அன்பின் வடிவே சாய்பாபா !!

எல்லோரையும்  அரவணைக்கும் சாய்பாபாவின் அன்பை ரோஹிலாவின் மூலமாக  நமக்கு உணர்த்திக் காட்டிருக்கிறார். 

அன்பின் வடிவே சாய்பாபா !!
X

 உயரமாகவும், வாட்ட சாட்டமாகவும், காளையைப் போன்ற வலிமை உடையவனாகவுமுள்ள ரோஹிலா என்பவன் ஷீரடிக்கு வந்தான்.  நீண்ட கம்பளி என்னும் எடை உடை அணிந்திருந்தன். சாய்பாபாவிடமுள்ள அன்பினால் அங்கு தங்கியிருந்தான்.  இரவும் பகலும் திருக்குரானின் பாடல்களை  சப்தமாகவும், குரூரமாகவும் ஒப்பித்து "அல்லாஹோ அக்பர்" என்று கத்துவான்.

 சீரடியின் பெரும்பாலான மக்கள் பகல் எல்லாம் தங்கள் வயலில் வேலை செய்து விட்டு,  இரவு வீட்டிற்குத் திரும்பும் போது ரோஹிலாவின் குரூர   இரைச்சல்களாலும்,   கத்தல்களாலும் வரவேற்கப்படுவார்கள்.    அவர்கள்   தூங்க முடியாமல் மிகுந்த தொல்லையும், அசௌகர்யமும் அடைந்தனர்.  

 மௌனமா  சில நாட்கள் பொறுத்திருந்து, அவர்களால் இனிமேல் படமுடியாது இத்துயரம் என்னும் நிலை வந்தவுடன், சாய்பாபா அணுகி   இதைக்  கவனித்து ரோஹிலாவின் தொந்தரவை நிறுத்தும்படியும் வேண்டிக் கொண்டனர்.  

சாய்பாபா அவர்களின் வேண்டுதல்களைக் கவனிக்க வில்லை.   மாறுபாடாக அவர்களைக் கடிந்தார். அவர்களைத் தங்கள் வேலைகளைக் கவனிக்கும்படியுமாறு  ரோஹிலாவைக் கவனிக்க வேண்டாம் என்றும் கூறினார்.  அவர் மேலும், ரோஹிலாக்கு “ஸாந்திப்பி”  என்னும் மிகவும் கெடுதலான மனைவி ஒருத்தி இருக்கிறாள் என்றும், அவள் உள்ளே வரமுயன்று ரோஹிலாவையும் ,  தம்மையும் தொந்தரவு செய்வதாயும், ஆனால், ரோஹிலாவின் பிராத்தனைகளைக் கேட்டவுடன் அவள் உள்ளே நுழையத் துணியவில்லையென்றும் ஆதலால், அவர்கள் மன அமைதியுடனும், மகிழ்ச்சியுடனும் இருக்கிறார்கள் என்று கூறினார்.  

உண்மையில் ரோஹிலாக்கு ஒரு மனைவியும் கிடையாது. அவனுக்கு மனைவியாக சாய்பாபா குறிப்பிட்டது , துர்புத்தி அதாவது கெட்ட எண்ணங்களாகும்.  ஏனெனில், வேறெதைக் காட்டிலும்  கடவுளிடம் வேண்டிக் கொள்வதிலும், முறையிட்டு பேரிச்சல்கள்  செய்வதையும், சாய்பாபா விரும்பினார்.  ரோஹிலாவின் பக்கம் இருந்து, ரோஹிலாவின் இரைச்சல்களையும், கூக்குரல்களகயும் பொறுத்துக் கொள்ளுமாறும் அவை சீக்கீரம் மறைந்துவிடும் என்றும் கூறினார்.


டாக்டர் வி.ராம்சுந்தரம்.
ஆன்மீக எழுத்தாளர்.

Next Story
Share it