விஞ்ஞானமே வியக்கும் மாயை – ‘ஓம்’

நாம் கருவில் பயணிக்கத்தொடங்கிய போதே ஓம் என்னும் உருவத்துடன் தான் வளர்ந்தோம். நமது உடலில் உள்ள உறுப்புகளில் ஒன்றான கேட்கும் திறன் கொண்ட காது கூட ஓம் என்னும் உருவத்தோடு தான் பொருந்தியிருக்கிறது. ஓம் மந்திரத்தை சொல்பவனும் கேட்பவனும் விரும்பிய அனைத்தையும் பெறுவான் என்று கதோபநிடதம் கூறுகிறது.
 | 

விஞ்ஞானமே வியக்கும்  மாயை – ‘ஓம்’

மந்திரம் சொன்னால் நினைத்தது நடக்குமா?இது என்ன மாயையா? விஞ்ஞான உலகில் விண்வெளியில்  வாழ பிரயாணப்படுகிற காலத்தில் இருக்கிறோம் என்கிறீர்களா? ஆம் விஞ்ஞானமே வியக்கும்  மாயைதான்  ஓம் என்னும் பிரணவ மந்திரம். அதில் மூழ்கி கட்டுண்டவர்களால் தான் அதை உணரவும் முடியும். பிரம்மத்தையும், தன்னையும் அறிய முடியும். எனக்கும் ஆசைதான்.  ஆனால் ஆன்மிக பாதையில் இருப்பவர்களுக்கு மட்டுமே இதெல்லாம் சாத்தியம் என்று சொல்பவர்களுக்கு இறைவனும், பஞ்சபூதங்களைக் கொண்ட பிரபஞ்சமும் இணைந்து எளிமையாக்கிய  முழு மந்திரம் ஓம்.

 அ+உ+ம் என்ற மூன்று எழுத்துக்களை உள்ளடக்கிய ஓம் என்னும்  பிரணவ மந்திரம் நம்மை  ஆன்மிக உலகிற்கு அழைத்துச்செல்லும் பாதையின் முதல்படி என்று கூட சொல்லலாம். இவற்றுள் அ என்பது  கடவுளையும், உ என்பது உலகில் வாழும் உயிர்களையும், ம் என்பது பஞ்சபூதங்களையும் குறிக்கும். அ-வும், உ-வும் உயிருள்ள பொருள்கள் என்பதால்  உயிரெழுத்துக்களையும், ம் -என்பது உயிரற்ற ஜடமாகிய பிரபஞ்சம் என்பதால் மகாரத்தின் மூலம் குறிக்கப்படுகிறது. 

நாம் கருவில்  பயணிக்கத்தொடங்கிய போதே ஓம் என்னும் உருவத்துடன் தான் வளர்ந்தோம். நமது உடலில் உள்ள உறுப்புகளில் ஒன்றான கேட்கும் திறன் கொண்ட காது கூட ஓம் என்னும் உருவத்தோடு தான் பொருந்தியிருக்கிறது.  ஓம் மந்திரத்தை சொல்பவனும் கேட்பவனும் விரும்பிய அனைத்தையும் பெறுவான் என்று கதோபநிடதம் கூறுகிறது.வாயைத் திறந்து ஓம் என்னும் மந்திரத்தை உச்சரிக்கும் போது நமது நாக்கு  மேல் வாயைத் தீண்டாமல் தொண்டையின்  மூலமாய் பிறக்கும். இந்த  ஓசை யானது நாம் பேசும் போது  உண்டாகும் எல்லா ஒலியையும் விட மிகவும் இயற்கையானது.இதைப்  பற்றி யூகிமுனி தனது வைத்திய சிந்தாமணி நூலில் ...

அவ்வென்னும் அட்சாத்தில் நாடிதோன்றும்

அந்நாடி தானின்று தத்துவந் தோன்றும்

எவ்வென்னு மெலும்பு தசை புடை நரம்பும்

ஈலிட்டு பழுவோடிரண்டு கொங்கையுமாம்

முவ்வென்று முட்டுக்கால் விளையீரெட்டாம்

முட்டியமைத் தங்ஙனே யோருருமாக்கி "என்று கூறியிருக்கிறார்.எவனொருவன் பரம்பொருளாகிய ஓம் என்ற ஓரெழுத்துச் சொல்லை உச்சரித்துக்கொண்டும் என்னை மனதில் கொண்டும் இப்பூத உடலை விட்டுப் புறப்படுகின்றானோ அவன் எல்லாவற்றிற்கும்  மேலான கதியை அடைகிறான் என்கிறது பகவத் கீதை.

ஓம் என்பதை உச்சரிப்பதில் கூட  ஒரு தாத்பரியம் இருக்கின்றது.  ஓ வின் உச்சரிப்பைக் குறைத்து ம்- இன் உச்சரிப்பை நீட்டித்து  சொல்ல வேண்டும். ஓ என்று தொடங்கும் போது மனதுக்குள் உங்கள் இஷ்ட தெய்வத்தையோ, குருவையோ நினைத்து ம்- என்று சொல்லும்போது அவர்கள் உருவத்தை உங்கள் கண் முன் நிறுத்த வேண்டும்.  இவற்றோடு நாசிப்பயிற்சியையும் சேர்த்து பழக்க வேண்டும்.  உங்கள் கவனம்  சிதறாமல் எண்ணம் முழுவதும் உங்கள் இஷ்ட தெய்வத்தை மட்டுமே வியாபிக்க செய்ய வேண்டும்.  ஆரம்ப காலங்களில் இது உங்களுக்கு கடினமாக இருந் தாலும் தொடர்ந்து ஒருமுகத்துடன் செய்து வந்தால்  மனதை ஒருமுகப்படுத்தலாம்.  ஏனெனில் ஓம் என்னும் மந்திரத்தை உச்சரிக்க உச்சரிக்க நம் உடலில் உள்ள ஏழு சக்கரங்களும் தூண்டப்பட்டு நமக்குள் பெரிய மாறுதலை ஏற்படுத்தும். நமது கவனத்தைச் சிதறவிட செய்யாது. மன அழுத்தம் என்னும் பாதிப்பிலிருந்து மீள செய்யும். ஆம் மனிதனுக்குள் எப்போதும்  தெய்வசக்தியும், அசுர சக்தியும் போட்டி போட்டு கொண்டே இருக்கும். அசுரசக்தியை வெல்லும் சக்தி  ஓம் என்னும்  மந்திரத்துக்கு உண்டு. ஓம் என்னும் ஒலி அதிர்வுக்கு   சக்தி வாய்ந்த  ஆற்றல்கள் உண்டு என் பதைக் கண்கூடாக உணரலாம்.

காலையும், மாலையும் 15 நிமிடங்கள் ஓம் என்னும் மந்திரத்தை ஒருமுகத்துடன் செய்து வந்தால் ஆன்மிக பேரின்பத்தை நீங்கள் உணர முடியும்.  ஓம் மந்திரத்தை உள்வாங்கி உச்சரித்தால் அந்த மந்திர அதிர்வலைகள் நம் உடலெங்கும்  ஒருவித காந்தசக்தி போல பரப்புவதை உணரலாம். ஓம் என்பது பிரபஞ்சத்தில் இருந்துவரும் சப்தம். பூமி சுற்றும் போது எழும்பும் ஒலி அலைகள். இவை தான் பிரபஞ்சத்தை இயக்குகின்றன.  நம் உயிரில் இருந்து பிராணனில் இருந்து ஓம் மந்திரம் உருவாகி வெளியில் வருவதால் தான் இதற்கு பிரணவ மந்திரம் என்ற பெயர் வந்தது.திருமூலர்  இது பற்றி திருமந்திரத்தில்

“ஓமெனு ஓங்காரத் துள்ளே ஒருமொழி

ஓமெனு ஓங்காரத் துள்ளே உருவம்

ஓமெனு ஓங்காரத்துள்ளே பலபேதம்

ஓமெனு ஓங்காரம் ஓண்முத்தி சித்தியே ” என்று கூறியிருக்கிறார்.

ஓம் மந்திரத்தை விஞ்ஞானிகளும் விட்டுவைக்கவில்லை. கடந்த சில வருடங்களுக்கு முன்பு நாசா  நடத்திய ஆய்வில்  சூரியனில் இருந்து  ஓம் என்னும் ஓசை  வெளிவந்துகொண்டிருப்பதைக் கண்டுபிடித்தனர். ஆனால் நம் முன்னோர்கள்  பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இதைக் கண்டறிந்துள்ளனர்.

ஆரோக்யம் குறையாமல் காக்கவும், கவனத்தை ஒருமுகப்படுத்தவும், மன அழுத்தத்திலிருந்து விடுபட்டு விரும்பியதை அடையவும், மன உறுதியைப் பெறவும் ஓம் என்னும் மந்திரத்தை அனுதினமும் உச்சரியுங்கள். மாற்றத்தை உணர்வீர்கள்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP