Logo

இந்த நாகலிங்கத்தை தரிசித்தால் மனதில் உள்ள தீயஎண்ணங்கள் நீங்கி மனத்தெளிவு உண்டாகும்

சிவனுக்கு நிறைய பெயர்கள் உண்டு. அவற்றில் ஒன்று புஜங்கபதிஹாரி.புஜங்க என்றால் நாகம். தூய்மையான பொருள் என்று சொல்லப்படும். பதி என்றால் பேணி காப்பவன், ஹாரி என்றால் கழுத்தில் அணியப்படும் ஹாரத்தை மாலையை அணிந்திருப்பவன் என்று பொருள்.
 | 

இந்த நாகலிங்கத்தை தரிசித்தால் மனதில் உள்ள தீயஎண்ணங்கள் நீங்கி மனத்தெளிவு உண்டாகும்

நமது ஐம்புலன்களான கண், காது, மூக்கு, வாய், மெய் போன்றவற்றை அடக்கி நல்வழியில் செலுத்த வேண்டும். அப்படி இருந்தால் இவையே நம் வாழ்வுக்கு அழகூட்டும் ஆபரணமாகிவிடும். இவற்றில் ஏதேனும் ஒன்று தீய வழியில் சென்றாலும் கூட அம்மனிதன் விஷம் கக்கும் நாகம் போல துன்பத்துக்கு ஆளாகலாம். இதை நமக்கு உணர்த்தவே சிவன் ஐந்துதலை நாகப்பாம்பை ஆபரணமாக அணிந்துள்ளார். இந்த பாம்பின் ஐந்து தலையும் ஐம்புலன்களைக் குறிக்கும். அதனால்தான் நாகலிங்கத்தின் மீது தங்கம், வெள்ளி, ஈயம், செம்பு, இரும்பு கலந்த பஞ்சலோக நாகத்தை லிங்கத்தின் மீது ஆபரணமாக செலுத்துவார்கள்.

சிவனுக்கு நிறைய பெயர்கள் உண்டு. அவற்றில் ஒன்று புஜங்கபதிஹாரி.புஜங்க என்றால் நாகம். தூய்மையான பொருள் என்று சொல்லப்படும். பதி என்றால் பேணி காப்பவன், ஹாரி என்றால் கழுத்தில் அணியப்படும் ஹாரத்தை மாலையை அணிந்திருப்பவன் என்று பொருள். அதாவது தூய்மையான பொருளைப் பேணி பாதுகாத்து, தன்னுடைய கழுத்தில் மாலையாக அணிந்து கொள்பவனாகிறான். நாகங்கள் ஏணிகள் போன்றவை அவற்றின் வாலைப் பிடித்துக்கொண்டால் ஆன்மிகம் என்னும் உச்சியை  எளிதில் அடையலாம். 

சிவனின் தலை, கழுத்து, கைகள் |(2), மணிக்கட்டு (2) இடுப்பு, தொடை (2) என ஒன்பது நாகங்கள் சிவனுடைய ஆபரணமாக  இருக்கின்றன. இப்படி சிவனின் ஸ்வரூபம் முழுவதும் தூய்மையான  நாகம்  பரவியிருக்கின்றன. இந்த  ஒன்பதுவிதமான நாகமே நவநாக் என்றும் அழைக்கப்படுகிறது. சிவனின் ஆயுதமாக இந்த நாகம் இருக்கிறது. இவ்வளவு ஏன் சர்வ தெய்வங்களின் ரூபங்களும் சமயத்தில் நாகமாக இருந்துள்ளதாக சொல்லப்படுகிறது. நம் உடம்பிலும் பஞ்ச வாயுவாக ஐந்துவிதமான நாகங்கள் உண்டு. அவற்றில் பெண்பாலான ஒன்றைத்தான் குண்டலினி என்கிறோம். ஆன்மிகத்தை விரும்பி ஏற்கும் போது எஞ்சிய நான்கையும் நம் உடம்பில் காணமுடியும்.

மூலாதாரத்தில் இருக்கும் குண்டலினி சக்தியாகிய சிவம் அமைதியாக அசைவற்ற பாம்பைப் போல் தூங்குகிறது.இதை தட்டி எழுப்பி முதுகுத்தண்டின் வழியாக தலையில் இருக்கும் சக்தியோடு சிவம் இணையும் போது அளப்பரிய ஞானம் உண்டாகும். இந்தத் தத்துவத்தைவிளக்கவே குண்டலினி சக்தியான பாம்பை சிவன் தன்னுடைய கழுத்தில் அணிந்திருப்பது புலப்படுகிறது. இந்த நாகலிங்கத்தைத் தரிசித்தால் மனதில் உள்ள தீயஎண்ணங்கள் நீங்கி மனத்தெளிவு உண்டாகும் என்பது ஐதிகம். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP