Logo

இன்று விரதம் இருந்தால் நிம்மதி நிலைக்கும்!

ஏகாதசியன்று உண்ணாமல் இருப்பவர்களை கேலி செய்து, அவர்களை உண்ண வைப்பவன், நரகத்திலும் மிகக்கீழான நரகத்திற்கு செல்வான்.
 | 

இன்று விரதம் இருந்தால் நிம்மதி நிலைக்கும்!

 ஐப்பசி மாத வளர்பிறை ஏகாதசி ‘பாபாங்குசா’ என்றும், தேய்பிறை ஏகாதசி ‘இந்திரா’ என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ஏகாதசியில் விரதம் இருப்பதால், வறுமை ஒழியும், நோய் அகலும், பசிப்பிணி நீங்கும், நிம்மதி நிலைக்கும், தீர்த்த யாத்திரை சென்ற புண்ணியம் கிடைக்கும்.

ஏகாதசி விரதம் இருப்பவர்கள் பூரண உபவாசம் இருக்க வேண்டும். குளிர்ந்த நீர் குடிக்கலாம்.  ஏழு முறை துளசி இலை சாப்பிட வேண்டும். பட்டினி கிடப்பதால், ஜீரண உறுப்புகளுக்கு ஓய்வு கிடைக்கிறது. குளிர்ந்த நீர், வயிறை சுத்தமாக்குகிறது.

வைகுண்டம் நல்லவர்களின் காலடி பட்டவுடன் திறந்து கொள்ளும். ஏகாதசி திதியில் முழுமையாக திறந்திருக்கும். ஏகாதசி திதி நாட்களில் தாய், தந்தையின் நினைவு நாள் வந்தால், அன்று திவசம் செய்யக் கூடாது. மறுநாள், துவாதசி தினத்தில் செய்வது தான் சிறப்பு. 

கோவில்களில் வழங்கப்படும் பிரசாதத்தை சாப்பிடக் கூடாது.
ஏகாதசி நாளில், கோவில்களில் பிரசாரதம் தருவதை தவிரக்க வேண்டும்.
 ஏகாதசியன்று உண்ணாமல் இருப்பவர்களை கேலி செய்து, அவர்களை உண்ண வைப்பவன், நரகத்திலும் மிகக்கீழான நரகத்திற்கு செல்வான். 

இந்நாளில் துளசி இலை பறிக்கக்கூடாது. தேவையானதை முதல்நாளே பறித்து வைத்து விட வேண்டும்.
 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP