சோறு கண்ட இடம் சொர்க்கம்!

சிவனேபிரானே உலகிலுள்ள ஸகல ஜீவ ராசிகளுக்கும் படியளப்பவர் அதனால் அந்த ஈசனுக்கு அன்னத்தை அபிஷேகம் செய்வோருக்கும் அதனை தரிசிப்போருக்கும் சொர்க்கம் கிடைக்கும்.

சோறு கண்ட இடம் சொர்க்கம்!
X

உலகில் வாழும் உயிரினங்களுக்கு எல்லாம் உணவளிக்கும் இறைவனுக்கு நன்றி கூறும் விதமாகவே ஐப்பசி பவுர்ணமி நாளில் ,அன்னாபிஷேகம் செய்கின்றனர். இந்த அன்னாபிஷேகத்தை பார்ப்பவர்களுக்கு சொர்க்கம் நிச்சயம். இதைத்தான் சோறு கண்ட இடம் சொர்க்கம் என்று கூறியுள்ளனர்.

கல்லினுள் வாழும் தேரை முதல் கர்ப்பப்பையில் வளரும் உயிர்வரை அனைத்து உயிர்களுக்கும் உணவு அளிப்பவன் ஈசன். அதனால் அன்னத்தைப் பற்றி அஹமன்னம், அஹமன்னதோ’ என்று சாமவேதத்தில் குறிப்பிடப்படுகிறது.

எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருள் அன்னத்தின் வடிவில் இருக்கிறான்' என்பதே இதன் பொருள். அன்னம் ப்ரபிரம்மம்' என்பர். இதற்கு 'சோறே தெய்வம்' என்று பொருள். சாப்பாட்டை தெய்வம் போல கருதவேண்டும் என்பதற்காகவே,ஐப்பசி பவுர்ணமி நாளில், அனைத்து சிவாலயங்களிலும், சிவனுக்கு அன்னாபிஷேகம் செய்கின்றனர்.

சிவனேபிரானே உலகிலுள்ள ஸகல ஜீவ ராசிகளுக்கும் படியளப்பவர் அதனால் அந்த ஈசனுக்கு அன்னத்தை அபிஷேகம் செய்வோருக்கும் அதனை தரிசிப்போருக்கும் சொர்க்கம் கிடைக்கும்.

newstm.in

newstm.in

Tags:
Next Story
Share it