Logo

ஆன்மீக செய்தி - மஞ்சள், குங்குமம், சந்தனம் நம் ஆரோக்யம் காக்கவா?

நம் உடலின் அனைத்து நாடி நரம்புகளும் மூளையுடன் இணைக்கப்பட்டுள்ளன. உடலின் அநேக நரம்புகள் நமது நெற்றிப் பொட்டின் வழியாகத் தான் செல்கின்றன. அதனால் நமது நெற்றிப்பகுதி எப்போதும் அதிக உஷ்ணத்துடனே இருக்கும்.
 | 

ஆன்மீக செய்தி - மஞ்சள், குங்குமம், சந்தனம் நம்  ஆரோக்யம் காக்கவா?

மாற்றங்கள் மாறாதது என்பதை அறிவோம். ஆனால் எல்லாவற்றுக்கும் இவை பொருந்தாது. நாகரிகம் என்ற பெயரில் கடவுளையும் வழிபாடு களையும் எப்படி மாற்ற முடியும். எப்படி மறக்க முடியும்? நம் முன்னோர்கள்  விஞ்ஞானத்தை ஆன்மிகம் என்னும் மெய்ஞானமாக்கி வாழ்ந்துவந்தார்கள். நம் அன்றாட வாழ்க்கை முறையில் பலவும் ஆன்மிகம் என்னும் விஞ்ஞான அறிவைக் கொண்டுள்ளது. அவற்றில் ஒன்று நெற்றியில் இடப்படும் மஞ்சள், குங்குமம், சந்தனம். இம்மூன்றும் மும்மூர்த்திகள் போல்  ஆன்மிக வழியில் நம் ஆரோக்யத்தை அரண் போல் காக்கின்றன.

நம் உடலின் அனைத்து நாடி நரம்புகளும் மூளையுடன் இணைக்கப்பட்டுள்ளன. உடலின் அநேக நரம்புகள்  நமது நெற்றிப் பொட்டின் வழியாகத் தான்  செல்கின்றன. அதனால் நமது நெற்றிப்பகுதி எப்போதும்  அதிக உஷ்ணத்துடனே இருக்கும். நம் வயிற்றுப்பகுதியில் இருக்கும் நெருப்பு சக்தியின் அனல் நெற்றியில் தான் உணரப்படுகிறது. அதனால்தான் காய்ச்சல் என்றால் நெற்றியில் கைவைத்து உஷ்ணத்தைப்  பார்க்கிறோம். உஷ்ணம் அதிகமானால் அதைக் குறைக்கும் வேலை மூளைக்கு என்பதால்  தான் அதைக் குளிரவைக்கும் வகையில் நமது முன்னோர்கள் தினமும் குளித்து முடித்து வந்ததும் நெற்றிப்பகுதியில் சந்தனத்தைக் குழைத்துப் பூசி உடலைக் குளிரச் செய்தார்கள்.
தலையில் படும் நீரானது, வியர்வை போன்றவற்றின் சிறு துளி  தலைப்பகுதியில்  தங்கிவிடும்.இதனால் தலைவலி, தூக்கமின்மை ஏற்படும். உடலுக்கு கேடு விளைவிக்கும் இந்த கெட்ட நீரை உறிஞ்சி வெளியேற்றும் விந்தையை விபூதி செய்யும்.  கெட்ட நீரை உறிஞ்சுவதோடு மட்டுமல்லாமல் கிருமித் தொற்றையும் தடுக்கிறது. கிருமி நாசினியாக செயல்படும் மஞ்சளிலிருந்து தயாரிக்கபடும் குங்குமம் தவிர்க்கப்பட்டு வருவதும் ஆரோக்ய குறைவையே ஏற்படுத்தும். ஸ்டிக்கர் பொட்டு உடல்நலனுக்குக் கெடுதியே செய்யும்.  இரசாயனத்தால் ஆன பசை  நெற்றிப்பகுதியில் நேரடியாக படுவது அந்த இடத்தின் வெளிப்புறத்தில் எரிச்சலையும் உள்ளே சூரிய ஒளி செல்லாமலும் தடுக்கும். 

முன்னோர்கள் கடைபிடித்தவை எல்லாமே போற்றுதலுக்குரியது. அதனால் எல்லாவற்றையும் ஒதுக்காமல் ஒருமனதாக ஏற்க பழகுங்கள். சிறு குழந்தைகளுக்கு விபூதி, சந்தனம், குங்குமத்தைப் பழக்குங்கள். மாற்றங்கள் நல்லனவாகவே  இருக்கட்டும்

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP