சாஸ்திரம் கூறும் சில கடைபிடிக்க வேண்டிய பழக்கங்கள்!

சாஸ்திரம் கூறும் சில கடைபிடிக்க வேண்டிய நல்ல அறிவுரைகள் .. இவைகளை பின்பற்றினால் ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் வாழலாம்.

சாஸ்திரம் கூறும் சில கடைபிடிக்க வேண்டிய பழக்கங்கள்!
X

சாஸ்திரம் கூறும் சில கடைபிடிக்க வேண்டிய நல்ல அறிவுரைகள் ..

1,அலைமோதாமல் இருக்கும் நீரில் குளிக்க வேண்டும்.
2, தலைக்கு வைக்கும் தலையணையைக் காலுக்கு வைக்கக் கூடாது. தலையணை மீது உட்காரவும் கூடாது.
3.சாப்பிடும் போது நம் நிழல் சாதத்தில் விழக்கூடாது.
4. கைவிரலை நீக்கியோ, கையை உதறியோ சாப்பிடக்கூடாது.
5, சாப்பிடும் போது சோற்றை உருட்டிச் சாப்பிடக்கூடாது
6. எதையும் எச்சில் பண்ணிச் சாப்பிடக்கூடாது. குடிக்கவும் கூடாது
7. சாப்பிட்டு முடித்ததும் தட்டையோ,கையையோ நக்கக்கூடாது
8. தினசரி இரவில் அடுப்பில் நெருப்பை மிச்சமின்றி அணைத்துவிடவேண்டும்.
9. வாயைக் கொப்புளிக்கும் நீரையோ, எச்சிலையோ வலதுப்பக்கம் துப்பக்கூடாது.
10. அன்னம், நெய், உப்பு ஆகிய மூன்றையும் கையால் பரிமாறக்கூடாது. கரண்டியால் மட்டுமே பரிமாற வேண்டும்.
11. தாமிரப்பாத்திரத்திலும், வெண்கலப் பாத்திரத்திலும் இளநீரை வைக்கக்கூடாது .
12. ஆமணக்கு இலையிலும், பனை ஓலைக்கூடாயிலும் வைத்த பூக்களை பூஜைக்குப் பயன்படுத்தக் கூடாது.
13. கடும்வெயில், மயானப் புகை, தன்னைவிட அதிக வயதுள்ள பெண்ணோடு உறவு கொள்ளுதல், இரவில் தயிர் அன்னம் சாப்பிடுதல், தேங்கிய குட்டைகளில் நீரைப் பருகுதல் ஆகியவை ஒரு மனிதனின் ஆயுளைக் குறைக்கும்
14. இருகைகளாலும் தண்ணீர் குடிக்கக் கூடாது. டம்ளர் அல்லது அதற்குரிய பாத்திரங்களிலேயே நீரைப் பருக வேண்டும்.
15. இஞ்சி, பாகற்காய், கஞ்சி, கட்டித்தயிர், கீரைகள், நெல்லிக்காய், வெங்காயம் ஆகியவற்றை இரவில் சாப்பிடக்கூடாது.

Newstm.in

newstm.in

Tags:
Next Story
Share it