Logo

எட்டு ஐஸ்வரியங்களயும் அருளும் அஷ்ட பைரவர்

சிவாலயங்கள் எல்லாவற்றிலும் பைரவருக்குத் தனிச்சந்நிதி இருப்பதைக் காணலாம். அர்த்த்ஜாமபூஜை நடந்தான பிறகு பைரவருக்கு பூஜை நடக்கும். ஆலய நடைகளையெல்லாம் பூட்டியான பிறகு சாவிகளை பைரவர் அருகே வைத்துவிட்டுச் செல்வார்கள். கோயிலைக் காக்கும் பைரவர் எட்டு விதத்தோற்றங்களுடன் விளங்குபவர். எனவேதான் அஷ்டபைரவர் என்று அவர் குறிப்பிடப்படுகிறார்.
 | 

எட்டு ஐஸ்வரியங்களயும் அருளும் அஷ்ட பைரவர்

சிவாலயங்கள் எல்லாவற்றிலும் பைரவருக்குத் தனிச்சந்நிதி இருப்பதைக் காணலாம். அர்த்த்ஜாமபூஜை நடந்தான பிறகு பைரவருக்கு பூஜை நடக்கும். ஆலய நடைகளையெல்லாம் பூட்டியான பிறகு சாவிகளை பைரவர் அருகே வைத்துவிட்டுச் செல்வார்கள். கோயிலைக் காக்கும் பைரவர் எட்டு விதத்தோற்றங்களுடன் விளங்குபவர். எனவேதான் அஷ்டபைரவர் என்று அவர் குறிப்பிடப்படுகிறார்.

காசியில் காலபைரவருக்குத் தனிக் கோயில் இருக்கிறது. சீர்காழியில் பிரம்மபுரீசுவரர் ஆலயத்தில் அஷ்டபைரவருக்குத் தனிச்சந்நிதி உள்ளது. வெள்ளிக்கிழமைத்தோறும் மலைமீது வீற்றிருக்கும் சட்டநாதருக்குப் புனுகுச்சட்டம் சாற்றி சுக்கிர வார பூஜை செய்வார்கள். அப்போது  அஷ்டபைரவருக்கும் வழிபாடு நடைபெறும். 

சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் சிற்சபையில் உள்ள பைரவர் பைரவர்சுவர்ணகாலபைரவர் என்று அழைக்கப்படுகிறார். முற்காலத்தில் தினசரி பூஜை செய்து முடித்துச் செல்பவர்களுருக்குப் பொற்காசு வழங்கியதால் இவருக்கு இவ்வாறு பெயர் வந்தது.
 காலபைரவரிடம் பிரத்தியேகமாகப் பிராத்தனை செய்து செல்லும் வழக்கம் உள்ளது. பிராத்தனை நிறைவேற்றுகையில் ஆஞ்சநேயருக்கு சாற்றுவது போலவே பைரவருக்கு வடைமாலை, சாற்றுவார்கள்.

ஆன்மாக்களைத் தமது சூல நுனியினால் தொட்டு, நொடிப்பொழுதில் அவர்களின் பாவங்களைத் தொலைத்துக் கட்டுபவர் காலபைரவர்.எல்லா சிவாலயங்களிலும் ஷேத்திர பாலராக பைரவர் விளங்கினாலும், காசி, சீர்காழி, நாகப்பட்டினம், செங்காட்டான்குடி ஆகிய தலங்களில் தனிச்சிறப்போடு விளங்குகிறார் அவர். 

சீர்காழியில் வலம்புரி மண்டபத்து யோகஸ்தானத்தில் அஷ்டபைரவர்களின் திருவுருவச் சிலைகளைக் கண்டு வணங்கலாம். அஷ்டபைரவர்களின் தோற்ற அமைப்புகள் வருமாறு:

1) அசிதாங்க பைரவர்: கிருபாமூர்த்தி. புன்முறுவல் தவழும் முகம் ,திக்கு: கிழக்கு. சக்தி: பிராமி. வாகனம் :ஹம்சம், நிறம்: வெண்மை . ஆயுதம்:கத்தி , பாராத்திரம், ருத்திராட்சமாலை கமண்ட லம்,

2) குரு பைரவர் : கிருபாமூர்த்தி புன்முறுவல் தவழும் முகம். திக்கு :தென்கிழக்கு .சத்தி: மகேஸ்வரி. வாகனம்: விருஷபம். நிறம்: படிகம்.ஆயுதம்: டங்கம், கத்தி, பாரபாத்திரம்.

3} சண்ட பைரவர்: கிருபாமூர்த்தி.புன்முறுவல் தவழும முகம். திக்கு: தெற்கு . சக்தி: கௌமாரி. வாகனம்: மயில், நிறம்: பொன். ஆயுதம்: வில்,பாணம், கத்தி  பாரபாத்திரம் .

4) குரோதனை பைரவர்: கிருபாமூர்த்தி. புன்முறுவல் தவழும் முகம். திக்கு: தென்மேற்கு. சக்தி : வைணவி. வாகனம்: கருடன். நிறம் :கறுப்பு.ஆயுதம்: சங்கம், சக்க்ரம், கதை, பாராபாத்திரம்

5) உன்மத்த பைரவர்: கிருபாமூர்த்திக்கு. புன்முறுவல் தவழும் முகம். திக்கு: மேற்கு, சக்தி: வராஹி  வாகனம்: குதிரை .நிறம்: பொன். ஆயுதம்: கத்தி, உலக்கை , கேடயம் , கபாலம்.

6) கபாலி பைரவர்: கிருபாமூர்த்தி ,புன்முறுவல் தவழும் முகம். திக்கு: வடமேற்கு. சக்தி:இந்திராணி. வாகனம்: யானை  நிறம்: பத்தமராக காந்தி. ஆயுதம்: பரசு, வஜ்ரம், கத்தி, பாராபாத்திரம்

7) பீஷண பைரவர்: கிருபாமூர்த்தி: புன்முறுவல் தவழும் முகம். திக்கு: வடக்கு. சக்தி: சாமுண்டி.. வாகனம்: சிங்கம். நிறம் : சிவப்பு. ஆயுதம்: சூலம் இரும்பு, உலக்கை, கபாலம் கத்தி .இந்த ஏழு பைரவர்களுக்கும் முக்கண்ணும்-சிகையும் இருக்கும்.

8) சம்கார பைரவர்: பத்து கைகள், பயங்கர முகம், முக்கண், சர்ப்பப்பூநூல் உள்ளவர். திக்கு: வடகிழக்கு. சக்தி: சண்டிகை, வாகனம்: நாய் நிறம் : வெண்மை . ஆயுதம்: சூலம் ,டமருகம் சங்கம் சக்க்ரம், கதை கத்தி, கபாலம், கட்வாங்கம், பாசம், அங்குசம். பார்க்கப் பயங்கரமாகத் தோற்றமளித்தபோதிலும்,  பக்தர்களுக்குக் கருணாகடாட்சம் அளிப்பவர்

தர்மத்துக்கு அரணாக இருந்து அதர்மங்களைத் தொலைக்கும் பைரவர், அணிமா , மகிமா எனப்படும் எட்டு ஐசுவரியங்களயும் அருள்பவர்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP