Logo

திருக்குர்ஆன் இறங்கிய புனித ரமலான் மாதம்!

திருக்குர்ஆன் இறங்கிய புனித ரமலான் மாதம்!
 | 

திருக்குர்ஆன் இறங்கிய புனித ரமலான் மாதம்!

இஸ்லாமியர்களின் புனித நூலான குர்ஆன் 1400 ஆண்டுகளுக்கு முன்பு இதே ரம்ஜான் மாதத்தில்தான் நபி (ஸல்) அவர்களுக்கு இறக்கப்பட்டது. சவுதி அரேபியாவின் மக்காவுக்கு கிழக்கே உள்ள  ஹிரா மலைக் குகையில் வைத்து முதன் முதலாக வானவர் ஜிப்ரீல் மூலம் நபியவர்களுக்கு வழங்கப்பட்டது. திருக்குர்ஆன் நபி (ஸல்) அவர்களுக்கு 23 வருட காலமாக அருளப்பட்டது. 

• நபி(ஸல்) அவர்கள், தன்னுடைய 40வது வயதில், இறைவனின் தூதராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது முதல், 63 வயதில் அவர் மரணித்தது வரையிலான 23 ஆண்டுகள் சிறுகச் சிறுக காலச் சூழல்களுக்குத் தக்கவாறு திருக்குர்ஆன் இறக்கியருளப்பட்டது.

• 44   அத்துகான்

44:2. தெளிவான இவ்வேதத்தின் மீது சத்தியமாக!

44:3. இதை பாக்கியம் நிறைந்த இரவில் நாம் அருளினோம். நாம் எச்சரிக்கை செய்வோராவோம். 

என்கிறது திருக்குர்ஆன்.

• இதை சிலர் ஒரே நாளில் வழங்கப்பட்டதாக நினைத்துக்கொள்கின்றனர். இந்த சந்தேகம் நபி அவர்களின் தோழருக்குக் கூட ஏற்பட்டது. உண்மையில், குர்ஆன் ஒரே நாளில் வழங்கப்படவில்லை. 

• நபி (ஸல்) அவர்களுக்கு அவர்களின் 40 ஆவது வயதில் ரமலான் மாதத்தில், குர்ஆனின் 'அலக்' என்ற 96வது அத்தியாயத்தின் முதல் 5 வசனங்கள் முதன்முதலாக அருளப்பட்டது.

• ரமலான் மாதத்தில் திருக்குர்ஆன் வசனங்கள் இறக்கப்படத் துவங்கியதையே இறைவன், "பாக்கியமிக்க (ரமலான் மாத)இரவில் திருக்குர்ஆன் அருளப்பட்டதாகக்" குறிப்பிடுகின்றான்.
நபி (ஸல்) அவர்கள் ஹிஜ்ரி 10ம் ஆண்டின் இறுதி ஹஜ்ஜின் அரஃபா தினம் அன்று, அல் மாயிதா எனும் 005வது அத்தியாயத்தின் - ''இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன்'' என்ற - 003வது வசனம் இறக்கியருளப்பட்டது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP