முன்றாம்பிறை தரிசனம் - முற்பிறவி பாவங்கள் போக்கும்.

சூரியனும், சந்திரனும் ஒரே ராசியில் இணைவது அமாவாசை திதியாகும். ஒவ்வொரு அமாவாசைக்கு பிறகு வரும் மூன்றாம் நாள், மூன்றாம் பிறை நாளாகும். அமாவாசைக்கு மறுநாள் நிலவு தெரிவதில்லை.
 | 

முன்றாம்பிறை தரிசனம் - முற்பிறவி பாவங்கள் போக்கும்.

மனிதன் தனது வாழ்க்கையில், காமம், வெகுளி, மயக்கம் இந்த மூன்று குணங்களை – கர்மங்களை  கடந்து விட்டால்  முக்தி அடையலாம் என்பது இந்து தர்மத்தின் தத்துவார்த்தம். இந்த மூன்றை ஒருவர் கடந்திட உதவுகிறது  மூன்றாம் பிறை தரிசனம். சிவன், பார்வதி, விநாயகப் பெருமான் போன்ற தெய்வங்களின் சிகையை அலங்கரிக்கும் பாக்கியம் பெற்ற இந்தப் மூன்றாம் பிறையை, தரிசனம் செய்யும் வாய்ப்பும் வரமும்  பெற்றவர்களின் முற்பிறவி பாபங்கள் தொலைகிறது என்பது நம்பிக்கை.

சூரியனும், சந்திரனும் ஒரே ராசியில் இணைவது அமாவாசை திதியாகும். ஒவ்வொரு அமாவாசைக்கு பிறகு வரும் மூன்றாம் நாள், மூன்றாம் பிறை நாளாகும். அமாவாசைக்கு மறுநாள் நிலவு தெரிவதில்லை. ஆனால் மூன்றாம் நாளான துவிதியை திதியில் தெரியும் நிலவு, அழகாகவும், மிகவும் பிரகாசமாகவும் இருக்கும். இரவு வருவதற்கு முன்னே 6.30 மணியளவில் தோன்றும் பிறையே மூன்றாம் பிறை.
மனநிறைவும், மன அமைதியும் கிடைத்து மனிதனின் மனக்கஷ்டங்கள், வருத்தங்களை நீக்கும் வல்லமைப் பெற்றது மூன்றாம்பிறை தரிசனம்.

மூன்றாம்பிறை உருவான புராணப்பின்னணி இதோ :

ஒரு முறை தட்சனின் சாபத்தால், தனது பதினாறு கலைகளையும் இழந்த சந்திரன், தனது கலைகளை மீண்டும் பெறுவதற்காக சிவனை நினைத்து தியானம் செய்தார். தட்சனின் சாபத்தால் உருகும் சந்திர பகவானின் தேக நிலை குறித்து மிகவும் வருத்தம் அடைந்தனர் அவரின் இருபத்தேழு நட்சத்திர மனைவியர். உடனே தங்களின் தந்தையான தட்சனிடம் சென்று சாப விமோசனம் அளிக்கும்படி வேண்டினர் . தட்சனோ தனது அறியாமையால், அளித்த சாபத்தால் தனது புண்ணியம் அனைத்தும் குறைந்துவிட்டது என்றும், தன்னால் சாப விமோசனம் அளிக்க முடியாது என்றும் கூறினார்.இதனால் வேதனை உற்ற சந்திரனும் அவனது   27 நட்சத்திர மனைவியரும் சிவ பெருமானை நினைத்து தவம்புரிந்தனர்.  சந்திரனின் தவத்தை மெச்சிய சிவபெருமான் தன் தலைமுடியில், சந்திரனை ‘மூன்றாம் பிறையாக’ மாற்றி அருள் செய்தார்.

மூன்றாம் பிறையை எப்படி  வணங்க வேண்டும் ?

மாங்கல்ய பலன் கிடைக்க :

சந்திரனை தரிசிக்கும் வேளையில், கையில் காசை வைத்து மூடிக்கொண்டு வலமாக மூன்று முறை சுற்றி, மீண்டும் ஒரு முறை பிறையை தரிசித்து வணங்க, பெண்களுக்கு மாங்கல்ய பலம் ஏற்படுகிறது.

திங்கள்கிழமை முன்றாம் பிறை கண்டால் :

மூன்றாம் பிறையில் சந்திர தரிசனம் செய்து வணங்குவது ஆயுளை விருத்தியாக்கும், செல்வங்களைச் சேர்க்கும், பிரம்மஹத்தி போன்ற தோஷங்களை நீக்கும். அதுவும், திங்கட்கிழமையில்  வரும் மூன்றாம் பிறையை நீங்கள் பார்த்துவிட்டால், வருடம் முழுக்க நீங்கள் சந்திரனை வணங்கிய பலன்கள் எல்லாம் கிடைக்கும்.

பிறைகள் தரும் பலன்கள் :

மூன்று பிறை தொடர்ந்து தரிசித்தால் முட்டாளும்  அறிவாளி ஆவான்.

நான்கு பிறை தொடர்ந்து தரிசிக்க  நம் ஊழ்வினை தீரும்.

ஐந்து பிறை தொடர்ந்து தரிசித்தால் ஆண்டியும் அரசயோகம் பெறுவான்.

ஆறு பிறை தொடர்ந்து தரிசித்தால் திருமணம் தடையின்றி நடக்கும்.

ஏழு பிறை தொடர்ந்து தரிசிக்க தீராக் கடன்  தீரும்.

பத்து பிறை தொடர்ந்து தரிசிக்க புகழ் உச்சியில் பெருமையடைவான்.

முக்தி தரும் முன்றாம்பிறை தரிசனம் செய்வோம். முற்பிறவி பாவங்கள் போக்குவோம்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP