முமூர்த்திகள் வாழும் அரசமரத்தை எத்தனை முறை சுற்ற வேண்டும்?

தெய்வ வடிவங்களாகக் கருதப்படும் பலவகை மரங்களுள் அரசமரம் முதன்மையானது. இம்மரத்தின் இலைகள் தேவர்களுக்கு இருக்கைகளாகவும் வசிப்பிடமாகவும் உள்ளன. நான்கு வேத ரூபமானதும், மும்மூர்த்திகளின் ஓருருவாக விளங்குவதும் அரசமரமே என்று வேதங்கள் போற்றுகின்றன.
 | 

முமூர்த்திகள் வாழும் அரசமரத்தை எத்தனை முறை சுற்ற வேண்டும்?

தெய்வ வடிவங்களாகக் கருதப்படும் பலவகை மரங்களுள் அரசமரம் முதன்மையானது. இம்மரத்தின் இலைகள் தேவர்களுக்கு இருக்கைகளாகவும் வசிப்பிடமாகவும் உள்ளன. நான்கு வேத ரூபமானதும், மும்மூர்த்திகளின் ஓருருவாக விளங்குவதும் அரசமரமே என்று வேதங்கள் போற்றுகின்றன. 

இது எங்கும் எந்தச் சூழலிலும் வளரக்கூடிய மரமாகும். அரச மரமானது சமஸ்கிருத மொழியில் அஸ்வத்தம், பிப்பலம், போதிவிருட்சம், சலதளம், குஞ்சராசனம், பூதாவாசம், அக்னிகர்பம்,
விருட்சராஜம், சமீபதி, வனஸ்பதி, வைணவம், யக்ஞாங்கம்,இந்த்ரானுஜம், விருக்ஷேந்திரம், நிம்பபதி, ஹயாம்சஜம் என்னும் பதினாறு பெயர்களால் போற்றப்படுகிறது.

சூரியனின் தேரிலுள்ள ஏழு குதிரைகளின் அம்சமாக அரசமரம் பூமியில் தோன்றியதென்பர். எனவே இம்மரத்தை எப்போதும் ஏழுமுறை வலம்வரவேண்டும். உதயகாலத்தில் பூஜிப்பதும் முக்கியம். 

ஒவ்வொரு கடவுளுக்கும் ஒவ்வொரு மரத்தைக் குறிப்பிட்டிருப்பினும், அனைத்து தெய்வங்களுக்கும் விருப்பமானது அரச மரம் ஒன்றே. இம்மரத்தின் அடிப்பகுதியில் பிரம்மாவும், நடுப்பகுதியில்
மகாவிஷ்ணுவும், மேல்பகுதியில் சிவனும் நித்திய வாசம் செய்வதாகக் கூறப்படுகிறது.

"மூலதோ பிரம்ஹரூபாய
மத்யதோ விஷ்ணு ரூபிணே/
ஆக்ரத: சிவரூபாய
விருக்ஷராஜாய தே நம//'
என்னும் மந்திரம் கூறி அரசமரத்தை வணங்கவேண்டும்.

பாவங்கள், தோஷங்கள், நோய்கள் அகலவும், உடல்நலம் பெறவும், மகப்பேறு அடையவும்
அரசமரத்தை வலம் வருதலும், அரசமரத்தடியில் விநாயகர் அல்லது நாகர் பிரதிஷ்டை செய்து வழிபடுதலும் ஏற்றது.
 
ஞாயிறு அன்று அரச மரத்தை வலம் வந்து சூரியனைப் பிரார்த்தனை செய்தால் எல்லாவிதமான துன்பங்களும் விலகும்.

திங்கட்கிழமை சிவபெருமானை மலர்களால் அர்ச்சித்து அரசமரத்தை வலம் வந்தால் சவுபாக்கியங்களும் கிட்டும்.

செவ்வாய்க்கிழமை அன்னை உமா தேவியை அர்ச்சித்து அரச மரத்தை வலம் வந்தால் காரியசித்தி, உத்தியோக உயர்வு முதலான பல்வேறு வெற்றிகளும் அடையலாம்.

புதன்கிழமை தேவகணங்களை நமஸ்கரித்து அரச மரத்தை வலம் வருபவர்களுக்கு, விரும்பிய லாபங்கள் கிடைக்கும்.வர்த்தகர்களுக்கு சுபிட்சம் தரும்.

வியாழன் அன்று தட்சிணாமூர்த்தியை வழிபட்டு,  மரத்தை பிரதட்சிணம் செய்தால் கல்விஞானமும் கீர்த்தியும் பெற முடியும்.

வெள்ளிக்கிழமை, லட்சுமியை நமஸ்கரித்து, அரசமரத்தை வலம் வந்தால் அமோக ஐஸ்வரியமும், யோக
சுபிட்சங்களும் குவியும்.

சனியன்று,  மகாவிஷ்ணுவைப் பணிந்து அரச மரத்தை வலம் வந்தால் சர்வ துக்கமும் போகும்.
அரச மரத்தை ஏழு முறை சுற்றினால் இஷ்ட சித்தி; ஒன்பது முறை சுற்றினால் ஜயம்.
11 முறை சுற்றினால் சற்குணம்; 13 முறை சுற்றினால் புத்திர பிராப்தி.15 முறை சுற்றினால் ஆயுள் அபிவிருத்தி.
108 முறை சுற்றினால் தன பிராப்தி, தன விருத்தி.1008 முறை சுற்றினால் அஸ்வமேத யாக பலன்.
அரசமரத்தை விடியற்காலையில் வலம் வரவேண்டும். 

அதிகாலை முதல் 9.00 மணி வரையிலான பொழுதில் அரசமரத்தை ஈரத்துணியுடன் பிரதட்சிணம் செய்வது விரைவில் பலனைத் தரும். இம்மரத்தை சனிக்கிழமையில் மட்டுமே தொடலாம்என்பது சாஸ்திர விதி. 
அமாவாசை, ஏகாதசி, சப்தமி, பஞ்சமி ஆகிய திதிகளிலும்; சனி, ஞாயிறு, திங்கள், புதன் ஆகிய
கிழமை களிலும் அரசமர வலம்வருவது சிறப்பைத் தரும்.

 திங்கட்கிழமையில் அமாவாசை திதியும், ஞாயிற்றுக்கிழமையில்சப்தமி திதியும், செவ்வாய்க்கிழமையில் சதுர்த்தி திதியும்,புதன்கிழமையில் அஷ்டமி திதியும் சேர்ந்து வந்தால் அந்த நாள் அரிய புண்ணிய தினமாகும். அந்த நாட்களில் புண்ணிய தீர்த்தங்களில் நீராடி முடித்து, புனிதராய் இருந்தவாறு அரச மரத்தைப் பூஜிக்கவேண்டும்.

தெய்வப் பிரதிமைகள் செய்யவும்; கோவில், யாகசாலைக்கான பொருட்கள், வாகனங்கள்
செய்யவும் அரசமரம் அவசியத் தேவையாகிறது. ஆனால் மனிதர்கள் தங்கள் சொந்த உபயோகத்திற்காக வீடு
கட்டவோ இதர பொருட்கள் செய்யவோ அரசமரத்தைப் பயன்படுத்தக்கூடாது.
அரச  குச்சியின்  புகையானது ஆரோக்கியம், ஆயுளைத் தரும்.

அரசமரக் காற்றானது, நோய் நீக்கும். புனிதப்படுத்தும் சடங்குகளில் அரசமரத்தின் தேவை முதலிடம் வகிக்கிறது. விநாயகர் அல்லது விஷ்ணுவின் உருவப்பதுமைகளை முறைப்படி அரசமரத்தினால் செய்து ஜெபித்தால் மந்திரசித்தி உண்டாகும். 

மேலும் பூஜைக்குரிய சிவலிங்கம், திரிசூலம், பிம்பம், பாலாலயம், பாலபிம்பம் முதலியவற்றை இம்மரத்தில் செய்வது உரிய பயனை விரைந்தளிக்கும். அரசமரத்தடியில் தவமிருத்தலால் யோகசித்தியும்,
ஞானசித்தியும் கிட்டும். புத்தர் முதலான பல மகான்கள் அரசமரத்தடியில் தவமிருந்தே ஞானம் பெற்றனர்.
.
அரசமரத்தில் மின்காந்த சக்தியும், தாமிர சக்தியும் உள்ளது. உடல் நலமில்லாதவர்களும், மனக்குழப்பம் உள்ளவர்களும் சுத்தமான நீரில் தலைமுழுக்காடி, ஈரத்துணியுடன் தினமும் அரசமரத்தை காலையில் சுற்றிவந்தால் நாளுக்குநாள் சிறப்பாகத் தெளிவடைந்து, பரிபூரண நலம் பெறுவர்.

பொதுவாக மின்சாரமானது ஈரமான பொருட்களில் விரைவில் பரவும் தன்மைகொண்டதாகும்.
அரசமரத்தில் உள்ள மின்சார காந்த சக்தியானது அரச இலைகளின் நுனிவழியாக, ஈர ஆடையுடன் மரத்தடியில்
வலம்வரும் அடியவர்களின் உடலில் சிறிது சிறிதாகப் பரவும்.

நாளுக்குநாள் இது அதிகரிப்பதால் உடல் உபாதைகள் நீங்கும். உடல் வலிமையடைந்து ஆரோக்கியம் அடைகிறார்கள்.மரங்களிலேயே அரசமரம்தான் மிகவும் உணர்வுபூர்வமானதும் மிக புத்திசாலியான மரமும் கூட. அந்த மரத்தில் மற்ற மரங்களில் இல்லாத ஒருவகையான அமிலம் சுரக்கிறது. 

அந்த அமிலம் புத்திசாலித்தனம் வளர மிக அத்தியாவசியமான ஒன்று என்பதை மிக சமீபத்தில்தான் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர் . அரசமரம் வெளியிடும் காற்றில் பெண்களின் மாதச்சுழற்சி மற்றும் அது சம்பந்தமான சுரப்பிகள் சீரடைகின்றன என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

அரசமரத்தின் பட்டை, வேர், விதை இவற்றை பாலில் கொதிக்கவைத்து ஆறிய பின் அதில் தேன் கலந்து தொடர்ந்து, 48 நாட்கள் அருந்தி வந்தால் தாது விருத்தியடையும். பெண்களுக்கு கருப்பைக் கோளாறுகள் நீங்கும். அரச மரத்தின் இலையை, பட்டை, வேர், விதை இவற்றை இடித்துபொடியாக்கி வைத்துக்கொண்டு மாதவிலக்குக் காலங்களில் கஷாயம் செய்து அருந்தி வந்தால் மாதவிலக்கில் ஏற்படும் பிரச்சனைகள் தீரும். கருப்பைக் கோளாறுகள் நீங்கும்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP