ஏன் தெரியுமா? - திருநீறு ஏன் அணிகிறோம்?

நம்முடைய ஒப்பற்ற இந்து மத தர்மத்தின் அடையாளங்களில் ஒன்று திருநீறு. திருநீறு தரிக்காத நெற்றி பாழும் நெற்றியாகவே கருதப்படுகிறது. முடியாண்ட மன்னனாக இருந்தாலும்,கல்வியில் எப்பேர்பட்ட மேதையாக இருந்தாலும், கடைசியில் பிடி சாம்பலாகத் தான் போகப் போகிறோம் என்பதை தான் திருநீறு உணர்த்துகிறது.
 | 

ஏன் தெரியுமா? - திருநீறு ஏன் அணிகிறோம்?

நம்முடைய ஒப்பற்ற இந்து மத தர்மத்தின் அடையாளங்களில் ஒன்று திருநீறு. திருநீறு தரிக்காத  நெற்றி பாழும் நெற்றியாகவே கருதப்படுகிறது.

முடியாண்ட மன்னனாக இருந்தாலும்,கல்வியில் எப்பேர்பட்ட மேதையாக இருந்தாலும், கடைசியில் பிடி சாம்பலாகத் தான் போகப் போகிறோம் என்பதை தான் திருநீறு உணர்த்துகிறது. பிறக்கும்போது எந்த மண்ணிலே இருந்து பிறந்தோமோ, அதே மண்ணிலே தான் மட்கி மண்ணோடு மண்ணாகப் போகிறோம் என்பதை நமக்கு நினைவுப் படுத்துவது தான் திருநீறு. 

மனித உடலில் நெற்றி என்பது மிக முக்கிய பாகம், அதன் வழியாக தான் அதிகமாக சக்தி வெளிப்படவும், உள்ளிழுக்கவும் செய்யும். வர்ம ஸாதனமான இதில் திருநீறு அணியும் போது, அது சூரிய கதிர்களின் சக்திகளை இழுத்துக் கொள்ளும் ஆற்றலை உடையது.திருநீறு இட்டுக்கொள்வது ஆன்மீக ரீதியாக மனதையும்,உடலையும் சுத்திகரிக்கும் வேலையை செய்தாலும், அறிவியல் ரீதியாகவும் பல நன்மைகளை விளைவிக்கிறது. 

காற்றில் இருக்கும் தொற்று நோய் கிருமிகள் ஒருவரை நெருங்காது காக்கும் கேடையமாக விளங்குகிறது திருநீறு.திருநீறை இரு புருவங்களுக்கு இடையில் தரிக்கக்கும் போது,அந்த இடத்திற்கும் மூளை நரம்புகளுக்கும் தொடர்பு ஏற்படுகிறது. இதனால் மூளை நரம்புகள் தூண்டப்பட்டு ஒருவர் தீர்க்கமாக சிந்திக்க தூண்டப்படுகிறார். நினைவாற்றலும் அதிகரிக்கப்படுகிறது. குறிப்பாக மாணவர்கள் நெற்றியில் திருநீறு அணியும் போது ஞாபக சக்தி அதிகரித்து, மூளை நரம்புகள் தூண்டப்பட்டு படிப்பில் அதிக கவனம் செலுத்த முடியும்.இதனால் தான் வீட்டில் உள்ள பெரியவர்கள் பிள்ளைகள் பரீட்ச்சைக்கு செல்லும் போது திருநீற்றை வைத்து அனுப்புகிறார்கள்.

இத்தகைய மகத்துவம் வாய்ந்த திருநீரை கோயிலில் பிரசாதமாக வாங்கும்போது இடது கையை கீழே வைத்து வலது கையை மேலே வைத்து வாங்க வேண்டும். இடது கை விரலால் நெற்றியில் திருநீறு இடக்கூடாது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP