நரசிங்கமுனையரையர் நாயனார்

நோய் பிடித்த மனிதனை பிறர் விரட்டுவதை தடுத்து அவரை அன்போடு ஆரத்தழுவிக் கொண்டார்.அவரது தேகத்தில் தூய வெண்ணீறு துலங்கக் கண்டு ஆனந்தம் கொண்டார். இரு கரம் கூப்பி அவரை வரவேற்று உபசரித்தார்.

நரசிங்கமுனையரையர் நாயனார்
X

சீரும் சிறப்புமிக்க திருமுனைப்பாடி நாட்டை நரசிங்கமுனையரையர் என்னும் அரசர் ஆண்டுவந்தார். சிவத்தொண்டராக இருப்பதில் மகிழ்ந்து வந்த இவர் சைவ நெறி வழிகாத்து சிறப்பாக நாட்டை ஆண்டுவந்தார். நாயன்மார்களில் முக்கியமானவர்களாக விளங்கும் நால்வரில் ஒருவரான சுந்தரமூர்த்தி நாயனாரை வளர்க்கும் அரும்பேறு பெற்றவர் இவர்.

நாடிவரும் சிவனடியார்களுக்குபொன்னும்பட்டாடைகளும் கொண்டுமகிழும் நரசிங்கமுனையரையர் திருவாதிரைத்திருநாளன்று இத்தொண்டை மனமகிழ்ந்து செய்துவந்தார்.அப்போது மன்னரிடம் பொருள் பெற்று போக வந்த ஒருவர் காமநோயால் உடல் நலம் சீர்கெட்டு நோய் பெற்ற நிலை யில் பார்க்கவே அருவருக்கத்தக்க உடலுடன் காணப்பட்டார். அவரைக் கண்டு சுற்றியிருந்த அனைவரும் விலகி சென்றார்கள்.

அழுக்கு நிறைந்த ஒருவர் அருவருக்கத்தக்க தோற்றத்துடன் மன்னனை நெருங்குவதா என்று சுற்றியிருந்தவர்கள் நினைத்தார்கள். ஆனால் எம் பெருமானது படைப்பில் அனைவரும் ஒன்றே.விலக்கி வைப்பதும் விலக்க நினைப்பதும் பாவமான செயல் என்று நினைத்தார் அரசர் நரசிங்கமு னையரையர். அதனால் நோய் பிடித்த மனிதனை பிறர் விரட்டுவதை தடுத்து அவரை அன்போடு ஆரத்தழுவிக்கொண்டார்.அவரது தேகத்தில் தூய வெண்ணீறு துலங்கக் கண்டு ஆனந்தம் கொண்டார். இருகரம் கூப்பி அவரை வரவேற்று உபசரித்தார்.

எல்லோருக்கும் பொன்னும் பொருளும் கொடுத்து அனுப்பிய அரசர் அவருக்கு மட்டும் இரட்டிப்பாக பொன்னும் பொருளும் கொடுத்து அனுப்பி னார். திருவெண்ணீற்றுக்கு பேரன்புடையவராக திகழ்ந்த நரசிங்கமுனையரையர் ஒருநாள் எம்பெருமானை வேண்டிவரும்போது வீதியில் தேரோ ட்டி விளையாடும் நம்பியாரூரரைக் கண்டு மயங்கி நின்றார்.

சிறு குழந்தையின் முகத்தில் தெரிந்த தெய்விக ஒளி அவரை மகிழ்வித்தது. அக்குழந்தையின் அழகில் மயங்கிய நரசிங்கமுனையரையர் தேரிலி ருந்து இறங்கிஅக்குழந்தையின் வீட்டுக்குச்சென்றார்.அக்குழந்தையின் தந்தையான சடையானாரிடம் கொண்ட நட்பின் காரணமாக அக்குழந் தையை வளர்க்கும் பொறுப்பை வேண்டினார். சடையனாரும் மன்னரும் சிறுவயது நண்பருமான அரசனின் வேண்டுதலுக்கு செவிசாய்த்தார். நம் பியாரூரரை வளர்க்கும் பேறு பெற்றமையாலும் சிவன் பால் கொண்டிருந்த அன்பினாலும் எம்பெருமான் திருவடிகளைப் பற்றி இருக்கும் பெரு வாழ்வைப் பெற்றார்.

சிவாலயங்களில் புரட்டாசி மாதம் சதயம் நட்சத்திரத்தில் இவருக்கு குரு பூஜை கொண்டாடப்படுகிறது.


newstm.in

newstm.in

Next Story
Share it