Logo

மானக்கஞ்சாறர் நாயனார்

வானொளி பேரொளி வீச பரமன் உமையாளுடன் அடியார்க்கு காட்சி தந்து அருளி னார். மானக்கஞ்சாறும், அவரது புதல்வியும் நிலமதில் வீழ்ந்து வணங்கினார்கள். அப்போது விண்ணில் அசரீரி ஒலித்தது. அடியார் மீது நீர் காட்டும் பக்தியை...
 | 

மானக்கஞ்சாறர் நாயனார்

அவதாரத்தலமும்,முக்திதலமும் கொண்ட மயிலாடுதுறை அருகிலுள்ள கஞ்சாறூர் என்னும் திருத்தலம் ஒன்று உண்டு. இங்கு எம்பெருமான் பஞ்சவடிவீஸ்வரர் என்னும் திருநாமத்தில் எழுந்தருளி இருக்கிறார். இங்கு மானக்கஞ்சாறர் என்னும் சிவனடியார் ஒருவர் இருந்தார். இவர் மானகாந்தன் என்றும் அழைப்பார்கள். இவரது இல்லத்தரசியார் கல்யாண சுந்தரி ஆவார்.

இவர் அரசரிடம் சேனாதிபதியாக இருந்துவரும் வேளாண்மரபில் அவதரித்தவர். இவருக்கு சிறுவயது முதலே சிவன் மீது பக்தி அதிகம் இருந்தது. சிவனடியார்களை வழிபடுவதே தம்முடைய வாழ்வின் முழுபயன் என்று எண்ணி வாழ்ந்துவந்தார். முக்காலமும் சிவனடியார்களைப் பற்றிய சிந்தனையை மனதில் நிறுத்தினார். சிவனடியார்களுக்கு சிவத்தொண்டு புரியும் வகையில் அவரிடம் செல்வவளமும், பொருள்வளமும் இருந்தது.வாழ்வில் எம்பெருமானை வணங்கும் பேறு பெற்றதால் எல்லாம் பெற்ற மனநிறைவு இருந்தது.

எல்லாம் இருந்தும் குழந்தைசெல்வம் இல்லாத ஏக்கம் அத்தம்பதியரை வெகுவாக வாட்டியது. திருவருள் செல்வனிடம் குழந்தைப்பேறு வேண்டி இருவரும் மனமுருகி வேண்டினார்கள். விரதங்கள் பலவும் மேற்கொண்டார்கள். பெருமான் மனம் உருகி பெண் குழந்தையை அருளினார். இருவரும் குழந்தையை சீராட்டி வளர்த்தார்கள். பெண்குழந்தைக்கு உரிய பருவம் வந்ததும் அவளுக்கு மணமுடிக்க விரும்பினார் மானக்கஞ்சனார்.

பெருமானிடம்அன்பு கொண்டவர் ஏயர்கோன் கலிக்காம நாயனார். இவர் மானக்கஞ்சறாருடைய மகளின் அழகையும், அவர் தம் குலப்பெருமையையும் கேள்வியுற்று முதியவர்களை அவரையே மணமுடிக்க விரும்பி பேச்சு நடத்தினார். மானக்கஞ் சாறார் முழுமனதுடன் தமது மகளை கலிகாமருக்கு மணமுடிக்க பூரணமாக ஒப்புக்கொண்டார். இரு வீட்டாரும் கலந்து ஆலோசித்து திருமணத்துக்கு நாள் குறித்தார்கள். மணமகள் இல்லத்தில் திருமணத்தை நடத்துவதாக முடிவெடுத்து உறவி னர்கள் புடைசூழ அனைவரும் ஒன்றுகூடினார்கள்.

திருமணத்துக்கு முதல்நாள் கலிக்காம நாயனார் உறவினர் புடைசூழமணமகள் இருக்கும் இடத்துக்கு அருகில் வந்து தங்கி னார்.திருமண நாளன்று எம்பெருமான் அந்தணர் கோலம் தரித்து மானக்கஞ்சாறர் மனைக்கு எழுந்தருளினார். இரண்டு காது களிலும் குண்டலம் தொங்க, கங்கை அணிந்த திருச்சடையோடு ருத்திராட்ச மாலையை சுற்றியிருந்தார்.தோளில் திருநீற்று பையும் மயிர்வடப் பூணூலும், நெற்றி முழுக்க திருநீறு தரிக்க அந்தணார் வடிவில் வந்த எம்பெருமானைக் கண்டு மானக் கஞ்சாறர் மகிழ்ந்து அடியாரை வரவேற்றார்.

அடியாரின் பொற்பாதங்களில் விழுந்து வணங்கி தாங்கள் என்னை நாடி வர என்ன தவம் செய்தேனோ என்று பணிந்தார். அங்கு அலங்கரிக்கப்பட்ட தோரணமும், மங்கள வாத்தியங்களும் கண்ட அடியார் இங்கு என்ன விசேஷக்காரியம் நடக்கி றது என்று வினவினார். உடனே மானக்கஞ்சனார் தமது மகளை அழைத்து வந்து இவளுக்கு மணம் முடிக்கவே இங்கு ஏற் பாடுகள் நடந்துக்கொண்டிருக்கிறது என்று கூறினார்.

அடியாரின் காலில் விழுந்து பணிந்த அத்திருமகளை மங்களம் உண்டாகட்டும் என்று வாழ்த்தினார்.அவளது நெடுசாண் கிடையான கூந்தலை கண்டு நோக்கினார் அடியார். அடர்ந்து கிடந்த இந்த கருங்கூந்தல் எமக்கு கிடைத்தால் எம்முடைய பஞ்சவடிக்கு உதவுமே என்று கேட்டார். தவசிகள் முடியினைக் கொண்டுஅகலமாக பின்னப்பட்டிருக்கும் மார்பில் அணியும் ஒருவகை பூணூல். அந்தணர் வடிவில் வந்த எம்பெருமான் கூந்தலை கேட்டதுதான். மானக்கஞ்சாறர் சற்றும் தாமதிக்கா மல் மனம் மகிழ்ந்து கத்தியொன்றைக் கொண்டுவந்து அமங்கலமான செயல் என்றும் தாமதிக்காமல் தம்முடைய மகளின் கருங்கூந்தலை நொடிப்பொழுதில் அரிந்து அதை அடியாரின் கைகளில் கொடுக்க நினைத்த போது அங்கிருந்த அடியாரைக் காணவில்லை.

வானொளி பேரொளி வீச பரமன் உமையாளுடன் அடியார்க்கு காட்சி தந்து அருளினார். மானக்கஞ்சாறும், அவரது புதல்வி யும் நிலமதில் வீழ்ந்து வணங்கினார்கள். அப்போது விண்ணில் அசரீரி ஒலித்தது. அடியார் மீது நீர் காட்டும் பக்தியை உல கறியச் செய்யவே யாம் இங்குவந்தோம். எப்போதும் எமது அருகில் இருக்கும் பேறை உங்களுக்கு வழங்கினோம் என்றார் கள்.

உற்றார் உறவினர்கள் புடை சூழ நடந்த இந்நிகழ்வை கண்டு களித்தவர்கள் வியப்பில் ஆழ்ந்தார்கள். இச்சமயம் மங்கள வாத்தியங்கள் முழங்க கலிக்காம நாயனார் மணமகள் இல்லம் நோக்கி வந்தார். நடந்ததைக் கேள்வியுற்ற கலிக்காம நாய னார் சிவனுக்காக தமது அழகிய கூந்தலைக் கொடுக்கும் பேறு பெற்றவளை  துணைவியாக பெறுவதைக் கண்டு உள்ளம் மகிழ்ந்தார். மானக்கஞ்சாறின் மகளுக்கும், கலிக்காமருக்கும் மங்கலம் பொங்கும் மனையில் இறைவன் திருவருளோடு சிற ப்பாக திருமணம் நடந்தது.

மார்கழி மாதம் சுவாதி நட்சத்திரத்தில் மானக்காஞ்சார நாயனாரின் குருபூஜை கொண்டாடப்படுகிறது.

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP