மங்கள கிரி மலை !! குகையின் கருவறையில் 15 செ.மீ உடைய திறந்த வாய் பகுதியுடன் இருக்கும் நரசிம்மர் !! என்ன அதிசயம் தெரியுமா

ஆந்திர மாநிலம் விஜயவாடாவிலிருந்து 20 கி.மி தூரத்தில் குண்டூர் செல்லும் வழியில் உள்ளது மங்கள கிரி எனும் மலை. இந்த மலைக் கோயிலில் அமர்ந்திருக்கும் நரசிம்மர் தனக்கு நைவேத்யமாக தரும் பானகத்தை நிஜமாகவே அருந்துகிறார்.
இவரின் உக்கிரத்தை தணிக்க இந்த பானகம் வழங்கபடுவதாக சொல்கிறார்கள். இந்த மங்கள கிரி மஹாலஷ்மியின் அம்சம் பொருந்திய தலமாகும் . பூரி ஜகன்னாத்தில் போஜனம், சிம்மாசலத்தில் சந்தனம், மங்களகிரியில் பானகம், ஸ்ரீரங்கத்தில் சயணம் என்று வைணவ பெரியவர்கள் கூறும் வழக்கமுண்டு.
இந்த நரசிம்மரை ஆந்திர மக்கள் பாணகால ராயுடு என்று அழைக்கிறார்கள். கிருஷ்ண தேவராயர் இக்கோயிலுக்கு பல உதவிகள் செய்துள்ளார். முன்னொரு காலத்தில் நோமுச்சி என்ற அரக்கன் தேவர்களை துன்புறுத்தி வந்தான்.
தேவர்கள் திருமாலிடம் முறையிட திருமால் நரசிம்மராக உருவெடுத்து மங்கள கிரி குகையில் தங்கி காத்திருந்தார் . இந்திரன் விடுத்த சக்ராயுதத்தையும் தன் விரல்களில் தாங்கி கொண்டார். அரக்கனை வதம் செய்து தொடர்ந்து உக்கிரம் தாங்காமல் தகிக்க ஆகாய கங்கையில் நீராடி தேவர்களின் அமுதத்தை உண்டு சாந்தமானார்.
கிருத யுகத்தில் அமிர்தத்தை அருந்திய நரசிம்மர் திரேதா யுகத்தில் பசு நெய்யும் துவாபர யுகத்தில் பாலையும் கலியுகத்தில் பானதத்தையும் உண்டு சாந்தமாகிறார் . குகையின் அர்த மண்டபத்தில் உள்ள கருவறையில் 15 செ.மீ உடைய திறந்த வாய் பகுதியுடன் இருக்கிறார் நரசிம்மர்.
பானகத்தை தீர்த்தமாக இவர் வாயில் விடும் போது அதை குடிப்பது போன்று மடக் மடக் என்று சப்தம் வருகிறது சற்று நேரத்தில் அந்த சத்தம் நின்று விடுகிறது. நின்ற பின்னர் மிச்சமிருக்கும் பானகம் வாய் வழியாகவே வெளியே றுகிறது.
இந்த அதிசயம் தினம்தோறும் நடைபெறுகிறது . நரசிம்மர் வாய் வழி வரும் மீதி பானகத்தை பக்தர்களுக்கு பிரசாதமாக அளிக்கின்றனர் . எவ்வளவு லிட்டர் பான கம் இருந்தாலும் பாதி மட்டுமே வாய்க்குள் செல்கிறது மீதி வெளியேறி விடுகிறது.
இந்த பானகத்தை தயாரிக்க மலைக்கு கீழ் உள்ள கல்யாண ஸரஸ் எனும் சுனை நீர் பயன்படுத்த படுகிறது . தேவர்கள் உருவாக்கிய இன் நீரில் புண்ய தீர்த்தங்கள் கலந்துள்ளன என்பது நம்பிக்கை.
Newstm.in