Logo

தன் மகனையே பலியிட துணிந்த இறைதூதர் - பக்ரீத் வரலாறு

இப்ராஹீமின் மகனை தனக்கு பலியிடும்படி அல்லாஹ் கேட்டுக்கொண்டார். அதை அவர் எந்த தயக்கமுமின்றி நிறைவேற்ற முற்பட்டதன் காரணமாக பக்ரீத் கொண்டாடப்படுகிறது. அனைவருக்கும் பக்ரீத் நல் வாழ்த்துக்கள்!
 | 

தன் மகனையே பலியிட துணிந்த இறைதூதர் - பக்ரீத் வரலாறு

பக்ரீத் வந்துவிட்டது... அனைவருக்கும் தானம், இனிப்புகள் வழங்கி ஒருவரை ஒருவர் வாழ்த்தும் மிகவும் மகிழ்ச்சியான தருணம் இது. இந்த நன்நாளில் அனைவரையும் ஈத் முபாரக் என்று கூறி வாழ்த்துவது இஸ்லாமியர்களின் விருப்பம். ஈத் என்றால் கொண்டாட்டம். முபாரக் என்றால் ஆசிர்வதிக்கப்பட்ட என்று அர்த்தம். அதாவது, ஆசிர்வதிக்கப்பட்ட தினத்துக்கான வாழ்த்துக்கள் என்று சொல்லலாம்.

பக்ரீத் என்பது குரானில் குறிப்பிடப்பட்டுள்ள இறை தூதர் இப்ராஹீமின் செயலை கவுரவப்படுத்தும் வகையில் கொண்டாடப்படுகிறது. அந்நாளில் இப்ராஹீமின் மகனை தனக்கு பலியிடும்படி அல்லாஹ் கேட்டுக்கொண்டார். அதை அவர் எந்த தயக்கமுமின்றி நிறைவேற்ற முற்பட்டதன் காரணமாக பக்ரீத் மற்றும் குர்பானி கொடுத்தல் உள்ளிட்டவை கொண்டாடப்படுகிறது இந்த வரலாற்றைத் தெரிந்துகொள்வோம்.

இப்ராஹீமுக்கு (அலை) பல ஆண்டுகளாக குழந்தை இல்லை. முதிர்ந்த வயதில் அவருக்கு நபி இஸ்மாயில் (அலை) பிறந்தார். இஸ்மாயில் தானாக உழைக்க கூடிய வயதை அடைந்தார். அப்போது, நபி இப்ராஹீமின் கனவில் அவரது மகனை பலியிட கட்டளையிட்டார்  அல்லாஹ்.

தன்னுடைய கனவில் அல்லாஹ் கட்டளையிட்ட விஷயத்தை தன் மகன் நபி இஸ்மாயிலிடம் (அலை) சொன்னார். சற்றும் தயக்கமின்றி இறைவனின் கட்டளைபடியே செய்யுங்கள் என்று கூறினார் இஸ்மாயில். அல்லா ஹ் கட்டளையை நிறைவேற்ற நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் தயாரானார்கள்.

ஆகவே, அவ்விருவரும் (இறைவன் கட்டளைக்கு) முற்றிலும் வழிப்பட்டு, (இப்ராஹீம்) மகனைப் பலியிட முகம் குப்புறக்கிடத்திய போது; அதை இறைவன் தடுத்தார். மேலும், இஸ்மாயிலுக்கு பதிலாக ஒரு ஆட்டை பலியிட இறைவன் கட்டளையிட்டார். இதன் காரணமாகவே குர்பானி கொடுக்கப்படுகிறது.

பக்ரீத் பண்டிகை உலகம் முழுக்க வெவ்வேறு விதமான கால அளவுகளில் கொண்டாடப்படுகிறது. பொதுவாக உலகம் முழுக்க ஈத் கொண்டாட்டம் ஆகஸ்ட் 21ம் தேதி மாலை தொடங்கி நான்கு நாட்கள் அதாவது 25ம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. 

இஸ்லாமிய நாட்காட்டியில் 12வது மாதத்தின் 13வது நாளுக்கு முந்தைய நான்கு நாட்கள் கொண்டாடப்படுகிறது. காலையில் எழுந்ததும் தொழுகை நடத்தி அன்றைய நாளைத் தொடங்குகின்றனர் இஸ்லாமியர்கள். அதைத் தொடர்ந்து உறவினர்கள், நண்பர்கள், அக்கம்பக்கத்தினருக்கு இனிப்புகளை வழங்குகின்றனர். ஏழைகளுக்கு உணவு, பரிசுகளை வழங்குகின்றனர். கத்தாரில் இது 11 நாட்களும், ஓமனில் 9 நாட்களும் கொண்டாடப்படுகிறது.

அனைவருக்கும் பக்ரீத் நல் வாழ்த்துக்கள்!

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP