Logo

குரு பரிகார தலங்கள்!

இறைவனுக்கும், இறைவிக்கும் நடுவில் நின்ற நிலையில், குருபகவான் ராஜ குருவாக வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இது வேறு எந்த தலத்தில் காண முடியாத தனிச்சிறப்பாகும்.
 | 

குரு பரிகார தலங்கள்!

குரு பரிகார தலங்களில் நேற்று, ஆலங்குடி கோவில் பற்றி பார்த்தோம். இன்று, தென் திட்டை கோவில் பற்றி பார்ப்போம். 

திட்டை திருத்தலம், தஞ்சாவூரில் இருந்து, 10 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் வசிஷ்டேஸ்வரர் என்ற பெயருடன், இறைவன் பக்தர்களுக்கு அருள்புரிந்து வருகிறார். இறைவியின் நாமம் மங்களாம்பிகை என்பதாகும். 

இறைவனுக்கும், இறைவிக்கும் நடுவில் நின்ற நிலையில், குருபகவான் ராஜ குருவாக வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இது வேறு எந்த தலத்தில் காண முடியாத தனிச்சிறப்பாகும்.

இங்குள்ள குரு பகவானை வேண்டினால் கல்விச் செல்வம், பொருட்செல்வம், குழந்தைச் செல்வம் உள்பட அனைத்து செல்வங்களும் எளிதில் கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP