பக்தரின் எண்ணம் அறிந்து கண்டித்த சாய்பாபா

சீரடியில் ஸாடே, என்று ஒரு அரசாங்க அதிகாரி வசித்து வந்தார். இவர் சாய்பாபாவின் பக்தர்களில் ஒருவராவார். அவர் அவ்வூரைச் சேர்ந்த ஒரு பெண்மணியைச் பற்றி நண்பர்கள் கூறக் கேள்விப்பட்டார்.

பக்தரின் எண்ணம் அறிந்து கண்டித்த சாய்பாபா
X

சீரடியில் ஸாடே, என்று ஒரு அரசாங்க அதிகாரி வசித்து வந்தார். இவர் சாய்பாபாவின் பக்தர்களில் ஒருவராவார். அவர் அவ்வூரைச் சேர்ந்த ஒரு பெண்மணியைச் பற்றி நண்பர்கள் கூறக் கேள்விப்பட்டார். அழகாக இருக்கும் அவள் ஒரு விலைமாது! ஆனால் அவளும் சாய்பாபா மீது அதிக பக்தி கொண்டவள். அவளைப் பார்க்கும் ஆவல் ஸாடேக்கு எழுந்தது, சாதாரண மனிதர்களுக்கே உரியவிதத்தில். அன்று காலைப்பொழுதில் வழக்கம் போல சாய்பாபாவைத் தரிசிக்க மசூதிக்கு வந்தார் ஸாடே.

அவர் மனதில் ஒடிய கெட்ட எண்ணம் சாய்பாபாவிற்குத் தொலைக்காட்சிப் பெட்டியில் ஒடும் காட்சி போலத் தெளிவாகவே தெரிந்தது. அதனை வேறுவிதமாக ஸாடேயிடம் கேட்டார் சாய்பாபா. ஸாடே ஒன்றும் புரியாமல் பாபா அருகில் நின்று கொண்டே இருந்தார். சிறிது நேரத்துக்குப் பிறகு பாபா மெல்லத் திரும்பினார். ஸாடேயைப் பார்த்து “ஸ்கூலுக்குப் போனாயா?” என்றார். ஸாடேக்கு எதுவும் புரியவில்லை. திருதிருவென விழித்தார். ஆனால், இது ஸாடேவிற்குத் தெரிந்திருக்கவில்லை. ஆகவே சாய்பாபா கேள்வியின் உள் அர்த்தம் அவருக்குப் புரியவில்லை. எனவே வெகுளித்தனமாகப் சாய்பாபாவின் கேள்விக்குப் பதில் கூறினார்.

“என்ன சாய்பாபா, இப்படி கேட்கிறீர்கள்? நான் ஸ்கூலுக்கு போகாமல் எப்படி பட்டம் பெற்றிருக்க முடியும்? ஸ்கூலுக்கு போய் படித்ததால் தானே இன்று நான் அரசு உயர் அதிகாரியாக பதவியில் இருக்க முடிகிறது” என்றார்.
இந்தப் பதிலைக் கேட்ட சாய்பாபா உள்ளுக்குள் சிரித்துக் கொண்டார். அப்புறம் இது பற்றி அவரிடம் வேறு எதுவும் பேசவில்லை. எனவே சாய்பாபாவிற்கு இதைப்பற்றி தெரியாது என்ற எண்ணத்துடன் தைரியமாக இரவில் அந்தப் பெண்ணைத் தேடிச் சென்றார் ஸாடே. அன்றிரவு ஸாடே மீண்டும் அந்த விலை மாது வீட்டுக்குச் சென்றார்.

சிறிது நேரம் அந்த பெண்ணுடன் பேசிக் கொண்டிருந்தார். பிறகு அவர் அந்த பெண்ணுடன் படுக்கை அறைக்குள் செல்ல முயன்றார். அடுத்த வினாடி அந்த அறைக் கதவு தானாகத் திறந்து கொண்டது. அங்கு சாய்பாபா நின்று கொண்டிருந்தார். “என்ன... ஸாடே நேற்றே நான் உன்னை எச்சரித்தேன். நீ அதை கவனத்தில் கொள்ளவில்லை. நீ நரகத்தை நோக்கி செல்லும் செயல்களில் ஈடுபடுகிறாய்” என்று சொன்னார் சாய்பாபா. அப்போது அவருக்கு சாய்பாபா, ஸ்கூலுக்குப் போனாயா என்று கேட்டது நினைவுக்கு வந்தது. அதன் பிறகே ஸ்கூல் என்பது அந்த விலைமாதுவின் வீட்டை குறிக்கும் என்பது அவருக்கு தெரிய வந்தது. மசூதிக்குள் சென்று சாய்பாபா காலடியில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினார். தன்னை மிகப்பெரும் நரகத்தில் இருந்து காப்பாற்றியதற்காக சாய்பாபாவுக்கு நன்றி தெரிவித்தார். சாய்பாபாவால் மனசஞ்சலம் தீர்க்கப்பட்ட பிறகு அவர் ஸ்கூல் பக்கமே எட்டிப்பார்க்க வில்லை.
ஓம் ஸ்ரீ சாய்ராம்!!!


டாக்டர். வி. ராமசுந்தரம்
ஆன்மீக எழுத்தாளர்

newstm.in

Tags:
Next Story
Share it