சஞ்சீவியாக நோய் தீர்க்கும் அர்த்தகிரி ஆஞ்சநேயர் திருக்கோயில்

பிரபலமான அப்பல்லோ மருத்துவமனைக்கும் ஆன்மீகத்துக்கும் என்ன நேரடி தொடர்பு இருக்க முடியும்?
 | 

சஞ்சீவியாக நோய் தீர்க்கும் அர்த்தகிரி ஆஞ்சநேயர் திருக்கோயில்

பிரபலமான  அப்பல்லோ மருத்துவமனைக்கும் ஆன்மீகத்துக்கும் என்ன நேரடி தொடர்பு இருக்க முடியும்? அப்படி ஒரு தொடர்பு இருக்கிறது என்கிறது தமிழக எல்லையில் சித்தூர் மாவட்டத்தில்   உள்ள அரகோண்டாவில் அமைந்துள்ளது அர்த்தகிரி ஆஞ்சநேயர் திருக்கோயில்.

சஞ்சீவியாக நோய் தீர்க்கும் அர்த்தகிரி ஆஞ்சநேயர் திருக்கோயில்

 

திருக்கோயிலின் ஸ்தல வரலாறு 

 

திரேதாயுகத்தின்போது ஸ்ரீராமருக்கும் ராவணனுக்கும் போர் நடந்தது. போர் தீவிரம் அடைந்த வேளையில் ராவணனின் மகன் இந்திரஜித் லட்சுமணன் மீது பிரம்மாஸ்திரத்தை பிரயோகித்தான். பிரம்மாஸ்திரத்தின் வலிமையால் மூர்ச்சையாகிக் கீழே விழுந்த இளவல் லட்சுமணனைக் காப்பாற்றும் வழி தெரியாமல் அனைவரும் தவித்தனர். அப்போது அருகே இருந்த ஜாம்பவான் இமய மலைச் சாரலில் உள்ள சஞ்சீவி மலையைக் குறித்தும் அதன் தன்மை குறித்தும் ஆஞ்சநேயரிடம் தெரிவித்தார். அந்த சஞ்சீவி மலையில் உள்ள மருத்துவ குணம் கொண்ட மூலிகைகள் பற்றி விவரித்த ஜாம்பவான்,ஆஞ்சநேயரிடம் உடனே மூலிகையைக் கொண்டு வருமாறு தெரிவித்தார். 

 

இதையடுத்து ஆஞ்சநேயர்  சஞ்சீவி மலை நோக்கித் தாவிச் சென்றார் . ஆனால், அவரால் சஞ்சீவி பர்வதத்தில் உள்ள மூலிகையை  கண்டறிய முடியவில்லை லட்சுமணனின் உயிரைக் காக்கும் பொருட்டு,அந்தப் பர்வதத்தையே பெயர்த்தெடுத்து போர்க்களமான இலங்கை நோக்கி வானவீதியில் சஞ்சாரம் செய்தார். அவ்வாறு அவர் வந்தபோது அந்த மலையின் ஒரு பகுதி இந்த மலையில் விழுந்தது. இதனாலேயே இந்தப் பகுதிக்கு அரகோண்டா என்று பெயர் வந்தது. ‘அர’ என்றால் துண்டு ‘கோண்டா’ என்றால் மலை அரகோண்டா என்றால் மலையின் ஒரு பாகம் என்று பொருள். 

சஞ்சீவியாக நோய் தீர்க்கும் அர்த்தகிரி ஆஞ்சநேயர் திருக்கோயில்

 

சஞ்சீவி மலையின் ஒரு பகுதியான  இந்த அரகோண்டாவுக்கு  அருகில் உள்ளது இந்தத் திருக்கோயில். இந்தக் கோயிலில் ஒரு தடாகத்தை நாம் பார்க்கலாம். இந்தத் தடாகத்தில் சஞ்சீவி பர்வதத்தின் ஒரு பகுதி கீழே விழுந்ததால்,இந்தத் தடாகம் முழுவதும் மூலிகை நிரம்பியுள்ளது என்றும் இந்தத் தடாக நீர் நோய்களைத் தீர்க்கும் அருமருந்து என்றும் கூறுகிறார்கள். எனவே பக்தர்கள் தங்கள் தீராத நோய் தீர்க்கும் தீர்த்தமாக இந்தத் தடாக தீர்த்தம் பருக பெருமளவில் வருகிறார்கள். 

 

அப்பல்லோ மருத்துவமனையின் ஆன்மிகத் தொடர்பு.


அப்பல்லோ குழும மருத்துவமனைகளில் முதல் மருத்துவமனை இங்கிருந்து தான் ஆரம்பமானது . இந்த திருக்கோயிலில்  இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ள அப்பலோ மருத்துவமனைக்கு , கோயிலின் தடாக நீர் எடுத்துச் செல்லப்படுகிறது. இந்தத் திருக்கோயிலில் ஆஞ்சநேயரைத் தரிசித்து தடாக தீர்த்தத்தை பிரசாதமாக ஏற்றுச் சென்றாலே போதும் தீராத நோயும் தீரும் என்பது பலன் அடைந்தவர்கள் சொல்லும் பலமான நம்பிக்கை.

 

சித்தூரில் இருந்து புங்கனூர் செல்லும் வழியில் சுயம்பு விநாயகர் எழுந்தருளியுள்ள காணிப்பாக்கத்தில் இருந்து சுமார் 9 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது இத்திருக்கோயில் . தமிழகத்தில் இருந்து திருப்பதி செல்லும் பக்தர்கள் சிலர் சித்தூர் சென்று அங்கிருந்து அர்த்தகிரிக்குச் செல்கிறார்கள்.

 

நோய்கள் தீர்க்கும் அர்த்தகிரி ஆஞ்சநேயரை தரிசிப்போம். நோயற்ற வாழ்வைப் பெற்றிடுவோம்.

 

ஜெய் ஸ்ரீ ராம் ...ஜெய் ஸ்ரீ ஆஞ்சநேயா!

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP