இன்று நாள் எப்படி?

இன்று 28.09.2019 புதன் கிழமை. ஆவணி மதம் 11ம் நாள்.மாத சிவராத்திரி மற்றும் பிரதோஷம். சிவாலயங்களில் சிறப்பு வழிபாடு.
 | 

இன்று நாள் எப்படி?

இன்று 28.09.2019 புதன் கிழமை. ஆவணி மதம் 11ம் நாள்.மாத சிவராத்திரி மற்றும் பிரதோஷம். சிவாலயங்களில் சிறப்பு வழிபாடு.

குறிப்பாக மாலை 4.30 - 6.00 மணி வரை அனைத்து சிவாலயங்களிலும் சிவ லிங்கத்துக்கும், நந்திக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரத்துடன் பூஜைகள் நடைபெறும்.சிவன், பார்வதி சமேதராய் ரிஷப வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சி தரும் நாளில், சிவன் பார்வதி தரிசனம் சகல பாவத்தையும் போக்கி நன்மை பயக்கும். 

விஷ்ணுவை இஷ்ட தெய்வமாக வழிபடுவோர், பிரதோஷ காலத்தில் நரசிம்மர் கோவிலுக்கு சென்று வழிபடலாம். பிரதோஷ காலத்தில்தான் பிரகலாதனை காக்க, ஹிரண்ய கசிபுவை வாதம் செய்ய விஷ்ணு பகவான் நரசிம்மர் அவதாரம் எடுத்தார் என புராணங்களில் கூறப்பட்டுள்ளது.

இரவு 9:40 வரை பூச நட்சத்திரம் பின்பு ஆயில்யம். இரவு வரை திரியோதசி திதி பின்பு சதுர்த்தசி. மாட்ச் சிவராத்திரியும், பிரதோஷமும் கூடி வரும் விசேஷ நாள் என்பதால் இந்நாளில் கோவிலுக்கு சென்று பிரார்த்தனையில் ஈடுபடுவது நல்லது.

சித்த யோகம் கூடிய சுபதினம். சுபமுகூர்த்த தினம் கூட. பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பதற்கு ஏற்ப நல்ல காரியங்களை செய்ய இன்று உகந்த நாள். பூராடம், உத்திராடம் நட்சத்திரக்காரர்களுக்கு இன்று சந்திராஷ்டமம் என்பதால், யாரிடமும் வீண் வம்பு வேண்டாம். புதிய முயற்சிகளை 2 நாட்களுக்கு தள்ளிப்போடுவது நல்லது. எதிலும், நிதானமும், கவனமும் தேவை. 

newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP