அடேங்கப்பா... லிங்கத்தில் இத்தனை வகையா? 

சிவபெருமானின் அருவ வடிவமாக லிங்கம் வழிபடப்படுகிறது. இந்த லிங்கமானது எண்ணற்ற வகைகளில் தேவர்களாலும், மனிதர்களாலும் வணங்கப்படுகிறது.
 | 

அடேங்கப்பா... லிங்கத்தில் இத்தனை வகையா? 

சிவபெருமானின் அருவ வடிவமாக லிங்கம் வழிபடப்படுகிறது. இந்த லிங்கமானது எண்ணற்ற வகைகளில் தேவர்களாலும், மனிதர்களாலும் வணங்கப்படுகிறது. 

சுயம்பு லிங்கம்: இறைவன் இச்சைப்படி தானாக தோன்றிய லிங்கம்.

தேவி லிங்கம் : தேவி சக்தியால் வழிபடபட்ட லிங்கம்.

காண லிங்கம்:  விநாயகர், முருகனால் வழிபடப்பட்ட லிங்கம்.

தைவிக லிங்கம் : மும்மூர்த்திகளான பிரம்மா, திருமால் மற்றும் உருத்திரன் ஆகியோராலும், இந்திராலும் வழிபடப்பட்ட லிங்கம்.

ஆரிட லிங்கம் : அகத்தியர் போன்ற முனிவர்களால் வழிபடப்பட்ட லிங்கம்.

ராட்சத லிங்கம் -: அரக்கர்களால் வழிபாடு  செய்யப்பட்ட லிங்கம்.

தெய்வீக லிங்கம் : தேவர்களால்  வழிபாடு .செய்யப்பட்டு, முனிவர்களால், பூமிக்கு  கொண்டு வரப்பட்ட லிங்கம்

ஹர்ஷ லிங்கம் :ரிஷிகளும், முனிவர்களும் தங்களின் வழிபாட்டிற்கு உருவாக்கிய  லிங்கம்.

மானுட லிங்கம்: மனிதர்களால் வழிபடப்பட்ட லிங்கம்

மாணி மாய லிங்கம் : இந்திரனால் வழிபடப்பட்ட லிங்கம்

தாமரமய லிங்கம்: சூரியனால் வழிபட்டப்பட்ட லிங்கம்.

முக்தி இலிங்கம் : சந்திரனால் வழிபடப்பட்ட லிங்கம்

ஹேம லிங்கம் : குபேரனால் வழிபடப்பட்ட லிங்கம்

க்ஷணிக லிங்கம் : தற்காலிக வழிபாட்டிற்கு மலர், அன்னம், சந்தனம், விபூதி ஆகியவைகளைக் கொண்டு உருவாக்கப்படும் லிங்கங்கள்.

வர்த்தமானக லிங்கம் : பிரம்ம பாகம், விஷ்ணு பாகம் ஆகியவை ஒரே அளவாகவும், ருத்ர பாகம் அவைகளைவிட இருமடங்கும் இருக்கும் லிங்கங்கள்.

ஆத்ய லிங்கம் :  பிரம்ம பாகம், விஷ்ணு பாகம், ருத்ர பாகம் ஆகியவை அனைத்தும் சம அளவு இருக்கும் லிங்கங்கள்.

பஞ்ச லிங்கங்கள் : சிவபெருமான் சதாசிவ மூர்த்தி தோற்றத்தில் தனது ஐந்து முகங்களிலிருந்தும், ஐந்து லிங்கங்களை தோற்றுவித்தார்.இவை பஞ்ச லிங்கங்கள் எனவும் அறியப்படுகின்றன.

பஞ்சபூத லிங்கங்கள் : நீர், நிலம், நெருப்பு, காற்று ஆகாயம் என்ற பஞ்சபூதங்களால் ஆன லிங்கங்கள், பஞ்சபூத லிங்கங்கள் எனப்படும்.

திருமூலர்,  திருமந்திரத்ததில்,  ஆறுவகையான லிங்கங்கள் பற்றி குறிப்பிடுகிறார்,அவை, அண்ட லிங்கம், பிண்ட லிங்கம், சதாசிவ லிங்கம், ஆத்ம லிங்கம், ஞான லிங்கம்,சிவ லிங்கம்.
 
அண்ட லிங்கம் என்பது உலகை குறிக்கிறது. 

பிண்ட லிங்கம் என்பது மனிதனுடைய உடலாகும்.

சதாசிவ லிங்கம் என்பது சிவனையும் ஆதி சக்தியையும் இணைந்து உருவமாக கொள்ளுவதாகும்,

ஆத்ம லிங்கம் என்பது அனைத்து உயிர்களையும் இறைவனாக காண்பதாகும்,

ஞான லிங்கம் என்பது, இறைவனின் சொரூப நிலையை குறிப்பதாகும்.

newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP