Logo

விஞ்ஞானமும் ஆன்மீகமும் - குண்டலினி சக்தியை தட்டி எழுப்பும் தோர்பிகரணம்

மனிதனின் உடலில் ஆறு ஆதாரங்கள் உண்டு.அவை ஒவ்வொன்றுக்கும் ஒரு தெய்வசக்தி உண்டு. அந்த அருள் கிடைத்தால் அந்த ஆதாரத்தை விழிப்படையச் செய்து அதன் சக்தியை நாம் பெறலாம்.
 | 

விஞ்ஞானமும் ஆன்மீகமும் - குண்டலினி சக்தியை தட்டி எழுப்பும் தோர்பிகரணம்

நாம் கடைப்பிடிக்கும் சம்பிரதாயங்களும் நாம் செய்யும் சடங்குகளும் ஆன்மிகத்துடனும், விஞ்ஞானத்துடனும் தொடர்புடையவை. ஒவ்வொரு கடவுளையும் ஒவ்வொரு விதமாக வழிபடுகிறோம்.  எல்லோருக்கும் எல்லா கடவுள்களையும் பிடிக்கும் என்று சொல்ல முடியாது.ஆனால் எல்லோருக்கும் இந்த ஒருவரை பிடிக்காமல் இருக்க முடியாது என்று சொல்ல முடியும். பார்க்க பார்க்க பார்த்துக்கொண்டே இருக்கத்தோணும் முழுமுதற் கடவுள்   விநாயகப்பெருமான் தான் அவர். இவரை நினைத்து வழிபட்டாலே மனதில் பாரம் குறைந்து மனம் இலேசாகும். குழந்தைக் குணம் கொண்ட பிள்ளையார் பக்தர்களையும் குழந்தைகளாக பாவித்து வழிபட வைப்பவர்.

விஞ்ஞானமும் ஆன்மீகமும் - குண்டலினி சக்தியை தட்டி எழுப்பும் தோர்பிகரணம்

ஒருமுறை மாமனான விஷ்ணுவைப் பார்க்க வந்த குழந்தைப் பிள்ளையார் விஷ்ணுவின் கையிலிருந்த சக்கராயுதத்தைப் பார்த்து பரவசமாகி அவற்றைக் கையில் வைத்து விளையாடத்தொடங்கினார். குழந்தைப் பிள்ளையாரின்  குறும்பை ரசிக்க தொடங்கிய விஷ்ணு விடைபெறும் போது தனது சக்கராயுதத்தை வேண்ட, குழந்தை பிள்ளையார் அடம்பிடித்தார். ஆயுதங்களுக்கெல்லாம் ஆயுதமாயிற்றே சக்கராயுதம். அசுரர்களை ஓடஓட விரட்டும் ஆயுதமாயிற்றே. காக்கும் கடவுளுக்கு குழந்தைப் பிள்ளையாரிடம் தன் ஆயுதத்தை மீட்க தெரியவில்லை. மகாவிஷ்ணு கெஞ்ச குழந்தைப் பிள்ளையார் மிஞ்சினார். கையிலிருந்த சக்கராயுதத்தை வாயில் போட்டுக்கொண்டு  சிரித்தார். குறும்புக்கு இலக்கணம் படைத்த விஷ்ணுவிடம் குறும்பா... ஆனாலும்  பிள்ளையாரின் வழியிலேயே சென்று தன் ஆயுதத்தை வாங்க நினைத்த விஷ்ணு... விநாயகரைச் சிரிக்க வைக்க  தன் காதுகளைக் கைகளால் பிடித்தபடி  உட்கார்ந்து எழுந்து உட்கார்ந்து எழுந்து கெஞ்ச பார்த்துக்கொண்டிருந்த குறும்பு பிள்ளையாருக்கு சிரிப்பு வந்துவிட்டது. தொந்தியும் தொப்பையுமாய் குண்டுக்குழந்தையாய் குறும்புகள் மின்ன குதூகலித்து சிரித்த பிள்ளையாரின் வாயிலிருந்து சக்கராயுதம் கீழே விழ விஷ்ணுவும் எடுத்துக்கொண்டார். 

தோர்பி என்றால் கைகள்...  கர்ணம் என்றால் காது.. இவை இரண்டும் இணைந்து தோர்பிகரணமாயிற்று இதுதான் தோப்புக்கரணமாக மருவிவிட்டது. அதனால்தான் பிள்ளையாரை மகிழ்விக்கும் விதமாக வழிபடும்போது கோரிக்கையோடு தோப்புக்கரணமும் வழக்கமாயிற்று. 
ஒரு முறை அகத்தியர்  கமண்டலத்தில் கொண்டு வந்த கங்கை நதியை காகம் வடிவில் வந்த விநாயகர் கவிழ்த்து அந்தணச் சிறுவராக அவர் முன் வந்தார். கோபம் கொண்ட அகத்தியர் பிள்ளையாரின் தலையில் குட்டினார். அப்போது விநாயகர் விஸ்வரூபமெடுத்து உலக நன்மைக்காக காவிரியை உருவாக அப்படிச் செய்ததாக கூறினார். அகத்தியர் தன் தவறை உணர்ந்து தன் தலையிலேயே குட்டிக் கொண்டார். அன்று முதல் அரச மரத்தடி விநாயகராக இருந்தாலும், ஆலய சன்னிதியில் அமர்ந்திருந்தாலும் அவரைக் கண்டதும் கைகள் நெற்றியிலும், காதிலும் தானாகவே கரணம் போட வைக்கும். அவ்வாறு தோப்புக்கரணம் போடும் போதும், நெற்றியில் குட்டிக்கொள்ளும் போதும் ஓம் கணேசாய நம என்ற மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.

விஞ்ஞான ரீதியாக பார்த்தால் நெற்றிப்பொட்டில் நாம்  இரண்டு கைகளையும் மடக்கி ஐவிரல்களால் குட்டிக்கொள்ளும்போது அந்த இடங்களில் உள்ள பின்னல் நரம்புகளில் அந்த அதிர்வு பரவி, நம் உடம்பில் பின்னிக்கொண்டிருக்கும் நரம்புகளில் ஒரு துடிதுடிப்பை உண்டாக்குகிறது. இந்தத் துடிதுடிப்பு மூலாதாரத்தில் உறங்கிக் கொண்டிருக்கும் குண்டலினி சக்தியில் இந்த அசைவு  பதியவைக்கப்படுகிறது. பிறகு இரண்டு காதுகளையும் பிடித்து தோப்புக்கரணம் போடும் போது குண்டலினி சக்தியில் அசைவை ஏற்படுத்துகிறது. இப்படி பலமுறை தோப்புக்கரணம் போடும்போது குண்டலினி சக்தி மூலாதாரத்திலிருந்து மேலெழும்பி புருவ மத்தியில் கொண்டு வந்து நிறுத்துகிறது. மனிதனின் உடலில்  ஆறு ஆதாரங்கள் உண்டு.அவை ஒவ்வொன்றுக்கும் ஒரு தெய்வசக்தி உண்டு. அந்த அருள் கிடைத்தால் அந்த ஆதாரத்தை விழிப்படையச் செய்து அதன் சக்தியை நாம் பெறலாம். இனி அரசமர பிள்ளையாராக இருந்தால் என்ன.. ஆலயத்தில் இருந்தால் என்ன... எங்கு காணினும் உன் பிள்ளைமுகமடா என்று பிள்ளையாரை நினைத்து வழிபட்டபடி, இதோஎண்ணிக்கொள் ……என்று தோர்பிகரணம் போட வேண்டியதுதான். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP