மங்கையர்க்கரசி நாயனார்

ஒவ்வொருமுறையும் மங்கையர்க்கரசியார் சைவம் தழைக்க முயற்சி செய்தார் ஆனால் அனைத்தும் வீணாகின. அப்போது திருஞான சம்பந்த பிள்ளையார் பாண்டி நாட்டுக்கு அடுத்த திருமறைக்காட்டுக்கு வந்திருப்பதாக கேள்வி யுற்று மகிழ்வுற்ற மங்கையர்க்கரசியார்...

மங்கையர்க்கரசி நாயனார்
X

63 நாயன்மார்களில் மங்கையர்க்கரசியார் ஒருவராவார். சோழமன்னனின் புதல்வியான இவர் நின்றசீர் நெடுமாறன் என் னும் பாண்டிய மன்னனை மணந்தார்.மானி என்னும் இயற்பெயரைக் கொண்ட இவர் மங்கையர்க்கெல்லாம் தலைவியான பேறு பெற்றதால் மங்கையர்க்கரசியார் என்னும் பெயரை பெற்றார்.

சிறுவயது முதலே சிவபெருமான் மீது பக்தியும் அன்பும் கொண்டிருந்த மங்கையர்க்கரசியார் சைவ சமயத்தின் மீது பற்று கொண்டிருந்தார். ஆனால் நின்ற சீர் நெடுமாறன் சமண மதத்தின் மீது மோகம் கொண்டு சமண மதத்தை ஆதரித்தார். இத னால் பாண்டிய நாடு சைவத்தை மறந்து சமணத்தை அதிகம் கொண்டிருந்தது. இதைக் கண்டு கவலையுற்ற மங்கையர்க் கரசியார் போலவே மன்னனின் அமைச்சராக இருந்த குலச்சிறையாரும் சமண மதத்தின் மீது வெறுப்புற்று சைவத்தைப் பின்பற்றியிருந்தார்.

பாண்டிய மன்னன் தாம் செய்த தீவினைப் பயனால் சமண சமயத்தைச் சார்ந்து இருந்தான்.அதனாலேயே சமண சமய குரு மார்களைத் தெய்வமாக போற்றி இருந்ததை உணர்ந்துகொண்டாள் மங்கையர்க்கரசி. அரசன் எவ்வழியோ மக்கள் அவ்வழி என்ற பழமொழிக்கேற்ப ஏற்ப மக்களும் சமணத்தைத் தழுவினார்கள். இத்தகைய நிலையைத் தொடராமல் சமணத்தை ஒழித்து சைவத்தை நிலைநாட்ட வேண்டும் என்று விரும்பினார் மங்கையர்க்கரசியார்.

ஒவ்வொருமுறையும் மங்கையர்க்கரசியார் சைவம் தழைக்க முயற்சி செய்தார் ஆனால் அனைத்தும் வீணாகின. அப்போது திருஞானசம்பந்த பிள்ளையார் பாண்டி நாட்டுக்கு அடுத்த திருமறைக்காட்டுக்கு வந்திருப்பதாக கேள்வியுற்று மகிழ்வுற்ற மங்கையர்க்கரசியார் குலச்சிறையாருடன் ஆலோசித்து திருஞான சம்பந்தர் சிவத்தொண்டு புரிய பொருள்களைக் கொடுத்து அவரை பாண்டி நாட்டுக்கு வந்து சைவம் தழைக்க அழைத்தார்கள்.

அவர்களது அழைப்பை ஏற்று வந்த திருஞான சம்பந்தருக்கு சமணர்கள் பலவிதமான இன்னல்களைக் கொடுத்ததும், அதை யெல்லாம் எம்பெருமான் தடுத்தாட்கொண்டதையும், பாண்டிய மன்னனை வெப்பு நோய்க்கு உட்படுத்தி சமண குருமார்க ளால் குணப்படுத்த முடியாமல் இறுதியில் மங்கையர்க்கரசியார் அமைச்சர் குலச்சிறையார் வேண்டுக்கோளுக்கிணங்க திரு ஞான சம்பந்தரே பாண்டிய மன்னனின் நோயைத் தீர்க்க நேரில்வந்து தீர்த்ததையும் நாம் திருஞான சம்பந்த மூர்த்தியாரின் வரலாற்றில் தெளிவாக பார்த்தோம்.

இறுதியில் சமணர்களுக்கும், திருஞானசம்பந்தருக்கும் வாக்குவாதம் உண்டானபோதும்எம்பெருமானின் அருளால் சைவமே வென்றது. இவ்வாறு நின்றசீர் நெடுமாறனைச் சமணத்திலிருந்து சைவத்துக்கு மனம் மாற்றினார் மங்கையர்க்கரசியார். சைவத்துக்கும் சைவகொள்கைக்கும் செய்வதற்கரிய அருந்தொண்டாற்றிய மங்கையர்க்கரசியார் நாயன்மார்களில் ஒருவரா னார்.மங்கையர்க்கரசியாரின் குருபூஜை சித்திரை மாதம் ரோகிணி நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.

newstm.in

newstm.in

Next Story
Share it