உரிக்கும் போது குடுமியை வைத்து அதன் நாரை மட்டும் எடுப்பார்கள். குடுமி இல்லாமல் பூஜைக்கு மட்டும் அல்ல சாதாரணமாக சமையலுக்கு கூட குடுமியில்லாமல் தேங்காயை உடைக்க கூடாது என்று இதற்குதான் சொல்வார்கள்.

கோயிலுக்குச் செல்லும்போது அர்ச்சனைக்குரிய பொருள்களில் தேங்காயும்  தவறாமல் இருக்க வேண்டும். இந்தத் தேங்காய் உடைவதை வைத்துக் கூட  சகுனங்கள் பார்த்தார்கள் நம் முன்னோர்கள். நல்ல காரியங்களைத் தொடங்கும் போது முழு முதற் கடவுளான விநாயகனை வழிபட்டு சிதறு தேங்காய் உடைத்து வழிபடுவோம். அதாவது தொடங்கவிருக்கும் காரியங்களில் இருக்கும் தொல்லைகள்,தேங்காய் சிதறுவதைப்போல் சிதற வேண்டும் என்பதுதான். ஆனால் கருவறையில் ஆண்டவன் சன்னிதியில் உடைக்கப்படும் தேங்காய் சிந்தாமல் சிதறாமல் இரண்டாக சரி அளவில் உடைவது மிகவும் நல்லது என்றும் சொல்வார்கள். தேங்காயின் உள்ளே பூ இருந்தால் அது சிறப்பான வாழ்வை அளிக்கும் என்பதும் நம்பிக்கை. அதே தேங்காய் கொப்பரையாக இருந்தால் நினைத்த காரியம் ஈடேறும் .

ஆனால் தேங்காய் சிதறிவிட்டாலோ, அழுகிவிட்டாலோ பக்தர்களுக்கு ஒருவித கலக்கம் கொடுக்கும். அதை ஒரு வித அபசகுணமாக பார்ப்பார்கள்.  ஏதோ அசம்பாவிதம் நடந்துவிடுமோ என்ற கலக்கத்திலேயே இருப்பார்கள். இத்தகைய எதிர்மறையான எண்ணங்கள் தான் வலுப்பெற்று காரியத் தடை ஏற்படும் என்பதை உணர மாட்டார்கள். ஆனால் இதை நேர்மறையாக எடுத்துக்கொள்வதுதான் நல்லது. அழுகிய தேங்காயைப் போல குடும்பத்தின் மீதிருந்த கண் திருஷ்டிகளும், பிரச்னைகளும் அழுகி கடவுளின் முன்னிலையிலேயே வெளியேறிவிட்டது என்று இறைவனை ஒருமுகமாக வேண்டி, மனதிருப்திக்கு 2 தேங்காய் வாங்கி விநாயகருக்கு சிதறு காய் விடலாம். எல்லா பிரச்னைகளும் விலகிவிட்டது என்ற நல்லெண்ணத்துடன் இறைவனை வேண்டி தொடங்கப்படும் செயல் இறைவனின் அருளாலாலேயே வெற்றிகரமாக கைக்கு கிட்டும். இறைவனின் ஆசி எப்போதும் உங்களுக்கு கிடைக்கும்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP