Logo

நின்ற சீர் நெடுமாறன் நாயனார்

இறுதியாக மங்கையர்க்கரசியாரும், குலச்சிறையாரும் திருஞான சம்பந்தரை வரவழைத்து திருநீற்றுப்பதிகம் பாடி, மன்னரின் நெற்றியில் விபூதி தரித்து மன்னனின் நோயை நீக்கினார். அதனால் சமணத்தை விடுத்து மன் னன் சைவ மதத்துக்கு மாறினார்.கூனாக இருந்த அவரது முதுகும் நேராக மாறியது...
 | 

நின்ற சீர் நெடுமாறன் நாயனார்

தமிழ் வளர்த்த பாண்டிய மண்ணில் நின்ற சீர்நெடுமாறன் என்னும் அரசன் சோழமன்னனின் மகளான மங்கையர்க்கரசியை  மணந்தார். நெடுமாறன் சமணர்களின் மாயவலையில் விழுந்ததால் சைவம் ஒடுங்கி சமணம் தழைத்தோங்கியது. மங்கையர்க்கரசியாரும் இவரிடம் அமைச்சராக இருந்த குலச்சிறையாரும்  சைவமதத்தைப் பின்பற்றினார்கள். எம்பெருமான் மீது அளவில்லா அன்பு கொண்டிருந்தார்கள்.

சைவம் தழைத்தோங்க செய்ய திருஞான சம்பந்தரை மதுரைக்கு வரவழைத்தார்கள் மங்கையர்க்கரசியாரும்,குலச்சிறையாரும். அதைக் கேட்டு சம ணர்கள் செய்த சூழ்ச்சிக்கு மன்னனும் உட்படவே திருஞான சம்பந்தர் எம்பெருமானிடம் முறையிட்டார். அச்சமயம் நின்ற சீர் நெடுமாறனுக்கு கடு மையான வெப்புநோய் தாக்கியது. சமணர்கள்,சமணகுருமார்கள் மன்னனுக்கு வந்திருக்கும் நோயை குணப்படுத்த எவ்வளவோ முயற்சிகள் செய் தும் இயலாமல் போனது. 

இறுதியாக மங்கையர்க்கரசியாரும், குலச்சிறையாரும் திருஞான சம்பந்தரை வரவழைத்து திருநீற்றுப்பதிகம் பாடி, மன்னரின் நெற்றியில் விபூதி தரித்து மன்னனின் நோயை நீக்கினார். அதனால் சமணத்தை விடுத்து மன்னன் சைவ மதத்துக்கு மாறினார்.கூனாக இருந்த அவரது முதுகும் நேராக மாறியது.

ஒருசமயம் வடபுலத்து பகை மன்னனைத் திருநெல்வேலியில் நடந்த போரில் தோற்கடித்து வெற்றிபெற்றார். கன்னித் தமிழ் புலவர்கள் இவரை திரு நெல்வேலி வென்ற நெடுமாறர் என்று சிறப்பித்தார். நின்ற சீர் நெடுமாறன் தமது வெற்றிக்கு காரணம் சிவனாரின் திருவருளே என்று உணர்ந்து சிவ பெருமானுக்கு சிவத்தொண்டும் ஆலயத்திருப்பணிகளும் செய்து சிவனருளால் நெறி தவறாதுஆடி புரிந்தார். திருநீற்றுப்பெருமையை உலகறியச் செய்து நீண்ட காலம் ஆட்சி புரிந்து நெடுமாறன் சிவபாதம் சரணடைந்தார்.

நின்ற சீர் நெடுமாறனின் குருபூஜை ஐப்பசி மாதம் பரணி நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.


newstm.in  

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP