Logo

நமிநந்தி அடிகள் நாயனார்-2

கோவில் திருவிழாவில் சாதி மத பேதமின்றி எல்லோரும் கலந்திருந்தார்கள். அவர்களோடு கலந்து விட்டதால் என்னு டைய தூய்மை கெட்டு விட்டது. எப்படி உள்ளே வருவது. வெந்நீர் கொண்டு வா.குளித்துவிட்டு வருகிறேன் என்று சொல்லி ...
 | 

நமிநந்தி அடிகள் நாயனார்-2

நமி நந்தி அடிகள் நீரில் விளக்கேற்றி பிரகாசமான ஒளியைக் கண்டு ஆனந்தக் கண்ணீர் வடித்தார். எம்பெருமானின் அருளை நினைத்து உருகினார். அவரை ஏளனம் செய்த சமணர்கள் வெட்கி தலைகுனிந்தார்கள்.

நமிநந்தி அடிகள் நாயனார்-2

அதன் பிறகு தண்ணீரில் விளக்கேற்றி அரநெறியானை வழிபட்டு வந்த நமிநந்தி அடிகள் பற்றி கேள்விப்பட்ட சோழ மன்னன் திருவாரூர் ஆலயத்தில் தினசரி பூஜைகள் நடத்தவும், உற்சவ நாள்களை முறைப்படி நடத்தவும் ஆணையிட்டு அதற்கு தலைவ ராக நமி நந்தி அடிகளை நியமித்தும் எண்ணற்ற பொன்னும் பொருளும் அள்ளி வழங்கினார். நெய்வேண்டி நீரை பெற்று விளக் கேற்றியவர் என்ற காரணத்தினால் ஏமப்பேறு என்ற ஊர் தற்போது திருநெய்ப்பேறு என்றழைக்கப்படுகிறது.

காலப்போக்கில் சமணம் அழிந்தது. சமணர்கள் அழிந்தனர். சைவம் தழைத்தது.அடிகளார் எம்பெருமானுக்கு பெருவிழாக்கள் நடத்தி பெருமிதம் அடைந்தார். ஆண்டு தோறும் பங்குனி உத்திர விழாவை மிகச்சிறப்பாக நடத்தினார். ஒருமுறை ஏமப்பேறூ ரை அடுத்துள்ள மணலி என்னும் ஊரில் திருவாரூர் தியாகேசப்பெருமான் ஆண்டுக்கு ஒருமுறை எழுந்தருள்வது வழக்கம்.

சிவன்பக்தர்கள்அனைவரும்ஜாதிபேதமின்றிஅவ்விழாவில்கலந்துகொள்வார்கள்.நமிநந்திஅடிகளும்விழாவில்கலந்துகொண்டு பரமனைத் தரிசித்து மனம் கொள்ளா மகிழ்ச்சியுடன் வீட்டுக்கு வந்தார். வந்தவர் வீட்டின் அருகிலுள்ள திண்ணையில் படுத்துவிட்டார். அவரது இல்லத்தரசியார் கணவரை எழுப்பி உள்ளே வாருங்கள் ஏன் வெளியே படுத்துவிட்டீர்கள் என்று கேட்டார். கோவில் திருவிழாவில்  சாதி மத பேதமின்றி எல்லோரும் கலந்திருந்தார்கள். அவர்களோடு கலந்துவிட்டதால் என்னு டைய தூய்மை கெட்டுவிட்டது. எப்படி உள்ளே வருவது. வெந்நீர் கொண்டு வா.குளித்துவிட்டு வருகிறேன் என்று சொல்லி மீண் டும் கண் அயர்ந்தார்.

எம்பெருமான் அவன் கனவில் அன்பரே திருவிழாவுக்கு வந்திருந்த எல்லா பக்தர்களும் என்னுடைய அன்பர்கள் தான். அப்படியி ருக்க நீ மட்டும் எப்படி தனிமைப்படுத்தி பார்க்கிறாய், நாளை திருவாரூர் வந்து என்னை தரிசிஎன்று மறைந்தார். எம்பெருமா னிடம் தன்னை மன்னிக்கும் படி வேண்டி எழுந்து அமர்ந்தார் நமிநந்தி அடிகள்.மனைவி வெந்நீர் வைத்துவிட்டேன் குளிக்க வாருங்கள் என்று சொன்னதும் நடந்ததை சொல்லி குளிக்காமல் உள்ளே சென்று உறங்கினார். இதன் மூலம் இறைவன் தனக்கு எல்லா குலமும் ஒன்று என்றும் சாதி சமயம் பார்ப்பது தவறு என்பதையும் உணர்த்தினார்.

மறுநாள் குளித்து வெண்ணீறு தரித்து திருவாரூர் எம்பெருமானைச் சந்திக்க சென்றார்.அந்நகருக்குள் சென்றதும் அங்கிருந்த வர்கள் எல்லாமே திருவெண்ணீறு மேனியோடு சிவகண உருவத்தில் பேரொழி பிளம்பாக இவர் கண்ணுக்கு தெரிந்தார்கள். மகிழ்ச்சியோடு நிலத்தில் வீழ்ந்து வணங்கினார். அதன்பின்பு அனைவரும் சிவசொரூப தோற்றம் மாறி பழைய உருவத்துக்கு  மாறினார்கள். அதையும் கண்ட நமிநந்திஅடிகள் எம்பெருமானிடம் மன்னிப்பு வேண்டியபடி திருக்கோயிலை அடைந்தார்.

எம்பெருமானே அடியேன் அறியாமல் செய்த பிழையைப் பொறுத்து மன்னித்து அருளவேண்டும் என்று வேண்டினார். எம் பெருமானின் அன்பில் கட்டுண்ட நமிநந்திஅடிகள் அதன் பின்பு அவரை விட்டும் திருவாரூரை விட்டு செல்லவும் மனமின்றி அங்கேயே தங்கி சிவத்தொண்டு ஆற்ற உளம்கொண்டார். தியாகேசப்பெருமானின் திருவடியில் தங்கி அங்கேயே வாழும் காலத்தைக் கடக்க உறுதி கொண்டார்.

மனைவியுடன் ஏமப்பேறூரிலிருந்து திருவாரூருக்கு வந்து வசிக்கலானார்.தியாகேசப்பெருமானுக்கு திருத்தொண்டு புரிந்து மகிழ்ச்சியோடு வாழ்ந்தார். திருவாரூரில் வாழ்ந்த நமிநந்தி அடிகள் இறுதியில் எம்பெருமானின் நிழலை அடைந்து பேரின்பம் கொண்டார்.


சிவாலயங்களில் வைகாசி மாதம் பூசம் நட்சத்திரத்தில் நமி நந்திஅடிகள் குருபூஜை கொண்டாடப்படுகிறது.

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP