துவங்கியது மாசி மகத் திருவிழா! பக்தர்கள் புனித நீராடல்!!

துவங்கியது மாசி மகத் திருவிழா! பக்தர்கள் புனித நீராடல்!!

துவங்கியது மாசி மகத் திருவிழா! பக்தர்கள் புனித நீராடல்!!
X

கும்பகோணம் மகாமக குளத்தில் ஆண்டு தோறும் மாசி மாதம் மக நட்சத்திரத்தன்று மாசி மக விழாவாகவும், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகாமக விழாவாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த வருடம் மாசிமக விழாவை முன்னிட்டு பிப்.28ம்தேதி முதல் ஆதிகும்பேஸ்வரர், காசிவிஸ்வநாதர், அபிமுகேஸ்வரர், காளஹஸ்தீஸ்வரர், கவுதமேஸ்வரர், வியாழசோமேஸ்வரர் உள்ளிட்ட 6 சிவாலயங்களில் 10 நாள் உற்சவம் நடைபெற்றது.

துவங்கியது மாசி மகத் திருவிழா! பக்தர்கள் புனித நீராடல்!!

மாசி மகத்தை முன்னிட்டு 5 நாட்கள் கோயிலுக்குள் உள்புறப்பாடு நடைபெற்றது. இறுதி நாளான நேற்று, கோயிலின் பின்புறமுள்ள பொற்றாமரை குளத்தில் தெப்ப உற்சவம் நடைபெற்றது. இதையடுத்து அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் தேவி, பூதேவியுடன் சாரங்கபாணி சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

ஆதிவராக பெருமாள் கோயில் வராக குளத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது. குளத்தில் உள்ள தீர்த்தவாரி மண்டபத்தில் அம்புஜவல்லி தாயாருடன், ஆதிவராக பெருமாள் காட்சியளித்தார். தொடர்ந்து சின்ன பெருமாளுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, குளத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது.

newstm.in

Tags:
Next Story
Share it